Published:Updated:

நிலத்தில் ஆட்டை மேய்த்ததால் பெண்ணை கொலை செய்த எம்ஏ பட்டதாரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிலத்தில் ஆட்டை மேய்த்ததால் பெண்ணை கொலை செய்த எம்ஏ பட்டதாரி
நிலத்தில் ஆட்டை மேய்த்ததால் பெண்ணை கொலை செய்த எம்ஏ பட்டதாரி

நிலத்தில் ஆட்டை மேய்த்ததால் பெண்ணை கொலை செய்த எம்ஏ பட்டதாரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நிலத்தில் ஆட்டை மேய்த்ததால் பெண்ணை கொலை செய்த எம்ஏ பட்டதாரி

திருப்புவனம் அருகே ஆடுமேய்க்கச் சென்ற பெண்ணை வெட்டி, மூட்டையில் கட்டி தூக்கி வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, ஏனாதி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த லோகம்மாள் (31), முத்துமணி (37) இருவருக்கும் தகராறு நடந்துகொண்டே இருக்குமாம். தகராறு ஒரு கட்டத்தில் முற்றிப் போனதால், நேற்று மதியம் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகச் சொல்கிறது போலீஸ். என்ன நடந்தது என்று போலீஸாரிடம் விசாரித்ததில்,  ''ஏனாதி கண்மாயை ஒட்டி மதுரையைச் சேர்ந்த ஒருவரின் நிலம் இருக்கிறது. அந்த இடத்தில் லோகம்மாள் ஆடு மேய்ப்பதை பலமுறை முத்துமணி தட்டிக்கேட்டிருக்கிறார். இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு ஊர் முக்கியஸ்தர்கள் வரை பஞ்சாயத்து நடைபெற்றது.

இனிமேல் அந்த இடத்தில் ஆடு மேயவிடுவதில்லை என லோகம்மாளும் அவரது குடும்பத்தாரும் வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், நேற்று ஆடுமேய்வதைப் பார்த்த முத்துமணி, லோகம்மாளைக் கழுத்து, முகம் போன்ற பல்வேறு இடங்களில் வெட்டிக் கொலைசெய்து, மூட்டையில் கட்டி கண்மாய்க்குள் வீசியிருக்கலாம் என்று சந்தேப்படுகிறோம். நாங்கள் தேடிப் போனபோது, முத்துமணி வீட்டில் இல்லை. மோப்ப நாயும் அவரது வீட்டுக்குச் சென்றது. ஆகையால், இந்தக் கொலையை முத்துமணிதான் செய்திருக்க வேண்டும் என்று சந்தேகப்படுகிறோம்''  என்கிறது போலீஸ்.

கொலையான லோகம்மாள் தரப்போ, ”முத்துமணி, எம்ஏ வரை படித்துவிட்டு வேலை வெட்டி இல்லாமல் ஊருக்குள் சுற்றித்திரிவார். மதுரைக்காரவுங்க நிலத்தை இவன் பக்குவம் பார்த்து வர்றான். ஆடு மேய்யக்கூடாதுனு சொன்னான். நாங்க மேய்கிறது இல்ல. அப்படி இருந்தும் என் பொண்டாட்டிய பார்த்தியான்னு சம்பவம் நடந்த அன்னைக்குக் கேட்டேன். எனக்கு என்ன தெரியும்னு சொல்லிட்டான். அதோடதான் பூவந்தி போலீஸ்ல புகார் கொடுத்தோம். மோப்ப நாய் வந்து காட்டிய பிறகுதான் கண்மாய்க்குள் சாக்குமூட்டையில கொலைசெய்து கட்டிப்போட்டிருந்தான் முத்துமணினு தெரியவந்தது. அவனை, நாங்க இனி எப்படி விடமுடியும். ஊரைவிட்டே ஓடிப்போயிட்டான்னு சொல்லி அழுது புலம்புகிறது அந்தக்குடும்பம். கொலையான லோகம்மாளுக்கு ரெண்டு மகன்களும் ஒரு பெண்ணும்  இருக்கிறார்கள். இவர்களுக்குத் தாயின் பாசத்தை யார் தருவது'' என்று வேதனை தெரிவித்தனர்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு