Published:Updated:

முயற்சி உடையாள் - 5 - ஆயிரத்தில் ஒருத்தி ஆகலாம்...

மாடலிங்கில் மிளிர வழிகாட்டுகிறார் ‘மிஸ் இந்தியா’ அனுகீர்த்தி வாஸ்

பிரீமியம் ஸ்டோரி

மாடலிங்கும் நடிப்பும் மேல்தட்டுப் பெண்களுக்கானது... ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே அங்கு ஜெயிக்க முடியும் என்பது கடந்த பத்தாண்டுகளுக்கு முந்தைய நிலை. இன்று இந்தத் துறைகளின் கதவுகள் சாமானியப் பெண்களுக்காகவும் விரியத் திறக்கப்பட்டிருக்கின்றன. தகுதிகளாகச் சொல்லப்பட்ட அழகு, நிறம், சைஸ் ஜீரோ உடல்வாகு போன்றவற்றைத் தகர்த்து, தன்னம் பிக்கையை மட்டும் மூலதனமாக நம்பி உள்ளே வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித் திருக்கிறது. மாடலிங் துறையில் ஆர்வமுள் ளோர், தங்களை மெருகேற்றிக் கொள்வதற் கான வழிகாட்டுதல்களை வழங்குகிறார், 2018-ம் ஆண்டின் ‘மிஸ் இந்தியா’ அனுகீர்த்தி வாஸ்...

விமர்சனங்களை புறம்தள்ளுங்கள்

`மாடலிங் துறைக்குப் போறவங்க குடும்பத் துக்கு ஏத்த பொண்ணு இல்லை , அரைகுறையா டிரஸ் போடணும், கல்யாணம் ஆகாது...’ என்றெல்லாம் நிறைய விமர்சனங்கள் வரும். மற்றவர்களின் கருத்துகளையெல்லாம் மூளையில் ஏற்றாதீர்கள். எந்தத் துறை வேலையிலும், சில சிரமங்கள் இருக்கும். மாடலிங் துறையும் விதி விலக்கல்ல. குடும்பத்தின் சப்போர்ட் மிக முக்கியம். இந்தத் துறையின் ப்ளஸ், மைனஸை வீட்டாருக்குப் புரியவையுங்கள். நான் மாடலிங் பண்ணப்போகிறேன் என்று சொன்னதும், என் அம்மா சற்று தயங்கினார். விளக்கிச் சொல்லிப் புரிய வைத் தேன். என் புகைப்படங்கள் சமூக வலைதளங் களில் பரவ ஆரம்பித்தபோது உறவினர்களின் விமர்சனங்களால் சிரமப்பட்டேன். ஆனாலும் சோர்வடையாமல் நான் செய்த முயற்சிகள் எனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தன. தெளிவான இலக்கும், விடா முயற்சியும் நிச்சயம் உங்களை உயர்த்தும்.

அனுகீர்த்தி வாஸ்
அனுகீர்த்தி வாஸ்

பாதுகாப்பு முக்கியம்

ஷூட்டிங்குக்காக தினம் புதுப்புது இடங் களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அறிமுகம் இல்லாத நபர்களைச் சந்திக்க நேரிடும். எனவே முதலில் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுங்கள். எந்த புராஜெக்ட்டில் கமிட் ஆனாலும், ஷூட்டிங் நடக்கும் லொகேஷனை முன்பே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. யார் மூலம் வாய்ப்பு வந்திருந்தாலும், அவர்கள் சொன்ன தேதியில், இடத்தில் உண்மையில் ஷூட்டிங் நடக்கப்போகிறதா என்பதை க்ராஸ் செக் செய்துகொள்ளுங்கள். இரவுநேர ஷூட் எனில் வீட்டில் இருப்பவர்களை துணைக்கு அழைத்துச் செல்லுங்கள். தனி யாகச் செல்ல வேண்டிய சூழலில் அந்த இடத்தின் முகவரியை வீட்டில் இருப்பவர்களுக்கு ஷேர் செய் யுங்கள். பெர்சனல், புரொஃப ஷனல் என இரண்டு தொடர்பு எண்களை வைத்துக் கொள்ளுங்கள். புரொஃபஷனல் எண்ணை மட்டும் வெளியிடங்களில் பகிர்வது நல்லது. ஷூட் முடிந்தபிறகு வீடு திரும்ப, போக்குவரத்து வசதி இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். ஆடை மாற்றும் அறையில், துவாரங்களில் கேமரா இருக்கிறதா என்பதை கவனியுங்கள். ஓரளவு வளர்ந்ததும் உங்களுக்கென ஒரு மேனேஜரை நியமித்து அவர்கள் மூலம் கமிட் ஆவது கூடுதல் பாதுகாப்பு.

திறமைக்கு மட்டுமே மரியாதை!

நான் என் கரியரை நேரடியாக `மிஸ் இந்தியா' போட்டியில் இருந்து தொடங்கினேன். `மிஸ் இந்தியா' பட்டம் பெற்றதும் மாடலிங் செய்யாமலே என் அடையாளம் வெளியே தெரிய ஆரம்பித்தது. `மிஸ் இந்தியா' நடத்திய நிறுவனமே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாடலிங் கான்ட்ராக்ட் கொடுத்ததால் நான் பெரிய ஏமாற்றங்களை சந்திக்கவில்லை. ஆனால், சிலர் பணத்திற்காக உங்களை ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது. அட்ஜஸ்ட் மென்ட் செய்தால்தான் வாய்ப்பு என்பவர்களை விலக்கிவையுங்கள். மற்ற துறைகளைப் போலவே மாடலிங்கும் திறமைக்கு முக்கியத்துவம் தரும் ஒரு துறையே.

வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம்!

மாடலிங்தான் உங்கள் கரியர் என்று முடிவெடுத்து விட்டால் போட்டோஷூட் செய்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றுங்கள். தொடர் பதிவுகள் உங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும். மாடலிங்கில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு வாய்ப்பும் முக்கியம். அதே நேரம் எந்த பிராண்டுக்கு கமிட் ஆகிறீர்கள், அந்த பிராண்டுக்கு மக்கள் தரப்பில் இருக்கும் வரவேற்பு என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு தேர்வு செய்யலாம்.

முயற்சி உடையாள் - 5 - ஆயிரத்தில் ஒருத்தி ஆகலாம்...

நோ சொல்லத் தயங்காதீர்கள்!

‘உலக அழகிப் போட்டியில பிகினி டிரஸ்ல ராம்ப் வாக் பண்ணீங்களா’ என என்னிடம் பலர் கேட்டதுண்டு. அழகிப்போட்டி யில் பிகினி உடைக்கான சுற்றை நீக்கி பல வருடங்கள் ஆகின்றன. ஆனால், மக்கள் மனநிலை இன்னும் மாற வில்லை. மாடலிங் என்றாலே கிளாமர் என அர்த்தமில்லை. உங்கள் உடல், உங்கள் உரிமை என்பதில் தெளிவாக இருங்கள். உங்களுக்கு வசதி இல்லாத உடைகளை அணியச் சொன்னால் தயங்காமல் ‘நோ’ சொல்லுங்கள். டிரெடிஷனல் உடைகள் அணிந்தும் மாடலிங் செய்ய முடியும்.

ஆரோக்கியத்தில் இருக்கட்டும் அக்கறை!

என்னுடைய மாநிற சருமத்தை நினைத்து சின்ன வயதில் நானும் வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால், இப்போது ப்ளஸ் சைஸ் மாடல், டார்க் ஸ்கின் மாடல் என வெவ்வேறு பிரிவு களில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். எனவே மாடலிங்கில் நுழைய நிறமோ, உடல்வாகோ தடையாக இருப்பதில்லை. மாடலிங்கில் நுழைந்த பிறகு இரவு , பகலாக ஷூட்டிங் இருக்கும். சரியான தூக்கம், சாப்பாடு இல்லாமல் வேலை செய்தால் உங்கள் தோற்றமே கெட்டுப்போகும். ஆரோக்கிய மான உணவு, தினம் எட்டு மணி நேர தூக்கம், உடற்பயிற்சி முக்கியம். சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திலும் அக்கறை இருக்கட்டும்.

பக்கா ப்ளானிங் முக்கியம்!

ஒரு ஷூட்டில் கமிட் ஆகும் போதே, எந்த மாதிரியான உடை, என்ன நிறம், வேறு எதையெல்லாம் உங்கள் தரப்பில் இருந்து கொண்டு வர வேண்டும் என்பதை லிஸ்ட் எடுத்து, அவற்றை எல்லாம் முன்பே தயார் செய்து கொள்ளுங்கள். ஷூட் நடக்கும் தினம் ‘அது இல்லை, இது இல்லை’ என அடுத்தவர்களை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக் காதீர்கள். உங்களின் சின்ன அலட்சியம், ஒட்டுமொத்த டீமையும் பாதிக்கும். உங்கள் மீதான நல்ல அபிப்ராயத் தையும் கெடுக்கும். அதற்கு இடம்கொடுத்துவிடாமல் அலர்ட் ஆக இருங்கள்.

- சாதிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு