Published:Updated:

அவள் பதில்கள் - 13

அடம்பிடிக்கும் குழந்தைகள்
பிரீமியம் ஸ்டோரி
அடம்பிடிக்கும் குழந்தைகள்

அடம்பிடிக்கும் குழந்தைகள்... ஆன்லைன் வகுப்புகளில் ஆர்வமின்மை... பெற்றோரின் அவதிக்குத் தீர்வு என்ன?

அவள் பதில்கள் - 13

அடம்பிடிக்கும் குழந்தைகள்... ஆன்லைன் வகுப்புகளில் ஆர்வமின்மை... பெற்றோரின் அவதிக்குத் தீர்வு என்ன?

Published:Updated:
அடம்பிடிக்கும் குழந்தைகள்
பிரீமியம் ஸ்டோரி
அடம்பிடிக்கும் குழந்தைகள்

சாஹா

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்னைப்போல கடும் மன உளைச்சலில் இருக்கும் பல பெற்றோரின் கேள்வி இது. கொரோனா பரவல், லாக்டௌன் அதையடுத்த ஆன்லைன் வகுப்புகள் எல்லாம் குழந்தைகளின் படிப்பையும் நடத்தையையும் பெரிதும் புரட்டிப்போட்டு விட்டன. சொல்பேச்சு கேட்பதில்லை. சரியாகப் படிப்பதில்லை. கோபமும் பிடிவாதமும் அதிகரித்திருக்கிறது. பிள்ளைகளிடம் ஏற்பட்டிருக்கும் இந்தத் திடீர் மாற்றங்களை பெற்றோர்களாகிய நாங்கள் எப்படிக் கையாள்வது? எதிர்காலம் குறித்த பயத்தை எப்படிப் புரியவைப்பது?

- பி.மிருணாளினி, கோவை

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைப் பிறப்பு பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்களுக்கான உளவியல் ஆலோசகர் ஆனந்தி ரகுபதி

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாம் சந்திக்கிற, வாழ்கிற சூழல், பெற்றோருக்கு மட்டுமல்ல... குழந்தை களுக்குமே ரொம்ப புதியது, சவாலானது. இப்படியோர் அனுபவத்தை இதற்கு முன் நாம் எதிர்கொண்டதில்லை. இந்த யதார்த்தம் புரியாமல் பல பெற்றோரும், தம் குழந்தைகள் சொல்பேச்சைக் கேட்பதில்லை, அடங்குவ தில்லை, கோபப்படுகிறார்கள், எரிச்சலாகிறார்கள், ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்துவதில்லை என்றெல்லாம் புகார் சொல்கிறார்கள்.

கொஞ்சம் நிதானித்து கொரோனாவுக்கு முந்தைய காலத்தை ரீவைண்டு செய்து பாருங்கள். குழந்தைகளின் வாழ்க்கை எப்படி இருந்தது..? குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதும், தன் நண்பர்களுடன் விளையாடுவதும், படிப்பதுமாக இருந்தார்கள். இன்று குழந்தைகள் அந்த வாழ்க்கையை மிஸ் செய்கிறார்கள். 24 மணி நேரமும் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டு, கம்ப்யூட்டர் மானிட்டரையே பார்த்தபடி, வெளியே விளையாட அனுமதிக்கப்படாமல் இருப்பது அவர்களுக்குள் எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பதைப் பல பெற்றோர்கள் உணர்வதில்லை.

‘வழக்கமா நல்லா படிக்கிறவன், இப்போ சரியா படிக்கிறதில்லை, சூப்பரா மேத்ஸ் போடுறவன், இப்போ சரியா போடுறதில்லை’ என்றெல்லாம் சொல்வதைக் கேட்கிறோம். தயவுசெய்து இப்படிக் குறை சொல்வதை, புலம்புவதைத் தவிர்த்துவிட்டு, எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பும்வரை குழந்தைகளின் மேல் எந்த அழுத்தத்தையும் போடாதீர்கள். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதியுங்கள். அப்படி அனுமதிக்கப்படுகிற குழந்தைகள் இயல்பாகவே எல்லா வற்றையும் கற்றுக்கொள்வார்கள்.

அவள் பதில்கள் - 13

ஓர் உதாரணம் சொல்கிறேன். நீங்கள் எப்போது பிரியாணி செய்தாலும் சூப்பராக இருக்கும் என வைத்துக் கொள்வோம். அன்றும் உங்கள் வீட்டில் பிரியாணி கேட்கிறார்கள். உங்களுக்கோ உடலில் தாங்கமுடியாத வலி. தவிர்க்க முடியாமல் அந்த வலியுடன் சமைக்கிறீர்கள். அப்படிச் சமைக்கும்போது வழக்கமாகச் செய்கிற அதே பிரியாணியில் அதே சுவை வராமல் போகலாம். அப்படிப்பட்ட சூழலைத்தான் உங்கள் பிள்ளைகள் எதிர்கொண்டு வருகிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நன்றாகப் படிக்க வரும். படிப்பில் ஆசையும் இருக்கிறது. அதற்கான வசதிகள் இருக்கின்றன. ஆனாலும் தற்போதைய சூழல் காரணமாக உற்சாக மில்லாமல் இருக்கிறார்கள். ‘ஐயையோ... பத்தாவது வந்துட்டான், அடுத்து ப்ளஸ் டூவாச்சே... சரியா படிக்கலைனா வாழ்க்கையே போச்சே’ என்று பதறி உங்கள் பிள்ளைகளை பயமுறுத்தாதீர்கள். பத்தாவது, ப்ளஸ் டூவில் வாங்கும் மதிப்பெண்கள் உங்கள் குழந்தை களின் வாழ்க்கையை மாற்றப்போவதில்லை. குழந்தைகள் சந்தோஷத்தைத் தொலைக் காமல் இந்த நாள்களைக் கடத்துவதுதான் முக்கியம்.

எல்லாக் குழந்தைகளிடமும் ஏதோ ஒரு திறன் இருக்கும். உங்கள் குழந்தையிடம் அப்படி என்ன திறன் ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வருபவர்தான் சிறந்த பெற்றோர். அதைத் தவிர்த்து புகழ்பெற்ற / ஃபீஸ் அதிகம் வாங்குகிற பள்ளிகளில் படிக்க வைப்பது, கேட்டதைக் கேட்டதும் வாங்கித் தருவது மட்டுமே பேரன்ட்டிங் அல்ல. குழந்தைகளைப் புரிந்துகொள்வதுதான் நல்ல பேரன்ட்டிங்கின் அடிப்படை. குழந்தைகளின் மேல் அளவுக்கதிக எதிர்பார்ப்பை வைக்காதீர்கள். குழந்தைக்கு கணிதம் வரவில்லையா, சயின்ஸ் வந்தால் ஊக்கப்படுத்துங்கள். வரையத் தெரியவில்லையா, நன்றாகப் பேச வருகிறதா எனப் பார்த்து அதை ஊக்கப்படுத் துங்கள். அடுத்தவர்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொள்கிறார்களா என்று பாருங்கள். இல்லாததை மாற்ற அழுத்தம் கொடுக்காமல், இருப்பதைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள்.

அவள் பதில்கள் - 13

ஏற்கெனவே ஒரு சொந்த வீடு வைத்திருக்கிறோம். இன்னொரு வீடு வாங்கலாம் என்ற என் முடிவை கணவர் ஏற்க மறுக்கிறார். கொரோனா காலத்தில் இன்னொரு வீடு வாங்குவது சரியான முடிவல்ல என்கிறார். அப்படியா..?

- நிறைமதி சேகர், சென்னை

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கட்டுமானத்துறை ஆலோசகர் இளவரசன்

வீடுகளில் முதலீடு செய்ய இது சரியான நேரமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் வீடுகளில் முதலீடு செய்வது பற்றி யோசிக்கும் மக்களுக்கு ஒரு விஷயம்... இது போன்ற விலை குறைவான வாய்ப்பு, கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு நிச்சயம் அமையாது.

தற்போதுள்ள ரியல் எஸ்டேட் துறை நுகர் வோரின் (buyers) மார்க்கெட்டாக இருந்தாலும், கொரோனாவுக்குப் பிறகு ஏற்படப்போகும் டிமாண்டால் குறைந்தது அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு விற்பனையாளர்களின் (sellers) மார்க்கெட்டாகவே இருக்கும். உயர்ந்து வரும் மூலப்பொருள்களின் விலை யும் தொழிலாளர்களின் சம்பள உயர்வுமே காரணம். தவிர பெரும்பான்மையான கட்டுமானத் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்குப் புலம் பெயர்ந்துவிட்டதன் காரணமாக நிச்சயம் வேலையாட்களுக்கான மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படக்கூடும். இதனால் வீட்டின் அடிப்படை விலையில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும். தவிர, இப்போது இருக்கும் வீட்டுக்கடன் மீதான வட்டி விகிதம் வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய லாபத்தைத் தருகிறது. நிலைமை சரியானவுடன் இது போன்ற குறைந்த வட்டி விகிதம் அமையுமா என்பதும் சந்தேகமே... 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் உலக நாடுகள் சந்தித்த மிகப் பெரிய பொருளாதார சிக்கல்களிலிருந்து மீண்டு மிகப் பெரிய பொருளாதார ஏற்றத்தை அடைந்தோம். கொரோனாவிலிருந்தும் மீண்டு மிகப்பெரிய ஏற்றத்தை நம் நாடு அடையும். தற்காலிக சூழலைக் கருத்தில்கொண்டு உங்களின் நிரந்தர முதலீடுகளைத் தள்ளிப் போடாதீர்கள். இதை உங்கள் கணவருக்குப் புரியவையுங்கள்.

பார்லர்கள் மீண்டும் மூடப்பட்டுள்ள நிலையில் பெண்கள் புருவங்களை திரெடிங் செய்யவும், முகத்திலுள்ள ரோமங் களை நீக்கவும் வீட்டிலேயே பின்பற்ற எளிய வழிகள் ஏதேனும் இருக்கின்றனவா?

- கே.அக்‌ஷயா, திண்டிவனம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் மேனகா ராம்குமார்.

ஐ ப்ரோ திரெடிங் செய்யவென ஆன் லைனில் இப்போது கையடக்கமான கருவிகள் நிறைய கிடைக்கின்றன. எல்லாமே பேட்டரியில் இயங்குபவை. இந்தக் கருவிகளை உபயோகித்து துளிக்கூட வலியே இல்லாமல் புருவங்களை ஷேப் செய்துகொள்ளலாம். முதலில் இரண்டு புருவங்களுக்கு இடை யிலுள்ள பகுதியில் உங்களுக்கு எவ்வளவு இடைவெளி வேண்டுமோ அதற்கேற்ப சுத்தம் செய்ய வேண்டும். பிறகு நெற்றிப்பகுதி, கண்களுக்கு மேல் புருவங்களுக்குக் கீழே உள்ள ரோமங்களை அகற்ற வேண்டும். முதன்முறை பயன்படுத்தும்போது சின்ன பகுதியில் முயற்சிசெய்து 48 மணி நேரம் கழித்து முழுமையாகப் பயன்படுத்தலாம். வலியில்லாமல் புருவங்களை திரெடிங் செய்ய நினைப்பவர்களுக்குப் பல பார்லர்களில்கூட இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கருவியைப் பயன்படுத்தும் முன் முகத்தின் சருமம் க்ரீம், பிசுபிசுப்பின்றி சுத்தமாக இருக்க வேண்டும். உபயோகித்து முடித்ததும் மாய்ஸ்ச்சரைஸர் அல்லது கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். ரொம்ப சென்சிட்டிவ் சருமத்துக்கு டிஷ்யூவில் ஐஸ்கியூப்களைச் சுற்றி ஒத்தடம் மாதிரி கொடுக்கலாம். இதை உபயோகித்த பிறகு கருவியை முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

முகத்திலுள்ள ரோமங்களை அகற்ற ஃபேஸ் ரேஸர்கள் கிடைக்கின்றன. யூஸ் அண்டு த்ரோ ரேஸர்களான இவற்றை முகத்தில் ரோமம் வளரும் திசையிலேயே பயன்படுத்தலாம். இதை உபயோகிப்பதால் மீண்டும் முடி வளர்ச்சி அதிகமாக, வேகமாக இருக்கும் என்றெல்லாம் பயப்பட வேண்டாம். விலையும் மிகக் குறைவு. இந்த முறையில் ரோமங்களை அகற்றியதும் வழக்கமாக நீங்கள் உபயோகிக்கும் ஃபேஸ்பேக் போட்டுக் கொள்ளலாம். இந்த இரண்டு கருவிகளையும் பிறர் உதவியின்றி நீங்களே பயன்படுத்த முடியும்.

ஐ ப்ரோ திரெடிங், ஃபேஷியல், வாக்ஸிங் போன்றவை நெருக்கமாக இருந்தபடி செய்ய வேண்டிய சேவைகள் என்பதால் கொரோனா காலத்தில் அவற்றைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.