Published:Updated:

அவள் விகடன் சேனலில் அசத்தலான நான்கு புதிய நிகழ்ச்சிகள்... மிஸ் பண்ணிடாதீங்க!

அவள் விகடன்
அவள் விகடன்

இந்த நிகழ்ச்சிகள் நான்கும் அவள் விகடன் யூடியூப் சேனலில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.

அவள் விகடன் யூடியூப் சேனல் ஆரம்பித்து வாசகிகளின் ஆதரவோடு வெற்றிகரமாக 50,000 சப்ஸ்கிரைபர்ஸை ஈர்த்திருக்கிறோம். இந்த நேரத்தில் அவள் விகடன் யூடியூப் சேனலில் பல புதிய ஷோக்கள் உங்களை மகிழ்விக்க வருகின்றன. இவற்றில் பெண்களுக்கான ஆலோசனைகள், சமையல், சாதனைப் பெண்களின் கதைகள், 80-களில் கோலிவுட்டில் தடம் பதித்த கதாநாயகிகளின் வாழ்க்கைக் கதைகள் உள்ளிட்டவை இடம்பெற இருக்கின்றன.

அவள் கிச்சன்
அவள் கிச்சன்

அவள் கிச்சன்

இந்த ஷோவில் விதம் விதமான உணவுகளை எளிமையாகச் செய்வது எப்படி என சமையல்கலை நிபுணர் ஷோபனா கற்றுத் தர இருக்கிறார். அவள் விகடன், அவள் கிச்சன் இதழ்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டே சமையல் குறித்த விஷயங்கள் அவற்றில் இடம்பெற்று வருகின்றன. அவற்றை இனி டிஜிட்டல் வடிவில் யூடியூப் மூலம் வாசகர்கள் பார்க்கலாம். அதன்படி இனி வாசகிகள் விதவிதமான உணவுகளைச் செய்து சுவைக்கலாம். என்ன தயாரா?

80-ஸ் எவர்கிரீன் நாயகிகள்

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80-ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள், குடும்ப வாழ்க்கை, சினிமா பயணம் என அவர்களின் வெற்றிக் கதைகளைச் சொல்லும் புதிய ஷோ இது.

Radhika Sarathkumar
Radhika Sarathkumar

முதல்

முதல் எனும் தலைப்பில் வெளிவர இருக்கும் ஷோவில் பெண் ஆளுமைகள் தங்கள் முதல் வாய்ப்பு, முதல் அழுகை, முதல் கோபம், முதல் திட்டு, முதல் மகிழ்ச்சி, முதல் வெற்றி, முதல் விருது ஆகியவற்றைப் பற்றி பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர். வித்தியாசமான கோணத்தில் ஆளுமைகள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இது இருக்கும்.

அவள் TALKS

வாழ்க்கையில் ஜீரோவிலிருந்து ஹீரோவான சாதனைப் பெண்கள் அவர்களின் அனுபவங்களைப் பற்றி பேசும் ஷோ இது. தங்களின் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் அவற்றிலிருந்து மீண்டு சாதனை படைத்த தங்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

மேற்கண்ட 4 ஷோக்களும் அவள் விகடன் யூடியூப் சேனலில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

அவள் விகடன் யூடியூப் சேனலைச் சப்ஸ்கிரைப் செய்ய - https://www.youtube.com/c/AvalVikatanChannel இங்கு க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு