தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அவள் 25... அவர்கள் 25! - ஒரு சர்ப்ரைஸ் திட்டம் - புதிய பகுதி 1

அவள் 25... அவர்கள் 25!
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் 25... அவர்கள் 25!

புதிய தொழில்முனைவோர்களுக்குப் பயன்தரும் காலத்துக்கு ஏற்ற புதிய தொழில் வாய்ப்புகள் பல.

நம் முந்தைய தலைமுறைகளில் படிப்பு முடித்ததும் வேலை, கால் காசு ஆனாலும் கவர்ன்மென்ட் காசு என பலருக்கும் வேலைவாய்ப்புதான் சம்பாத்தியத் துக்கான இலக்காக இருந்தது. ஆனால், இன்றைய தலைமுறையில் சிறு, குறு தொழில்கள் தொடங்கி, ஸ்டார்ட்அப் வரை தொழில்முனைவோராகும் எண்ணத்தையும் இலக்கையும் உருவேற்றிக் கொள்பவர்கள் பலர். குறிப்பாக, கடந்த 25 வருடங்களில் தொழில்முனைவோராகக் களத்தில் இறங்கி, வெற்றிமுகம் காட்டிய பெண் களின் எண்ணிக்கையை நாடே உற்றுப்பார்க்கிறது.

நம் சமூகத்தில் பொருளாதார ரீதியாக, தான் மட்டும் உயராமல், தன்னைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பதுடன், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் காரணமாக இருப்பவர்தான் தொழில் முனைவோர். ‘வரப்பு உயர நீர் உயரும்’ என்பதைப்போல தொழில்துறையில் ஒரு தொழில்முனைவோரால் பல தரப்பினரும் பயன்பெறுகின்றனர்.

அவள் 25... அவர்கள் 25! - ஒரு சர்ப்ரைஸ் திட்டம் - புதிய பகுதி 1

சரி, தொழில்முனைவோராக என்ன தேவை?

* துணிச்சலான முடிவெடுக்கும் திறன்

* புதுமையாக யோசிக்கும் திறன்

* முன்திட்டமிடல்

* விசாலமான பார்வை; சிந்தனை

* எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல்

*நமக்கான வளங்களைத் திட்டமிடுதல்

*பணத்தையும் தொழிலையும் பெருக்கும் உத்தி

* சிக்கல்களையும் சவால்களையும் கையாளும் திறன்

* கூட்டு உழைப்பு

* காலநேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல்

இந்த அடிப்படைத் திறன்களுடன் எங்கும் எதிலும் நாணயமாக இருந்தால், நாம் விரும்பும் வரை ரிட்டயர்மென்ட் என்பதே இன்றி, சொந்தக்கால்களில் நின்று வெற்றிக்கொடி நாட்டலாம்.

மக்கள் தொகையில் பெண்கள் சரிபாதி இருந்தாலும், இந்தியாவில் உழைக்கும் பெண் கள் 21 சதவிகிதத்தினர் மட்டுமே. கல்வியில், தொழில்துறையில், தலைமைப் பொறுப்புகளில் அவர்களின் முழுத்திறனும் பிரகாசிப்பதில்லை என்பதுதான் யதார்த்தம். இன்னும் பெரும்பாலான பெண்களோ, வீட்டுக் குள்ளேயே நேரத்தையும் சுயத்தையும் கரைத்துக்கொண்டிருக்கின்றனர். அத்தகை யோரில், தங்களின் கூட்டைத் தாண்டி பறப்பதற்கான வாய்ப்பை நோக்கிக் காத்திருக் கும் பெண்களின் பிசினஸ் கனவுக்கு சிறகு தருவதே இந்த ‘அவள் 25... அவர்கள் 25!’ திட்டத்தின் நோக்கம். இது, அவள் விகடன் 25-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஓர் அங்க மாக முன்னெடுக்கப்படுகிறது.

தொழில் செய்யும் ஆர்வம் இருந்தும் அதற் கான வாய்ப்பும் வழிகாட்டுதலும் இல்லாத பெண்களை வாழ்த்தி வரவேற்பதுடன், உங்களுக்கு ஏற்ற தொழில்களைத் தேர்வுசெய்து கொடுப்பது, தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், பயிற்சி, வங்கிக் கடனுதவிக்கு உதவுவது என அனைத்துச் செயல்பாடுகளுக்கும் வழிகாட்டப்போகிறது இந்தத் திட்டம்.

இதில் பயனாளர்களைத் தேர்வு செய்வதில் தொடங்கி, உங்களுக்கான எல்லா சந்தேகங்களுக்கும் முழுமை யாகத் திசைகாட்டுவது வரை அவள் விகடனுடன் கரம்கோக்கிறார், திருச்சி யைச் சேர்ந்த ‘சி.ஆர்.பிசினஸ் சொல் யூஷன்’ நிறுவனத்தின் நிர்வாகியும் தொழில் ஆலோசகருமான ராமசாமி தேசாய்.

புதிய தொழில்முனைவோர்களுக்குப் பயன்தரும் காலத்துக்கு ஏற்ற புதிய தொழில் வாய்ப்புகள் பல. அவை குறித்து அவள் விகடனின் இந்த 25-ம் ஆண்டுச் சிறப்பிதழுடன் வெளியாகியிருக்கும் இணைப்பிதழ் உங்களுக்கு வழிகாட்டும். இதனுடன், தொழில்துறையில் அடியெடுத்து வைப்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய, அரசின் வங்கிக் கடனுதவி திட்டங்கள் மற்றும் இந்த ‘அவள் 25... அவர்கள் 25’ திட்டத்துக்கான கூடுதலான விவரங்களை அடுத்த இதழில் பார்க்கலாம்...

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

குறிப்பு: இந்தத் திட்டம் குறித்தும், தொழில் முனைவோராவதில் உங்களுக்கு இருக்கும் தயக்கம் முதல் சந்தேகங்கள் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அவசியமான கேள்விகளுக்கு விளக்கம் தரப்படும்.

உங்களின் கேள்விகளை, ‘avalvikatan@vikatan.com’ என்ற மெயில் ஐ.டி மற்றும் Aval Vikatan ஃபேஸ்புக் பக்கத்தின் இன்பாக்ஸிலும் அனுப்பலாம். இந்தக் கட்டுரையை ஆன்லைனில் படிப்பவர்கள் கமென்ட் செக்‌ஷனிலும் குறிப்பிடலாம்.

தபால் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி

‘அவள் 25... அவர்கள் 25!’
அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.