தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அவள் பதில்கள் 51: மகளின் பருப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா?

தையற்கலை பயிற்சி
பிரீமியம் ஸ்டோரி
News
தையற்கலை பயிற்சி

- சாஹா

மிகுந்த விருப்பத்துடன் தையற்கலை பயிற்சியில் சேர்ந்து கற்றுக்கொண்டு வருகிறேன். இந்தத் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற வழிகாட்ட முடியுமா?

-அ.யாழினி பர்வதம், சென்னை-78

சௌபர்ணிகா
சௌபர்ணிகா

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த காஸ்டியூம் டிசைனர் சௌபர்ணிகா

தையல் என்பதே ஒரு தொழில்தான். முறைப்படி கற்றுக்கொண்டதும் அந்தத் துறையில் தொழில் வாய்ப்புகளை நாமே உருவாக்க முடியும். பெரிய முதலீடோ, இட வசதியோ இல்லாமலேயே இந்தத் தொழிலை நீங்கள் தொடங்க முடியும். ஒரு நிறுவனத்திலோ, கடையிலோ போய் உட்கார்ந்து கொண்டு அவர்கள் கொடுக்கும் சம்பளத்துக்கு தைப்பதைவிட, நீங்கள் உங்கள் அக்கம்பக்கத் தாருக்கு, தெரிந்தவர்களுக்கு தைத்துக்கொடுக்க ஆரம்பித்தாலே இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். அதைவைத்து நீங்கள் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகரலாம். பயிற்சி வகுப்புகள் எடுக்கலாம், வேறு கிளைகள் தொடங்கலாம்.

பலருக்கும் நல்ல டெய்லர் அமையாததுதான் பிரச்னையே. கட்டிங் மற்றும் ஸ்டிச்சிங் என இரண் டையும் முழுமையாகக் கற்றுத் தேர்ந்து விட்டீர்கள் என்றால் இந்தத் துறையில் பிசினஸ் வாய்ப்பு களுக்குக் குறையே இருக்காது. பள்ளிகள் திறக்கும்போது யூனிஃபார்ம் தைக்கவும், திருமண சீசனில் மணமக்கள் உடைகள் தைக்கவும், பண்டிகை நாள்களில் புத்தாடைகள் தைக்கவும் ஆர்டர்கள் குவியும்.

அவள் பதில்கள் 51: மகளின் பருப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா?

முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது தனித்திறமை. இத்துறையில் உங்களுடைய தனித் துவம் என ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். உதாரணத்துக்கு மகப்பேறு கால உடைகள், குழந்தைகளுக்கான உடைகள் என ஏதேனும் ஒன்றில் நிபுணத்துவம் பெற வேண்டும். எப்படிப்பட்ட உடையைத் தைக்கும்போது நீங்கள் மிகவும் சந்தோஷமாக உணர்கிறீர்களோ, அதுதான் உங் களுடைய ஸ்பெஷாலிட்டியாக இருக்கும். அதையே உங்கள் யுஎஸ்பியாக மாற்றலாம்.

வீட்டில் நீங்கள் வைத்துள்ள தையல் மெஷின் மட்டும்தான் முதலீடு. வாடிக்கையாளர்களிடம் சிரித்துப் பேசுவதும், கச்சிதமாகத் தைத்துக்கொடுப்பதும் உங்களுக்கு கைவந்து விட்டாலே வாடிக்கையாளர் வட்டம் விரிவடையும். வேலை வாய்ப்பை நீங்கள் தேடிப் போகாமல், அது உங்களைத் தேடி வரும்.

என் மகளுக்கு வயது 19. அவளுக்கு டீன் ஏஜின் தொடக்கத்திலிருந்து பருக்கள் வர ஆரம்பித்தன. சில நேரம் சாதாரண பருவாக வருகிறது. சில நேரம் அது சீழ்க் கட்டி போல பழுத்துவிடுகிறது. பருக்கள் வராமலிருக்க நிரந்தர தீர்வுகள் ஏதும் உண்டா?

- தா.நதிரா, புதுச்சேரி

செல்வி ராஜேந்திரன்
செல்வி ராஜேந்திரன்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

பருக்கள் உண்டாக பல காரணங்கள் இருக்கலாம். சருமத்தில் அதிக எண்ணெய் சுரப்பது, சருமத்தின் செல்கள் அதிகமாக வளர்ந்து, சருமத் துவாரங்களை அடைப்பது, அப்படி அடைப்பட்டதன் மேல் எண்ணெய் சேர்ந்து பாக்டீரியா வளர்வது, அதன் விளைவாக ஏற்படுகிற வீக்கம் என அந்தக் காரணம் எதுவாகவும் இருக்கலாம்.

பலரும், உருண்டு, திரண்டு பழுத்து கட்டி போல தோன்றுவதை மட்டுமே பரு என நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் பரு என்பது நான்கு நிலைகளைக் கொண்டது. சருமத்தின் உள்ளேயே காணப்படுகிற அடைப்பு வொயிட்ஹெட் எனப்படும். அது சூழல் மாசுக்குள்ளாகி, பிளாக்ஹெட்டாக மாறும். உள்ளே நடக்கும் வீக்கம் காரணமாக `பாப்பியூல்' (Papule) என்கிற சிறு வீக்கங்கள் கிளம்பும். அந்த பாப்பியூலில் சீழும் சேரும்போது அது `பஸ்ட்யூல்' (Pustule) என்கிற கொப்புளங்களாக மாறும். அவை இன்னும் கொஞ்சம் பெரிதாகும்போது `சிஸ்ட்' (Cyst) எனப்படும். அதையும்விடப் பெரிதாகும்போது `நாட்யூல்' (Nodule) எனப்படும்.

வொயிட்ஹெட் மற்றும் பிளாக்ஹெட் இரண்டும் சேர்ந்தது முதல் நிலை. பிளாக்ஹெட்ஸ் உடன் பாப்பியூலும் சேர்வது இரண்டாவது நிலை. பஸ்ட்யூல் என்பது மூன்றாவது நிலை. சிஸ்ட் மற்றும் நாட்யூல் இரண்டும் சேர்ந்தது நான்காவது நிலை. இவற்றின் நிலைகளைப் பொறுத்து சிகிச்சைகளும் வேறுபடும்.

பருக்கள் வராமலிருக்க சருமப் பராமரிப்பு முக்கியம். தினமும் 2 முதல் 3 முறை முகத்தைக் கழுவ வேண்டும். அதிக எண்ணெய்ப்பசையான சருமம் உள்ளவர்கள், சாலிசிலிக் அமிலம் கலந்த ஃபேஸ்வாஷும், ஆன்டி பாக்டீரியல் சோப்பும் உபயோகிக்கலாம். பென்ஸாயில் பெராக்ஸைடு உள்ள க்ரீம் உபயோகிப்பதன் மூலம் பருக்களுக்குக் காரணமான பாக்டீரியா நீங்கும். அதிகப் படியான எண்ணெய் சுரப்பும் கட்டுப்படும். ரெட்டினாயிடு கலந்த ஃபேஸ்வாஷ் சருமத் துவாரங்களின் அடைப்பு களைச் சரி செய்யும்.

பருக்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கும் அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு எண்ணெய்ச் சுரப்பிகளைச் சுருங்கச் செய்கிற ஐஸோட்ரெட்டினாயின் வகை மருந்துகள் பரிந்துரைக்கப்படும். ஆனால், இந்த மருந்து கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். சரும மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே உங்கள் மகளின் பருப் பிரச்னையின் தீவிரம் அறிந்து அதற்கேற்பவே சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதால் அவரை சரும மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.