Published:Updated:

மருத்துவப்படிப்பை கைவிட்டு பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றிபெற்ற 21 வயதுப் பெண்!

யசோதாரா
News
யசோதாரா

மகாராஷ்டிராவில் தன் மருத்துவ படிப்பை கைவிட்டுவிட்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு 21 வயதுப் பெண் வெற்றி பெற்றுள்ளார்.

மருத்துவப்படிப்பை கைவிட்டு பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றிபெற்ற 21 வயதுப் பெண்!

மகாராஷ்டிராவில் தன் மருத்துவ படிப்பை கைவிட்டுவிட்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு 21 வயதுப் பெண் வெற்றி பெற்றுள்ளார்.

Published:Updated:
யசோதாரா
News
யசோதாரா

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள வத்தி என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட யசோதரா ஷிண்டே (21) என்ற பெண் வெற்றி பெற்று இருக்கிறார். யசோதரா, ஜார்ஜியாவில் எம்.பி.பி.எஸ் படித்துக் கொண்டிருந்தார். அவரை, குடும்பத்தினர் ஊருக்கு வரவழைத்து பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வைத்துள்ளனர்.

இனி அவர் படிப்பை தொடர்வாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், தான் ஆன்லைனில் படித்து தனது மருத்துவப் படிப்பை முடிக்கப்போவதாக யசோதரா தெரிவித்துள்ளார்.

மருத்துவப்படிப்பை கைவிட்டு பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றிபெற்ற 21 வயதுப் பெண்!

இது குறித்து யசோதரா அளித்த பேட்டியில், ``இனி எனது கிராமத்தின் மேம்பாட்டுக்காகப் பாடுபடப்போகிறேன். மாணவர்களுக்கு ஆன்லைன் படிப்புகளை அறிமுகப்படுத்த இருக்கிறேன். பெண்கள் தங்களது சொந்தக்காலில் நிற்க தேவையான திட்டங்களைச் செயல்படுத்த இருக்கிறேன். எங்களது கிராமத்தில் 80% பேர் விவசாயிகள் என்பதால் அவர்களின் நலன் மற்றும் இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுவேன்.

நான், ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் நான்காவது ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்கிறேன். இன்னும் ஒன்றரை ஆண்டு படிக்க வேண்டியிருக்கிறது. எங்களது கிராமத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கிராம மக்கள் விரும்பினர். எனவே, என்னை தேர்தலில் போட்டியிட வைக்க முடிவு செய்தனர். உடனே கிராமத்துக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். மீதமுள்ள படிப்பை ஆன்லைனில் படித்து தேர்ச்சி பெறுவேன்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு பெண்களின் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளேன். அவர்களுக்கு அனைத்திலும் சமபங்கு கிடைக்க முன்னுரிமை கொடுக்கப்படும். அதோடு பெண்கள், ஆண்களை சார்ந்து இருக்காமல் சுயமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமத்தில் கழிவறை கட்டவும், பெண்களுக்கு நாப்கின் எளிதாகக் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.