Published:Updated:

அவள் பதில்கள்! - 2

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

#Utility

அவள் பதில்கள்! - 2

#Utility

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

நான் சிங்கிள் பேரன்ட். மகனுக்கு 18 வயது. அவன் ஆட்டிசம் பாதிப்புள்ளவன். மனவளர்ச்சி பாதிக்கப்பட்டாலும் உடல் வளர்ச்சியும் உணர்ச்சிகளும் அவனுக்கு இயல்பாகவே உள்ளன. பருவ வயதில் அவனுக்கு ஏற்படும் பாலியல் உணர்வுகளைக் கையாள ஒரு பெண்ணாக நான் எப்படிச் சொல்லித் தர முடியும்? இந்த விஷயத்தை நான் எப்படி அணுகுவது?

பதில் சொல்கிறார் உளவியல் ஆலோசகர் லட்சுமிபாய்: பொதுவாக இந்த விஷயங்களைப் பற்றிக் குழந்தைகளிடம் பேசுவதில் பெற்றோருக்குப் பெரிய தயக்கம் இருக்கும். ஆனால், உங்கள் குழந்தைக்குப் பாலியல் உணர்வுகளைப் புரியவைக்க வேண்டியது உங்கள் கடமை. பாலியல் உணர்வுத் தூண்டல் என்பது குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதில் ஏற்படுகிற இயல்பான மாற்றம்தான்.

ஆட்டிசம் பாதித்த குழந்தை படிப்பு உள்ளிட்ட பிற விஷயங்களில் சாதாரண குழந்தைகளைப்போல இயல்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.பாலியல் உணர்வுகளைப் புரிந்துகொள்வதிலும் அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். உங்களுக்குப் பேசத் தயக்கமாக இருந்தால் ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தை களின் அம்மாக்கள், மருத்துவர்கள், ஆலோசகர்களின் உதவியை நாடலாம்.

குழந்தையை ஆக்டிவ்வாக வைத்திருங்கள். வெளியே போனால் யாரையாவது தொட்டுவிடுவான் என்ற பயத்தில் பலரும் இப்படிப்பட்ட குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லவே தயங்குவார்கள். அப்படிச் செய்யாமல் அவனை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். டிரஸ் கோடு என்ற விஷயத்தில் கவனமாக இருங்கள். வீட்டிலிருக்கும்போது வெறும் ஜட்டி, பனியனோடு உலவவிடுவதைத் தவிருங்கள். அந்த உடைகளில் இருக்கும்போது உறுப்புகளை அடிக்கடி தொட்டுப் பார்க்கும் வாய்ப்புகள் அதிகம். வீட்டிலிருக்கும்போதும் முழுமையான உடைகளை அணியப் பழக்குங்கள்.

குழந்தை, சுய இன்பம் செய்கிறானா, யாரையாவது தொடுகிறானா என்று கவனியுங்கள். அவனின் எல்லா தொடுதல்களையும் பாலியல் உணர்ச்சியின் வெளிப்பாடாகப் பார்க்காதீர்கள். குழந்தையின் உடல் பற்றி, உறுப்புகள் பற்றி, அவற்றின் செயல்பாடுகள் பற்றி சாதாரண மொழியில் சொல்லித் தர வேண்டும். அந்தந்த உறுப்புகளின் பெயர்களைச் சொல்லியே பேச வேண்டும். குழந்தை சுய இன்பம் செய்வது தெரிந்தால் அதை பாத்ரூமில், கதவை மூடிக்கொண்டு செய்ய வேண்டும் என்று சொல்லித் தர வேண்டும். அதன் பிறகு, பின்பற்ற வேண்டிய சுகாதார விஷயங்களை அம்மாவால் மட்டும்தான் சரியாகச் சொல்லித் தர முடியும்.

பொதுவிடங்களில் உடைகளை விலக்கக் கூடாது, யாரையாவது தொடும்போது எங்கெல்லாம் தொடக் கூடாது என்று புரிய வைக்க வேண்டும். குழந்தையை மற்றவர்கள் தவறாகத் தொடுவதையும் புரியவைக்க வேண்டும். இதைக் கோபமாகவோ, அசிங்கமாகவோ பார்க்காமல் பொறுமையாக, பாசிட்டிவ்வாகப் புரிய வையுங்கள்.

அவள் பதில்கள்! - 2
அவள் பதில்கள்! - 2

பாட்டி காலத்து நகைகளைப் புதுப்பித்து லேட்டஸ்ட் டிசைன்களில் மாற்றிக்கொள்வது சரியா? ஆன்ட்டிக் என்ற பெயரில் பத்திரப்படுத்துவது புத்திசாலித்தனமா?

பதில் சொல்கிறார் நகைக்கடை உரிமையாளர் கீதா சுப்ரமணியம்: 50 முதல் 100 ஆண்டுகளுக்கு முந்தைய நகைகளை ஆன்ட்டிக் நகைகள் என்கிறோம். ரியல் டயமண்டு, அன்கட் அல்லது கட் டயமண்டு, ரியல் ரூபி, எமரால்டு, அன்கட் ரூபி, எமரால்டு வைத்துச் செய்யப்பட்ட, வேலைப் பாடுகளுடன்கூடிய கலைநயமிக்க நகைகள் இந்த ரகம். இவற்றைப் பத்திரப் படுத்துவதே சிறந்தது.

ஆன்ட்டிக் நகைகள் ஒரு கிராம் சுமார் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை விலைபோகும். மிகப் பழைமையான நகைகளாக இருந்தாலும், அவற்றில் சாதாரண வெள்ளை, பச்சைக் கற்கள் வைத்துச் செய்திருந்தால் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. அவற்றை உருக்கும்போது கற்களின் எடை போக, தங்கத்தின் தரத்துக்குரிய மதிப்பு மட்டுமே கிடைக்கும். மேலைநாடுகளில் அசல் ஆன்ட்டிக் நகைகளை ஏலம் விடுவது மிகவும் சகஜம். அதற்கென தனி அமைப்புகளே உள்ளன.

பழைய காலத்து நகை களை, இப்போது அதுபோன்ற வேலைப்பாடுகள் செய்ய வாய்ப்பே இல்லை என்ற பட்சத்தில் விற்காமல் வைத் திருக்கலாம். அழிக்கவோ, விற்கவோ மனமில்லாதவர்கள், அந்த நகைகளை டிரெண்டியாக மாற்றி உபயோகிக்கலாம். உதாரணத்துக்கு அந்தக் காலத்து ராக்கோடியைக் கழுத்துக்கு பெண்டென்ட்டாகவும் சங்கிலியை பிரேஸ்லெட்டாகவும் மாற்றலாம்.

டல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை `அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.