Published:Updated:

`₹500 முதலீடு, மாதம் ₹4 லட்சம் வருமானம்; கலக்கும் யூடியூபர் திவ்யா விஜய்!' - எப்படி தெரியுமா?

பிசினஸ்

அவள் விகடனுடன் இணைந்து திவ்யா விஜய் பங்கேற்று வழங்கும் `ஃபேப்ரிக் பெயின்டிங் ஆன்லைன் பயிற்சி வகுப்பு' பிப்ரவரி 5-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள கட்டணம் 299 ரூபாய்.

`₹500 முதலீடு, மாதம் ₹4 லட்சம் வருமானம்; கலக்கும் யூடியூபர் திவ்யா விஜய்!' - எப்படி தெரியுமா?

அவள் விகடனுடன் இணைந்து திவ்யா விஜய் பங்கேற்று வழங்கும் `ஃபேப்ரிக் பெயின்டிங் ஆன்லைன் பயிற்சி வகுப்பு' பிப்ரவரி 5-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள கட்டணம் 299 ரூபாய்.

Published:Updated:
பிசினஸ்

``நமக்குன்னு ஒரு கைத்தொழில் தெரிஞ்சிருந்தா நாம யாரையும் சார்ந்து இருக்கணும்னுஅவசியம் இல்ல. எந்த டென்ஷனும் இல்லாம வீட்டு வேலைகளையும், குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு வீட்டிலிருந்தே போதுமான அளவு சம்பாதிக்க முடியும்" - நம்பிக்கை பொங்கப் பேசுகிறார் திவ்யா விஜய். பத்து வருடங்களுக்கு மேலாக சாரி பெயின்டிங், மியூரல் பெயின்டிங், ஆரி வேலைப்பாடுகள் என பலவிதமான கிராஃப்ட் பயிற்சி வகுப்புகள் எடுத்து வருவதுடன் அதை பிசினஸாகவும் செய்து வருகிறார் திவ்யா விஜய்.

திவ்யா விஜய்
திவ்யா விஜய்

``எனக்கு சொந்த ஊரு பரமக்குடி. சின்ன வயசிலிருந்தே கிராஃப்ட் மீது ஆர்வமிருந்ததால கைவேலைப்பாடுகள் சார்ந்த விஷயங்களைத் தேடித் தேடி கத்துக்கிட்டேன். பயிற்சி வகுப்புகளும் எடுக்க ஆரம்பிச்சேன். கைவினைப் பொருள்கள்களைப் பொறுத்தவரை புதுசு புதுசா ஏதாவது டிரெண்டு வந்துட்டே இருக்கும். புது டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி நாமளும் அப்டேட் ஆக வேண்டிய அவசியம். அப்படி ஒவ்வொண்ணா கத்துக்கிட்டதுதான் மியூரல் பெயின்டிங், சாரி பெயின்டிங், தஞ்சாவூர் பெயின்டிங், ஃபேப்ரிக் பெயின்டிங், ஆரி வேலைப்பாடுகள் எல்லாம்.

திருமணம் முடிஞ்சு கணவரோடு சென்னையில செட்டில் ஆகிட்டேன். சென்னையில பெரிய அளவுல மக்கள் பழக்கம் இல்லாததால, நான் செய்யும் எல்லா கைவினைப் பொருள்களையும் போட்டோ எடுத்து, என்னோட ஃபேஸ்புக் பக்கத்தில அப்டேட் பண்ண ஆரம்பிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல்ல ஆரி வேலைப்பாடுகளுக்கு மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சுது. ஆரி வேலைப்பாடுகள் செய்யுறதை என்னுடைய முழு நேர பிசினஸா மாத்துனேன். ஃபேப்ரிக் பெயின்டிங் செய்து, அது மேல ஆரி வேலைப்பாடுகள் செய்ததால அந்த டிசைனுக்கு அதிக வரவேற்பு கிடைச்சுது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்னோட கலெக்‌ஷன்கள் தனித்துவமா இருக்கணும்ங்றதில எப்போதும் கவனமா இருப்பேன். யூடியூப் சேனல் தொடங்கி, அதில நான் செய்யும் பிளவுஸ் டிசைன்களை வீடியோக்களா எடுத்துப் பதிவிட ஆரம்பிச்சேன். வெளியூர், வெளிநாடுகளிலிருந்தெல்லாம் ஆர்டர்கள் வர ஆரம்பிச்சதோடு, பயிற்சி வகுப்புகளுக்கும் கேட்க ஆரம்பிச்சாங்க. அதனால ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகளும் எடுக்க ஆரம்பிச்சேன். இப்போ மாசம் நாலு லட்சம் வரை சம்பாதிக்கிறேன்" என்கிறார் திவ்யா.

பிசினஸ்
பிசினஸ்

அவள் விகடனுடன் இணைந்து திவ்யா விஜய் பங்கேற்று வழங்கும் `ஃபேப்ரிக் பெயின்டிங் ஆன்லைன் பயிற்சி வகுப்பு' பிப்ரவரி 5-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. அதில் திவ்யா விஜய் பங்கேற்று ஃபேப்ரிக் பெயின்டிங்கின் அடிப்படை டெக்னிக்ஸ், ஃபேப்ரிக் பெயின்டிங்கை பிசினஸாக தொடங்குவதற்கான ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை வழங்கவிருக்கிறார். இதில் கலந்துகொள்ள கட்டணம் 299 ரூபாய்.

பயிற்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:

https://bit.ly/3IiVXZ4

பயிற்சிக்குத் தேவையான பொருள்கள்:

சில்க் காட்டன் துணி - 1 ஒரு மீட்டர் ( விரும்பும் நிறத்தில் )

கார்பன் பேப்பர் - 1 (வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் ) ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கும்.

பிரின்டிங் டிசைன் பேப்பர் - 1

அக்ரலிக் பெயின்ட் - 12 நிறங்கள் கொண்ட பாக்ஸ்

பெயின்டிங் பிரஷ் - 1, 3, 5 அளவுகளில்

ஃபிரேம் - 10 வது நம்பர்

டிஷ்யூ பேப்பர்

கிண்ணம்

தண்ணீர்

பென்சில்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism