Published:Updated:

`உங்கள் IAS, IPS கனவை நிஜமாக்கலாம்!' - அவள் விகடன் நடத்தும் பெண்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி!

யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு இந்த நிகழ்ச்சி விடையளிக்கும். ஆகஸ்ட் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்ற முன்பதிவு அவசியம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்களின் முன்னேற்றம் என்பது சவால்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. குடும்பத்தின், சமூகத்தின் ஒவ்வொரு தடையையும் பெண்கள் உடைத்துக்கொண்டே முன்னேறுவதைக் கண்கூடாகவே பார்க்க முடிகிறது. அதற்குச் சிறந்த உதாரணம் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள். 1891-ம் ஆண்டு முதன்முதலில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபோது பெண்கள் அதற்குப் பொருத்தமற்றவர்கள் என்றுகூறி வாய்ப்பளிக்கவில்லை. பார்வையாளர்களாகக்கூட பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.

Exams -Representational image
Exams -Representational image
Image by Karolina Grabowska from Pixabay
``என் கஷ்டம் மகன்களுக்கு வேண்டாமே..!" - ஐ.ஏ.எஸ் மகனால் நெகிழும் நடிகர் சின்னி ஜெயந்த்

வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் 113 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த அமெரிக்காவுக்கு பெண்கள் வாங்கிக் கொடுத்த பதக்கங்களின் எண்ணிக்கை 66. ஆண்கள் பெற்றவையோ 41. ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்கள் தடங்களை அழுத்தமாகப் பதித்து வருகின்றனர் என்பதற்கு இதைவிட சரியான உதாரணம் இருக்க முடியாது.

ஆனால், இந்தியாவில் உயரிய பதவிகளாகக் கருதப்படும் குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கையில் ஆண், பெண்களுக்கிடையில் அதிக வித்தியாசங்கள் உள்ளன. 2018-ம் ஆண்டு தேர்வு முடிவில் 829 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களில் 632 பேர் ஆண்கள், 197 பேர் பெண்கள். 2019-ம் ஆண்டு தேர்வில் 577 ஆண்கள், 182 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

UPSC
UPSC

யுபிஎஸ்சி தேர்வுகளில் பெண்களுக்கு என்ன தடைகள், சவால்கள் உள்ளன, அவற்றைக் கடந்து வெற்றி வாகை சூடுவதற்கு என்ன செய்ய வேண்டும் எனப் பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் அவள் விகடன் மற்றும் சிவராஜ் வேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து `பெண்களும் IAS தேர்வும்... எளிய வழிகாட்டி!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட சிவராஜ் வேல் ஐ.ஏ.எஸ். அகாடமி, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மாணவர்களைச் சிறந்த முறையில் தயார்படுத்திவருகிறது. திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் கிளை விரித்துள்ள இந்த அகாடமி, இதுபோன்ற ஆன்லைன் கருத்தரங்குகள் மூலம் மாணவர்களிடம் விழிப்புணர்வையும், வழிகாட்டலையும் ஏற்படுத்திவருகிறது.

யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, பெருந்தொற்றுக் காலத்தில் தேர்வுக்குத் தயாராவது எப்படி, தேர்வு நுணுக்கங்கள், மாணவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கு இந்த நிகழ்ச்சி விடையளிக்கும்.

பெண்களும் IAS தேர்வும்
பெண்களும் IAS தேர்வும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆகஸ்ட் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்ற முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு