Published:Updated:

புதிய பகுதி! - 1: அவள் பதில்கள்!

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

#Utility

என் குரல் நன்றாக இருப்பதாகப் பலரும் பாராட்டுவார்கள். எனக்கும் சினிமா, டி.வி நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்க ஆசை. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக என்ன செய்ய வேண்டும்?

- மோனிஷா, செங்கல்பட்டு

பதில் அளிக்கிறார் டப்பிங் கலைஞர் கீர்த்திகா உதயா. இவர் கீர்த்தி சுரேஷ், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், லட்சுமி ராய் உள்ளிட்ட பலருக்கும் டப்பிங் பேசி வருபவர்.

``சினிமா மற்றும் சீரியல் ஆகியவற்றில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக வேண்டும் என்றால், சென்னையில் இயங்கிவரும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் உறுப்பினராகி, கார்டு பெற்றிருக்க வேண்டும். இந்த உறுப்பினர்கள் மட்டுமே இவற்றில் டப்பிங் பேச அனுமதிக்கப்படுவார்கள். டி.வி விளம்பரங்கள், டாகுமென்ட்டரி, குறும்படங்கள் போன்றவற்றில் யார் வேண்டுமானாலும் டப்பிங் பேசலாம். யூனியன் உறுப்பினர் கார்டு பெறுவதற்கான கட்டணம் ஒன்றரை லட்ச ரூபாய்.

புதிய பகுதி! - 1: அவள் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

யூனியனில் இருக்கும் கோ ஆர்டினேட்டர்கள் தான் சினிமா படங்கள், சின்னத்திரை தொடர்கள் என அனைத்துப் படப்பிடிப்புகளைப் பற்றிய அப்டேட்டுகளுடன் தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பார்கள். ஹீரோ, ஹீரோயின், வில்லன், வில்லி, சின்ன கேரக்டர், கூட்டத்தில் ஒருவராகப் பேச என எப்படிப்பட்ட குரல் வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு, அதனடிப்படையில் உறுப்பினர் அட்டை வைத் திருப்பவர்களை அனுப்பி வைப்பார்கள்.

புதிய பகுதி! - 1: அவள் பதில்கள்!

பெரிய கேரக்டர்களுக்கு டப்பிங் பேச யூனியன் நிர்ணயித்திருக்கும் சம்பளத் தொகை 19,000 ரூபாய். இரண்டாம்கட்ட ஹீரோ, ஹீரோயின்களுக்கு 7,000 முதல் 10,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதிகபட்சமாக 3 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். அது அவர்களுடைய பிரபலம், அனுபவம் உள்ளிட்டவற்றைப் பொறுத்தது.

புதிய பகுதி! - 1: அவள் பதில்கள்!

டப்பிங் கலைஞர்களாக விரும்புபவர் களுக்கு நிறைய பயிற்சிகள் தேவை. நன்றாக நடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் இயக்குநர் எதிர்பார்க்கும் உணர்வுகளைக் குரலில் கொண்டுவர முடியும். தங்கள் குரலில் பலவிதமாகப் பேசிப் பதிவுசெய்து, அதை கோஆர்டினேட்டர்களிடம் கொடுத்து வைக்கலாம். டிவியை ஆன் செய்து ஆடியோவை மியூட் செய்து விட்டு, அந்தக் காட்சியில் அந்த கேரக்டர் பேசியிருப்பதைப்போல் பேசிப் பழகலாம். புதிய, வித்தியாசமான குரல்களுக்கான தேவை எப்போதும் நிறையவே இருக்கிறது. வாழ்த்துகள்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவள் நான். அதன் பிறகு கூந்தல் உதிர்வு கடுமையாக இருக்கிறது. இது நிரந்தரமாகிவிடுமோ என பயமாக இருக்கிறது. முடி உதிர்வை நிறுத்த முடியுமா?

- சி.மாலினி, கோவை

பதில் தருகிறார் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம், சென்னை.

ஒருவர், ஒரு நாளைக்கு 100 முடிகள் வரை இழப்பது சாதாரணமே. அதேபோல, கோவிட் 19 தொற்றுக்குப் பிறகு, ஏற்படும் கூந்தல் உதிர்வு தற்காலிகமானதே. உடல் இயல்புநிலைக்குத் திரும்பியதும் அது சரியாகிவிடும். கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் முடி உதிர்வுக்கு காரணமாக அமையலாம். அதனால், நிறைய காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள், நட்ஸ், கீரை போன்றவற்றைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய நீர் அருந்த வேண்டும். முடி உதிர்வை நினைத்துக் கவலைப்படுவதைத் தவிர்த்து, பாசிட்டிவ் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஸ்ட்ரெஸ் கூடவே கூடாது. மொத்த முடியும் கொட்டி, தலை வழுக்கையாகிவிடுமோ என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை.

புதிய பகுதி! - 1: அவள் பதில்கள்!

இதுதவிர, பலருக்கும் தலைசீவும்போது, தூங்கி எழுந்திருக்கும்போது தலையணையில், தலைக்குக் குளித்த பிறகு, தலையைக் கோதும்போதெல்லாம் அதிக முடி உதிரும். இத்தகையவர்கள் கட்டாயம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயோட்டின் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களுக்கான சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ளலாம்.

புதிய பகுதி! - 1: அவள் பதில்கள்!

தோலுரித்த சின்ன வெங்காயம் இரண்டு, ஒரு பல் பூண்டு, பாதி நெல்லிக்காய் ஆகியவற்றைப் பச்சையாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்தும் குளிக்கலாம். தேவைப்பட்டால் கலவையுடன் முழு முட்டை யைச் சேர்த்து அடித்துக் கலந்துகொள்ளலாம். இது முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதுடன், மண்டைப் பகுதியிலுள்ள தொற்றுகளையும் குணப்படுத்தும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன்.

கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம்.

உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்',

அவள் விகடன்,

757, அண்ணாசாலை,

சென்னை - 600 002

என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com

என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.