Published:Updated:

``தன்பாலின ஈர்ப்பு பற்றி காவல்துறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!'' - LGBTQ-களின் குரல்

கல்கி சுப்ரமணியம்

"உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும்கூட தன்பாலின ஈர்ப்பைக் குற்றமாகப் பார்க்கின்றனர். இது குறித்தான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு மட்டுமன்றி தமிழ்நாடு காவல்துறைக்கும் வழங்கவேண்டியது அவசியமாகிறது."

``தன்பாலின ஈர்ப்பு பற்றி காவல்துறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!'' - LGBTQ-களின் குரல்

"உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும்கூட தன்பாலின ஈர்ப்பைக் குற்றமாகப் பார்க்கின்றனர். இது குறித்தான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு மட்டுமன்றி தமிழ்நாடு காவல்துறைக்கும் வழங்கவேண்டியது அவசியமாகிறது."

Published:Updated:
கல்கி சுப்ரமணியம்

சகோதரி அறக்கட்டளையால் ஒருங்கிணைக்கப்பட்ட வானவில் சுயமரியாதை அணிவகுப்பு பேரணி கோவையில் நடைபெற்றது. `LGBTQ' சமூகம் தொடர்பான புரிந்துணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இப்பேரணியில் பலரும் கலந்துகொண்டனர். நிகர் கலைக்குழுவின் பறை இசையுடன் தொடங்கிய பேரணியில் பாலின உரிமை, பாலின சமத்துவம், பாலின விருப்பம் குறித்த பதாகைகள் பேரணியில் பெருமளவில் தென்பட்டன.

வானவில் பேரணி
வானவில் பேரணி

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகம் முதல் வ.ஊ.சி பூங்கா கிழக்கு கேட் வரை நடைபெற்ற இப்பேரணியில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். விழாவின் ஒரு பகுதியாக, குழு விவாதங்கள், கலைக் கண்காட்சிகள் மற்றும் திரைப்படத் திரையிடல்கள் நகரம் முழுவதும் அக்டோபர் முந்தைய மாதங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சகோதரி அறக்கட்டளை மையத்தை நிறுவிய கல்கி சுப்ரமணியம் நிகழ்வில் பங்கேற்றார். அவரிடம் பேசினோம். "2010ல் நடந்த முதல் பேரணியில் 10 திருநங்கைகள் மட்டுமே கலந்துகொண்டோம். தன்பாலின ஈர்ப்புகொண்ட மக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின் 2014-ல் உச்ச நீதிமன்றம் மாற்றுப்பாலினத்தவரை அங்கீகரித்தது. 2018-ல் `தன்பாலின ஈரப்பு குற்றமில்லை' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியது. இதை மகிழ்வுடன் கொண்டாடும் அதேநேரம் மாற்றுப்பாலினத்தவர் குறித்தான மத்திய அரசு கொண்டுவந்த மசோதா எங்களுக்கு முழுவதும் மகிழ்ச்சியளிக்கவில்லை. கோவையில் மிகுந்த போராட்டங்கள் சிரமங்களுக்கிடையேதான் இந்தப் பேரணி நடைபெற்றது.

திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட வானவில் பேரணி
திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட வானவில் பேரணி

இந்தப் பேரணிக்காக அனுமதி வழங்க காவல்துறை தயங்கினர். நம் சமூகத்தில் திருநங்கைகளைப் புரிந்துகொள்கிற மனப்பக்குவம் இன்று பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும்கூட தன்பாலின ஈர்ப்பைக் குற்றமாகப் பார்க்கின்றனர். இது குறித்தான விழிப்புணர்வு பொதுமக்கள் மட்டுமன்றி தமிழ்நாடு காவல்துறைக்கும் வழங்கவேண்டியது அவசியமாகிறது. நான் அறிந்தவரை படிக்கும் இளைய தலைமுறையினர் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். புரிந்துகொள்ள முயற்சி செய்கின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது ஒரு விழிப்புணர்வு பேரணி. குழந்தைகளுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, தாங்கள் வித்தியாசமாக உள்ளோம் என்ற உள்ளுணர்வு ஏற்படும்போது நாம் ஆதரவை அளிக்கவேண்டும். அவர்களின் தனிமையான மனநிலையை மாற்றவேண்டும். குறிப்பாக அவர்களை தற்கொலையிலிருந்து காப்பாற்றுவது முக்கியம். திருநங்கைகள் சொந்த நாட்டில் வசிக்கும் அகதிகள். அவர்களால் ஒருபோதும் ஒரு இடத்தில் வேரூன்றி இருக்க முடியாது. பணி நிமித்தம் அவர்களுக்கு ஆதரவளிக்க நாம் இன்னும் நிறைய முன்னெடுப்புகளை நடத்த வேண்டும்." என்றார் உறுதியான குரலில்.

வானவில் பேரணி
வானவில் பேரணி

மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கபீர் நம்மிடம் பேசுகையில், "இங்கிருக்கும் அனைவரும் மனிதர்கள். அனைவரும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் LGBTQ சமூகத்தினரைப் புரிந்துகொண்டு வருகின்றனர். நம்மை நாமாக வெளிப்படுத்திக்கொள்வது என்பதே மகிழ்ச்சியானது" என்றார்.

"தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு LGBTQ மக்களைப் புரிந்து கொள்ளுதல் என்பது கடினமாக இருக்கிறது. பாலினம் இயற்கையானது. இயற்கையைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டபூர்வமாக LGBTQ அங்கீகரிக்கப்பட்டாலும் மக்கள் இன்றும் முழுமையாக அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை. சில தலைமுறைக்குப் பின்பு அவை மாற்றம்பெரும். அத்தகைய தலைமுறையாக நாம் இருப்போமே" என்று மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் கூறினர்.

கோவையில் நடைபெற்ற வானவில் பேரணி
கோவையில் நடைபெற்ற வானவில் பேரணி

கோவையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான அருண் பாலகிருஷ்ணா பேசுகையில், "LGBTQ என்று தனி சமூகமாகப் பிரிக்கப்படும்போதுதான் இத்தனை கேள்விகள் அவர்களை நோக்கி முன்வைக்கப்படுகின்றன. எனக்கு அத்தகைய பாகுபாடுகள் தெரியவில்லை. ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ காதலிப்பதை இயற்கையாக ஒப்புக்கொள்ளும் சமூகம் தன்பால் ஈர்ப்பாளர்களிடம் மட்டும் இவ்வாறான கேள்விகளை தடைகளாக முன் வைக்கிறது. திருநங்கைகளின் ஆடைகளில் உள்ள வண்ணங்களுக்கும் வித்தியாசங்களுக்கும் காரணம் சிறு குழந்தைக்குப் பரிசு மேல் இருக்கும் ஆர்வம்தான். உரிமை, சுதந்திரம் ஒரு கட்டத்தில் முழுமையாக எடுத்துக்கொள்ளப்படுவதே. அங்கமும் ஆடையும் அவரவர் விருப்பம்" என்றார்.

"எங்கள் பாலினம் எங்கள் உரிமை

எங்கள் காதல் எங்கள் உரிமை

எங்கள் திருமணம் எங்கள் உரிமை

எங்கள் உடை எங்கள் உரிமை

எங்கள் பாலீர்ப்பு எங்கள் உரிமை!"

என்ற குரல்கள் தம்மை கேட்கும் செவிகளுக்காக அந்த வீதியெங்கும் ஒலித்தன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism