‘‘ஏறுற விலைவாசியில நகை, நட்டு, சீர், செனத்தின்னு செஞ்சு, பெத்த பொண்ணை ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுக்கறதுக்குள்ள நம்ம ஜீவன்ல பாதி கரைஞ்சுடுது. இதுவே ஒரு பையனா பொறந்திருந்தா எனக்கு இந்தக் கலக்கம் வந்திருக்குமா?’’ - இப்படி பெருமூச்செறியும் அம்மாக்களைத்தான் நமக்குப் பழக்கம். ஆனால்...

‘‘மகனுக்குக் கல்யாண வயசு வந்திருச்சு. காத்திருக்கற செலவை நெனைச்சா ராவுக்குத் தூக்கம் வர மாட்டேங்குது. ரெண்டு பையனை பெத்ததுக்கு நாலு பொண்ணுங்களை பெத்திருந்தாலாச்சும் மகாராணி மாதிரி வாழ்ந்திருக்கலாம்!’’

- இப்படி அங்கலாய்க்கும் அம்மாக்கள் நமக்குப் புத்தம் புதுசுதானே? ஆம்... நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகில் உள்ள ஆறுகாட்டுத்துறை கிராமத்தில்தான் இந்த வித்தியாச புலம்பல்.

சிலுசிலுக்கும் கடல் காற்றுக்கு கருவேல மரங்கள் தலையசைக்க, புழுதிப் புகைக்கு நடுவே வரிசை கட்டி வரவேற்கின்றன வீடுகள். நாம் போய் இறங்கிய காலை நேரத்தில் ஆண்கள் பலரும் கடல் தொழிலுக்குச் சென்றிருக்க, ஊரிலிருந்த பெண்கள் நம்மை புன்னகை பூசிய முகத்துடன் வரவேற்கிறார்கள்.

‘‘எங்க ஊர்ல எத்தனை பொண்ணுங்க பொறந்தாலும் பெத்தவங்க கவலைப்பட மாட்டோம்ங்க. ஏன்னா, இங்க வரதட்சணைங்கற பேச்சே இல்ல’’ என்று அறிமுகம் தந்து ஆரம்பித்த துர்காவுக்கு நான்கு பெண்கள்.

‘‘அதே நேரம் பையன்களைப் பெத்தவங்க பாடு கொஞ்சம் திண்டாட்டம்தான்! ஏன்னா, இருக்கற ஒரே செலவான கல்யாணச் செலவு, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களோடது. கல்யாணத்துக்கு அப்பறம் தனிக்குடித்தனம் வைக்கறது, குழந்தை பொறந்தா முறை செய்யறதுன்னு எல்லாமே அவங்கதான்! அதனாலதான், நாலு பொண்ணுங்க வெச் சிருக்குற அம்மாவான நான் இப்படி தெம்பா பேசுறேன்’’ என்று கலகலவென துர்கா சிரிக்க...

‘‘எங்களுக்கும்கூட நாலு பொண்ணுங்க தான்’’ என்று உற்சாகம் ஊற்றிப் பேசினார்கள் நடராஜன் - பத்ரகாளி தம்பதி.

‘‘எங்க ஊரைப் பொறுத்தவரைக்கும், கல்யாணத்துக்குப் பொண்ணைப் பெத்தவங்க தானா விருப்பப்பட்டு ஏதாவது போடுறதுனா போடலாம். போடாமலும் இருக்கலாம்! வெறும் தோடு, மூக்குத்தியோட பொண்ணை அனுப்பறவங்க இருக்காங்க. அதுவும் முடியாம வெள்ளிக் கொலுசு மட்டும் போட்டு கட்டிக் கொடுக்கறவங்க இருக்காங்க.

அவ்வளவு ஏன்... கை விளக்கு மட்டும் வாங்கிக்கொடுத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்தவங்களையும் நான் பார்த்திருக்கேன்’’ என்று நடராஜன் அடுக்க, தொடர்ந்தார் பத்ரகாளி.

‘‘இதுவரைக்கும் எங்க ஊர்ல எந்த வீட்டுல யும் கேஸ் ஸ்டவ் வெடிச்சதில்ல. `மாமியார் திட்டறாங்க'ன்னு எந்தப் பொண்ணும் கண்ணைக் கசக்கிக்கிட்டு பிறந்த வீட்டுக்கு வந்து நின்னதில்லை. ‘இவங்க வீட்டுப் பையனுக்கு இத்தனை பவுனு கேக்கறாங்களாம்’னு அக்கம் பக்கத்துல யாரும் பேசி காதால கேட்டதில்ல. பொண்ணைப் படிக்க வெச்சி, ஒழுக்கமா வளர்க்கறதைத் தவிர வேற எந்தக் கவலையும் எங்களுக்கு இல்ல. நாலு பொண்ணுங்கள்ல நாங்க ஒரு பொண்ணை கட்டிக் கொடுத்திருக்கோம். இன்னும் மூணு பொண்ணுங்க இருக்காங்க. கல்யாணம் எப்ப எப்பன்னு காத்துட்டிருக்கோம்’’ - காதுக்கு நிறைவாக இருக்கின்றன அவர் சொன்ன வார்த்தைகள்.

அதற்குள் வெயில் உச்சிக்குச் சென்றிருக்க, மீன் குழம்பும் சுட்ட கருவாட்டு வாசனையும் நம் நாசியைத் துளைத்தது. ‘‘வந்து ஒரு வாய் சாப்புடுங்க’’ என்று விருந்தோம்பியபடியே நம்மிடம் பேசினார் சுந்தரம்.

‘‘அக்கம்பக்கத்து ஊர்க்காரங்க எல்லாம் எங்க ஊரை ‘சின்ன சிங்கப்பூர்’னுதான் சொல்லுவாங்க. அந்த அளவுக்கு உழைப்புக்குப் பேர்போனவங்க நாங்க. ‘உழைச்சு சாப்பிடுறதுதான் மரியாதை. பொண்ணு வீட்டுல இருந்து சீதனம் கொண்டுவரச் சொல்லி, அதுல உக்காந்து சாப்பிடறவன் மனுஷன் இல்லை’னு எங்க பாட்டன், முப்பாட்டன்லாம் எங்களுக்கு வாயால சொல்லி வளர்க்கல... வாழ்ந்து காட்டுனாங்க.

நம்மள நம்பி வர்ற பொண்ணை நல்லபடியா வெச்சு வாழணும். அதுதான் நமக்குப் பெருமை. நான் சொல்றது சரிதானே ஆத்தா...’’ என்று அவர் வெற்றிலை மென்று கொண்டிருந்த பூமாலைக்கண்ணி பாட்டியிடம் சென்று முடிக்க... தொடர்ந்தார் அவர்.

‘‘எனக்கு மூணு பொண்ணுங்க, அஞ்சு பசங்க தாயி. என்னைய என் வீட்டுக்காரரு கட்டிட்டு வந்த மாதிரியே என் பொண்ணுங்களையும் மாப்பிள்ளையா வந்த மகராசனுங்க செலவு வைக்காம கட்டிட்டுப் போயிட்டாங்க. பையனுங்களுக்குத்தான் கல்யாணம், பந்தி, சொத்து பிரிச்சுக் கொடுக்கறது, வீடு பார்த்து குடி வைக்கறதுன்னு ஏகப்பட்ட செலவுகளும் பொறுப்புகளும். எப்படியோ சிரமப்பட்டு அஞ்சு பையன்களுக்கும் கல்யாணம் பண்ணி தனித்தனியா குடி வெச்சிட்டேன். இனிமே எனக்கு நிம்மதிதான். இனி அதுக பொண்டு, புள்ளைகளோட, சேமிச்சு, சிக்கனமா வாழறதைப் பார்த்தே காலத்தை ஓட்ட வேண்டியதுதான்’’ - பெருமூச்சுடன் சொல்லி முடித்தார் பாட்டி.

அந்தி மயங்கிக்கொண்டிருக்க, எதிர்பட்ட இளம்பெண்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

‘‘பொதுவா பெண்களுக்குப் பெண்கள்தான் எதிரின்னு சொல்வாங்க. இங்கே எந்த மாமியாரும் வரதட்சணையோடு வரலை. அதனால வர்ற மருமகள்கள்கிட்டயும் அவங்க அதை எதிர்பார்க்கலை. வெளியூர்லயிருந்து இங்க பொண்ணு கேட்டு வர்றவங்கதான் ஏதாவது எதிர்பார்ப்போட வருவாங்க. அதையும் கொடுக்க முடியாம இல்ல... இந்த நல்ல பழக்கம் மாறிப் போயிடக்கூடாதேங்கற அக்கறையிலயே எங்க ஊர்ல பலரும் அந்தச் சம்பந்தங்களைத் தவிர்த்து, பொண்ணை உள்ளூர்லயே முடிச்சுடுவாங்க. அதேமாதிரி, இந்தப் பழக்கத்துக்காகவே வெளியூர்ல இருந்து இங்க தேடிவந்து பொண்ணு கொடுக்கறவங்களும் இருக்காங்க!’’ - மங்கையராகப் பிறந்த மாதவம் வழிந்தது அவர்களின் வார்த்தைகளில்!

(2008 ஜூலை 4)