Published:Updated:

"10 ஊசி போட்டு மயங்க வச்சு கருமுட்டை எடுப்பாங்க" - `உடைத்துப் பேசுவோம்' தொடரில் பகிர்ந்த பெண்

கருமுட்டை தானம்

கருமுட்டை தானத்துக்காக வயிற்றுக் கீழே பத்து ஊசி வரைக்கும் போடுவாங்க. அதனால 2, 3 நாளைக்கு வயிறு வலி அதிகமா இருக்கும். உடம்பும் அசதியா இருக்கும்!

"10 ஊசி போட்டு மயங்க வச்சு கருமுட்டை எடுப்பாங்க" - `உடைத்துப் பேசுவோம்' தொடரில் பகிர்ந்த பெண்

கருமுட்டை தானத்துக்காக வயிற்றுக் கீழே பத்து ஊசி வரைக்கும் போடுவாங்க. அதனால 2, 3 நாளைக்கு வயிறு வலி அதிகமா இருக்கும். உடம்பும் அசதியா இருக்கும்!

Published:Updated:
கருமுட்டை தானம்

ஆனந்த விகடன் யூடியூப் தளத்தில் 'உடைத்துப் பேசுவோம்' என்கிற தலைப்பில் திருநங்கை நேஹா எளிய மனிதர்களையும் அவர்களுடைய பிரச்னை குறித்தும், இந்த சமூகத்தில் அவர்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் பேட்டி எடுத்து வருகிறார். அந்த வரிசையில் கருமுட்டை தானம் செய்யும் 29 வயது பெண் ஒருவருடனான கலந்துரையாடலில் இருந்து...

கருமுட்டை தானம்
கருமுட்டை தானம்

என் பெயர் அபிராமி. இதுவரைக்கும் நான் எந்த வேலைக்கும் போனதில்லை. என் கணவருடைய சம்பளம் எங்க குடும்பத்துக்கு போதுமானதாக இல்ல. எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. அவங்களுக்காக சேமிச்சு வைக்க, எங்ககிட்ட எதுவுமே இல்ல. எங்க குடும்ப சூழல் தெரிஞ்சுகிட்டு எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிறவங்க கருமுட்டை தானத்துக்குக் கூப்பிட்டாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் கருமுட்டையை எடுத்து அவங்களுக்கு வச்சா யாரும் குழந்தை இல்லைன்னு சொல்லி அவங்களைக் காயப்படுத்த மாட்டாங்கதானே? அதனால தான் அதுக்கு சம்மதிச்சேன். என் குடும்ப சூழலுக்காக கருமுட்டை தானம் கொடுக்கலாம்னும் முடிவெடுத்தேன். ஒரு தடவை கருமுட்டை தானம் பண்ணினா 30,000 ரூபாய் கொடுப்பாங்க. என்னை கூட்டிட்டு போகிறவங்க அதுல பாதி காசை எடுத்துட்டு மீதியைக் கொடுப்பாங்க. இவ்வளவு தான் கொடுத்தாங்கன்னும் சொல்லுவாங்க.

கருமுட்டை தானம்
கருமுட்டை தானம்

கருமுட்டை தானத்துக்காக வயிற்றுக்குக் கீழே பத்து ஊசி வரைக்கும் போடுவாங்க. அதனால 2,3 நாளைக்கு வயிறு வலி அதிகமா இருக்கும். உடம்பும் அசதியா இருக்கும். என் கணவருக்கு நான் கருமுட்டை தானம் கொடுக்கிற விஷயம் தெரியாது. தெரிஞ்சா அவர் ரொம்ப கஷ்டப்பட்டு அழுவார். என் வலி என்னை மட்டும் சேரட்டும்னு அவரை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைப்பேன். அதனால என் வலியை வெளிக்காட்டிக்க மாட்டேன்.

இதுவரை ரெண்டு முறை கருமுட்டை தானம் பண்ணியிருக்கேன். முப்பது வயசுக்குள்ள பத்து தடவைகூட கருமுட்டையை தானமா கொடுக்கலாம்னு நினைக்கிறேன். எப்போவாச்சும் வீட்ல யாரும் இல்லாதப்ப நம்மளை நல்லா பார்த்துக்க ஆளில்லைன்னு பல விஷயங்கள் மனசுல ஓடும். கதவை மூடிட்டு அழுவேன்!'

கருமுட்டை தானம்
கருமுட்டை தானம்

இன்னும் கருமுட்டை தானம் குறித்து பல விஷயங்களை இவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism