Published:Updated:

`பெண்களுக்கான முதல் விண்வெளி நடை!’ - தயாராகும் நாசா

நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருக்கும் கிறிஸ்டினா கோச், இந்த நிகழ்வை வழிநடத்த இருக்கிறார்.

விண்வெளியில் கிறிஸ்டினா மற்றும் ஜெஸிகா
விண்வெளியில் கிறிஸ்டினா மற்றும் ஜெஸிகா

பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விண்வெளி நட, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரத்துசெய்யப்பட்ட நிலையில், அதை அக்டோபர் 21-ல் மீண்டும் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறது நாசா.

இதில் இரண்டு பெண்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த மார்ச் முதல் நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருக்கும் கிறிஸ்டினா கோச், இந்த நிகழ்வை வழிநடத்த இருக்கிறார்.

விண்வெளி உடை
விண்வெளி உடை

கடந்த செப்டம்பர் மாதம் விண்வெளிக்குப் பயணமான ஜெஸிக்கா கோச்சுடன் இந்தப் பயணத்தில் இணைகிறார். 'சோதனை முன்னோட்டமாக நிகழ்த்தப்படும் இந்தப் பெண்கள் விண்வெளி நடையில், முதல்கட்டமாக இரண்டு பெண்கள் மட்டும் பங்கெடுக்க உள்ளனர்' என்று நாசா தரப்பு கூறியுள்ளது.

விண்வெளி நடைப்பயணத்துக்கான சூட் வடிவமைப்பில் குளறுபடி ஏற்பட்டதால், கடந்த முறை நிகழவிருந்த நடைப்பயணம் ரத்துசெய்யப்பட்டது.

“ஒவ்வொரு நபரின் உடல் தட்பவெப்பம் வெவ்வேறாக இருப்பதால் அவர்களுக்கு ஏற்ப ஒரே மாதிரியான உடை தயாரிப்பது என்பது மிகச் சவாலான காரியம்” என்று நாசாவின் விண்வெளி சூட் வடிவமைப்புப் பொறியாளர் அமி ரோஸ் தெரிவித்திருந்தார்.

நாசா
நாசா

இந்த நிலையில் தற்போது, மேல்பாகத்தில் அதிக எடைகொண்ட விண்வெளிக்கான தனி ரக சூட் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து, சூட் வடிவமைப்பு முதல் அனைத்தையுமே பெண்கள் பொறுப்பேற்று நிகழ்த்தும் விண்வெளி நடை, அக்டோபர் மூன்றாம் வாரத்தில் நிகழும் என நாசா அறிவித்துள்ளது.