லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

“பாலியல் தொல்லைக்கு எதிரான தீர்வு தொடங்குவது... இங்கிருந்துதான்!”

Avaludan
பிரீமியம் ஸ்டோரி
News
Avaludan

#Avaludan

உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

ராமநாதபுரத்தில், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த கல்லூரி மாணவியை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டின் பேரில் 70 வயது மருத்துவர் ஜபருல்லா கானை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மருத்து வர்கள், ஆசிரியர்கள், ராணுவ அதிகாரிகள், காவல்துறையினர் என இப்படி எல்லா துறைகளி லும் உள்ள ஆண்களில் சிலர், பெண்களை பாலியல் பொருளாகவே அணுகி வன்முறைக்கு ஆளாக்குவது குறித்த உங்கள் அனுபவங்களையும், கண்டனங்களையும், தீர்வு என நீங்கள் நினைப்பதையும் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று அவள் விகடன் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டிருந்தோம். அவற்றில் சிறந்தவை இங்கே...

Selvaraj

எத்தனையோ வேலைகள் இருந்தாலும், சில வேலை களை மட்டும் உயர்வானதாகக் கருதுவது அதற்குரிய பொறுப்பினால். உயிர் காப்பவர் என்பதால்தான் மருத்துவரை கடவுளுடன் ஒப்பிடுகிறார்கள் மக்கள். ஆனால், அந்த மரியாதையையே கேடயமாக்கிக்கொண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மருத் துவர்களுக்குக் கட்டாயம் சிறைவாசம் கிடைக்க வேண் டும். சிகிச்சைக்குச் சென்ற பெண்கள் மருத்துவர்கள் மீது பாலியல் புகார் எழுப்புவது இது முதல் முறையல்ல என்பதையும் வருத்தத்துடன் கவனிக்க வேண்டும்.

“பாலியல் தொல்லைக்கு எதிரான தீர்வு தொடங்குவது... இங்கிருந்துதான்!”

Sathia Moorthi

எல்லா வேலைகளிலும், தொழில்களிலும், பணியிடங் களிலும், சேவைகளிலும் இதுபோன்றவர்கள் இருக் கிறார்கள். இதற்குத் தீர்வு எங்கிருந்து தொடங்கும் என்றால், பெண்களின் எதிர்வினையில் இருந்து. எங்கானாலும் சரி, யாராக இருந்தாலும் சரி... பெண்கள் வெளியே சொல்லமாட்டார்கள் என்ற தைரியத்துடன் சீண்டலில் ஈடுபடுபவர்களை தோலுரித்து சமு தாயத்துக் காட்டி, சட்ட தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அச்செயல், அவர் களால் பாதிக்கப்படவிருக்கும் பிற பெண்களையும் காப்பாற்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

sanayathav

குற்றவாளிகளைக் களையெடுப்பது நம் கையில் மட்டும் இல்லை. ஆனால், நாம் கட்டாயமாகச் செய்ய வேண்டியது, நம் ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுப்பது. அது குறித்த விழிப்புணர்வு கொடுப்பது. அப்போதுதான், அவர்கள் பாலியல் தொல்லையை ஒருவேளை எதிர்கொள்ள நேரிடும்போது, தங்களுக்கு நேர்வது என்ன என்பது புரிந்து, அதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள முடியும்.

muthusreemuthupandiyan

பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டத்தையும் தண்டனையையும் கடுமையாக்க வேண்டும்.

muthusreemuthupandiyan

குறிப்பிட்ட சம்பவத்தில், தனக்கு நேர்ந்ததை தைரியமாக வெளியே சொல்லி, அந்த மருத்துவரை தோலுரித்த கல்லூரி மாணவிக்கும், அவருக்கு உறுதுணையாக நின்று காவல்நிலையத்தில் புகார் அளிப்பது வரை சென்று, குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைத் திருப்பது வரை தைரியமாகச் செயலாற்றிய அவர் குடும்பத்துக்கும் பாராட்டுகள். இவர்கள் நமக்கு முன் உதாரணம்.