Published:Updated:

''அப்புறம் எதுக்குதாங்க ரேஷன் கார்டு'' - கேஸ் மானிய ரத்து மற்றும் ரேஷன் ஆணை தொடர்பாக கொதிக்கும் பெண்கள்! #RationCard #GasPriceSubsidy

''அப்புறம் எதுக்குதாங்க ரேஷன் கார்டு'' - கேஸ் மானிய ரத்து மற்றும் ரேஷன் ஆணை தொடர்பாக கொதிக்கும் பெண்கள்! #RationCard #GasPriceSubsidy
''அப்புறம் எதுக்குதாங்க ரேஷன் கார்டு'' - கேஸ் மானிய ரத்து மற்றும் ரேஷன் ஆணை தொடர்பாக கொதிக்கும் பெண்கள்! #RationCard #GasPriceSubsidy

''அப்புறம் எதுக்குதாங்க ரேஷன் கார்டு'' - கேஸ் மானிய ரத்து மற்றும் ரேஷன் ஆணை தொடர்பாக கொதிக்கும் பெண்கள்! #RationCard #GasPriceSubsidy

ந்தாப்பா தம்பி, இந்தாண்ட வா. என் குடிசைக்குள்ள பாரு... டி.வி பொட்டி, ஃபிரிட்ஜ், வாசிங்மெஷினு எல்லாமே இருக்கு. மாச மாசம் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு கொடுத்து வருச கணக்குல டீவு கட்டி வாங்கினது. இதெல்லாம் இருக்குன்னு சொல்லி, ரேசன் கார்டை ரத்து பண்ணிட முடியுமா... மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த சனங்களுக்கு மோடி சர்க்காரைத் தெரியும். அடுத்த தேர்தல்ல ஜெயிப்பாரானு தெரியாது. ஆனா, ரேசன் கார்டு நான் பொறக்குறதுக்கு முன்னாடியிருந்து இருக்குது. இவரு பாட்டுக்கு வருவாராம்... ஏதோ சட்டம் போட்டு ரேசன் கார்டைப் பிடுங்கிடுவாராம். எங்களைப் பார்த்தா மனுசங்களாத் தெரியலயா? குடிசையில வாழுறவங்க ஃபிரிட்ஜ் வெச்சுக்ககூடாதா? வாசிங்மெஷின் வெச்சுக்ககூடாதா? நாங்களும் மனுசங்கதானே” - ஆவேசமாகப் பேசும் குப்புலெட்சுமி, சென்னை நடுக்குப்பத்தைச் சேர்ந்தவர். 

மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில், தமிழக அரசும் நேற்று இணைந்துள்ளது. இதனால், ரேஷன் பொருள்கள் வாங்குவதில் சில விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில், ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் மேல் சம்பாதிப்பவர்களுக்கும், வீடுகளில் ஃபிரிட்ஜ் வைத்திருப்பவர்களுக்கும் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட மாட்டாது என்பது அந்த விதிமுறை பட்டியலில் ஒரு சாம்பிள். இந்தச் செய்தி மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குமுறலின் ஒரு துளிதான் குப்புலெட்சுமி. 

“வசதி இல்லாமல்தான் இப்படி காவாக்கரை ஓரமா குடிசைப் போட்டு குந்திக்கின்னு இருக்கேன். இதோ பக்கத்து வூட்டுல இருக்கிற பொம்பளைக்கு எட்டு புள்ளைங்க. புருசன் இவளை வுட்டுட்டு வேற ஒருத்திகூட ஓடிப்போயிட்டான். ரேசன் அரிசியை நம்பித்தான் இந்தக் குடும்பமே இருக்கு. இந்த மாதிரி எம்புட்டு சனங்க வாழுதுங்க. வெள்ளம் வந்தப்பவும் எங்க சனங்களை அம்போன்னு உட்டுட்டாங்க, ஜல்லிக்கட்டு போராட்டத்தப்போ வூடு புகுந்து அடிச்சாங்கோ. இப்போ வயித்துலயே கையை வெச்சுட்டாங்க. இனி நாங்க வெசத்த குடிச்சு சாவ வேண்டியதுதான்” - இது, அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சலைப் பாட்டியின் புலம்பல். 

புவனேஸ்வரி என்ற பெண்மணி, ''கோடி கோடியா பணத்தைக் கடத்தறவனும், கொள்ளை அடிக்கிறவனும்தான் இனிமே இந்த நாட்டுல வாழமுடியுமா? அப்பாவி சனங்க நாங்க கிஸ்னாயில குடிச்சுட்டு கூவத்துல போயி விழுந்துடுறோம். டெல்லியிலிருந்து உத்தரவு போட்டாங்கன்னா, இங்கே இருக்கிறவங்களுக்கு புத்தி எங்கே போச்சு? இனிமே அரிசிக்கும் கிஸ்னாயிலுக்கும் நாங்க என்ன பண்ணுவோம்? நாங்க ஃபிரிட்ஜ் வெச்சுப்போம்; ஏ.சி வெச்சுப்போம். ஒருநாளைக்கு நாலு வூட்டுல கை வலிக்க பாத்திரம் தேய்க்கிறோம். உடம்பு வலிக்க உழைக்கிறோம். மாசம் பத்துல இருந்து பன்னிரண்டாயிரம் கெடைக்கும். அப்போ, வருஷத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல கணக்கு வருது. அதுக்காக, இருக்கிறதை அரசாங்கத்துட்ட கொடுத்துட்டு நாங்க என்ன பண்றது? விட்டா இனிமே வீட்ல புள்ளைக இருந்தாலே ரேசன் கார்டு தர மாட்டோம்னு சொல்லுவாங்களோ. பின்ன எதுக்குதாங்க ரேசன் கார்டு” என்று கொதிக்கிறார். 

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் 'காஸ்' சிலிண்டருக்கு மானியம் வழங்குவதை நிறுத்தும் வகையில், அதன் விலையை ஒவ்வொரு மாதமும் நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தைப் படிப்படியாக குறைத்து, 2018 மார்ச் மாதத்துக்குள் மானியத்தை முழுமையாக ரத்துசெய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு குடும்பப் பெண்கள் என்ன சொல்கிறார்கள்? 

சு.சித்ரா, குடும்பத் தலைவி, கோவில்பட்டி

''எங்க வீட்டுல முன்னாடி மண்ணெண்ணெய் அடுப்பில்தான் சமைச்சுட்டிருந்தோம். அப்புறம்தான் கேஸ் சிலிண்டர் பயன்படுத்த ஆரம்பிச்சோம். முதல்ல இருந்த சிலிண்டர் விலையை உயர்த்தி, மானியம்னு கொடுக்குறோம்னு சொன்னாங்க. இப்போ, அதையும் நிறுத்தி கேஸ் விலையயும் உயர்த்தப்போறோம்னு சொல்றாங்க. இது, எங்களை மாதிரி நடுத்தர குடும்பங்களைத்தான் பாதிக்கும். மறுபடியும் மண்ணெண்ணெய்ல சமைக்கிறதைத் தவிர வேற வழியில்லை. இந்த அரசாங்கம் மக்கள்கிட்ட இருந்து எல்லாத்தையும் புடுங்கதான் பார்க்குது. இன்னும் எது எதுக்கெல்லாம் பணத்தைப் பிடுங்கப் போறாங்களோ. நினைச்சாலே பயமா இருக்கு!'' 

முத்துலெட்சுமி, விவசாயி, தஞ்சாவூர்

“முன்னெல்லாம் நாங்க ரேசன் கடைக்குப் போகவே கூச்சப்படுவோம். சொந்தமா நிலம் வச்சிருக்குற நாம எதுக்காக போய் அரசாங்கத்துட்ட கை கட்டி நிக்கணும்னுங்கிற எண்ணம் எனக்கு உண்டு. ஆனா, தண்ணி இல்லாம வானம் பாத்த பூமியா நெலமெல்லாம் வெடிச்சுப் போயி கெடக்குதுங்க. இது காலத்தோட கட்டாயம்னுதான் சொல்லணும். அரிசி விக்குற வெலைக்கும் சீனி விக்குற வெலைக்கும் வெளியில வாங்க கட்டுப்படியாகாத சூழல்ல மணிக்கணக்கா ரேசன்ல வரிசையில நின்னு வாங்கிட்டு வர்றோம். அப்படின்னா விவசாயிங்க எந்த அளவுக்கு வாழ்வாதாரத்த எழந்துருப்பாங்கன்னு இந்த அரசுக்குத் தெரியாமலா போயிருக்கும். 

விவசாயிங்க நாங்க விளைவிக்குற அரிசிய எங்களுக்கு முறையா கொடுக்காம கடையிலபோய் அம்பதுக்கும் அறுவதுக்கும் வாங்க வெச்சிட்டாங்க. இனியும் என்னலாம் பண்ண காத்துட்டு இருக்காங்களோ தெரியல” என்கிறவரின் குரலில் வேதனை வெடிக்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு