திருநங்கைகள், திருநம்பிகள் உட்பட எல்ஜிபிடி சமூகத்துக்கே பெற்றோர்களின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை. ஆகவே, `உங்கள் குழந்தைகளுடன் உரையாடுங்கள்' என்று அதன் முக்கியத்துவம் பகிர்கிறார், மகிளா காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளரான அப்ஸரா ரெட்டி.

‘`உலகம் எங்களைப்போன்ற குழந்தைகளைப் பார்த்து, ‘நீங்கள் மதிப்புக்குரியவர்கள் அல்லர்’ என்று கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கிறபோது, பெற்றோர்களின் அரவணைப்பு மட்டும்தான் எங்களைக் காப்பாற்றக்கூடிய ஒரே அருமருந்து. இது கிடைத்தால்போதும், வீட்டை விட்டு வெளியே போகவேண்டிய அவசியம் வராது. எங்களைப் போன்ற குழந்தைகளும் நன்றாகப் படிக்கலாம், ஜெயிக்கலாம், சாதிக்கலாம். வீட்டார் எங்களைப் புறக்கணிக்கவில்லை என்றால், வீட்டுக்குரிய பொறுப்புகளை நாங்களும் நிறைவேற்றலாம்.

என்னுடைய சின்னவயது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. அப்பாவுடன் அவ்வளவு நெருங்கிப் பழகவில்லை. என் அம்மாதான் எனக்கு சூப்பர் ஹீரோ. நான் பெண்ணாக மாற வேண்டும் என்று நினைத்தபோது, அம்மாவும் நானும் நிறைய அழுதோம்; பேசினோம்; மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றோம். ‘என்ன ஆனாலும் நீ என்னுடைய குழந்தை’ என்றார் அம்மா. அவரின் ஆதரவுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது.

ஒருவரின் வெற்றிக்கு அவரது திறமைதான் முக்கியம். அதோடு, ஆரோக்கியமான குடும்பச் சூழல் அமையும்போது வெற்றி இரண்டு மடங்காகும் என்பது நிச்சயம்.

திருநங்கைகளை இந்தச் சமூகம் இன்னமும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. பெற்றோரே புறக்கணித்துவிட்டால், வெளியில் எப்படி ஆதரவு கிடைக்கும்? ஒருவேளை சாப்பாட்டுக்கே கையேந்தவேண்டிய சூழ்நிலை வரும். சாலையோரங்களில்தான் வசிக்கவேண்டிவரும்.

உழைக்கலாம் என்று நினைத்தாலும் எங்களுக்கு எடுத்ததும் யாரும் வேலை கொடுப்பது கிடையாது. பெற்றோரின் அரவணைப்பு இருந்தால், ஏன் இந்த அவலநிலை ஏற்படப் போகிறது? அதனால்தான் வேண்டுகிறோம்... எங்களைப் போன்ற குழந்தைகளையும் புரிந்துகொள்ளுங்கள். மனம்விட்டுப் பேசுங்கள்’’ என்கிறார் அப்ஸரா.