Published:Updated:

குழந்தைகள் தப்பான வீடியோ பார்த்தால், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

டீன்ஏஜ்
பிரீமியம் ஸ்டோரி
டீன்ஏஜ்

டீன்ஏஜ்

குழந்தைகள் தப்பான வீடியோ பார்த்தால், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

டீன்ஏஜ்

Published:Updated:
டீன்ஏஜ்
பிரீமியம் ஸ்டோரி
டீன்ஏஜ்

து ஒரு சனிக்கிழமையின் மாலை நேரம். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், வாரம் முழுவதும் உழைத்ததால் ஏற்பட்ட களைப்பு விலகி, ஞாயிற்றுக்கிழமையை எதிர்கொள்ளத் தயாரான நேரம். உறவுக்கார அக்கா ஒருவர், நீண்டநாள் கழித்து திடீரென்று வீட்டுக்கு வந்திருந்தார். டீ சாப்பிட்டுக்கொண்டே சம்பிரதாயமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அதன்பிறகு, தன் டீன்ஏஜ் மகளைப் பற்றிய புகார் கடிதம் ஒன்றை வாசித்தார். ``இரண்டு வாரம் முன்னாடி, என் பொண்ணோட க்ளாஸ் டீச்சர் போன் பண்ணியிருந்தாங்க. ‘உங்க புள்ள தப்பு தப்பான வீடியோக்களைப் பார்க்குறா மேடம். அவ ஃப்ரெண்டு ஒருத்திக்கிட்ட இதை டிஸ்கஸ் பண்ணியிருக்கா. அந்தப் பொண்ணு அவளோட அம்மாகிட்ட சொல்லி... அவங்க எனக்கு போன் செய்தாங்க. கொஞ்சநாளாவே உங்க பொண்ணு படிப்புல கவனமில்லாம இருக்குறதுக்கு அதுதான் காரணம். அவளைக் கொஞ்சம் கண்காணிங்க'ன்னு சொன்னாங்க'’ என்று படபடப்பாகச் சொல்லி அழத் தொடங்கினார்.

மறுநாள், அம்மா - அப்பா - மகள் மூவரிடமும் தனித்தனியாகப் பேசி, மனநல மருத்துவர் ஒருவரைப் பரிந்துரை செய்தேன். இப்போது, குழந்தை பிரச்னையிலிருந்து வெளிவரத் தொடங்கிவிட்டாள்.

 பூங்கொடி பாலா
பூங்கொடி பாலா

பெங்களூரில் இயங்கும் தன்னார்வ அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில், ஆண் குழந்தைகள் தங்களது 10 வயதிலிருந்தே அடல்ட் வீடியோக்களைப் பார்ப்பது தெரியவந்துள்ளது. அடல்ட் வீடியோக்களைப் பார்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சமீப காலமாக, அதிகரித்துவருகிறது.

“40 வயதுக்குப் பிறகு, ஆணோ, பெண்ணோ... இரு பாலினத்தவருக்குமே உடல் சார்ந்த பல மாற்றங்கள் நிகழும். மனஅழுத்தம் அதிகரிக்கும். ஆனால், அந்த மாற்றங்கள் குழந்தைகள்மீதான வார்த்தை அல்லது வன்முறைத் தாக்குதலாக மாறிவிடக் கூடாது. மூட் ஸ்விங்க்ஸ் காரணமாக இருந்தாலும்கூட, குழந்தையிடம் பேசும்போது வார்த்தைகள் வன்முறையாக வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்கிற

எச்சரிக்கையோடு தொடங்குகிறார், குழந் தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“குழந்தைகளுக்கு எந்த வயதில் என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும், அதை எப்படிச் சொல்லித்தர வேண்டும் போன்ற நுணுக்கங்கள் பெற்றோருக்குத் தெரிந்திருக்கும். டீன்ஏஜ் பேரண்டிங் பற்றிய புரிதல்களும் அவர்களுக்கு ஏராளமாக இருக்கும். ஆனால், இதுபோன்ற அறிவுரைகளுக்கும் புரிதல்களுக்கும் ஆயுள்காலம் மிகவும் குறைவு. குழந்தை தவறிழைத்துவிட்டது என்று தெரிந்தால், எல்லா அறிவுரைகளையும் மறந்துவிட்டு, எண்ணெயில் விழுந்த கடுகைப்போல படபடவென வெடித்துத் தள்ளிவிடுகின்றனர் பெற்றோர். குறிப்பாக, குழந்தையின் நல்லொழுக்கம் சார்ந்து ஏதேனும் குற்றச்சாட்டு தெரியவந்தால், பல பெற்றோர் அடுத்த நொடியிலேயே நிதானம் இழக்கத் தொடங்கிவிடுகின்றனர். பிள்ளைகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதுபோல நிறுத்தி வைக்கின்றனர்.

குழந்தைகள் தப்பான வீடியோ பார்த்தால், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

இதுபோன்று நிதானத்தை இழந்த பெற்றோரை சமீபத்தில் சந்தித்தேன். அவர்களிடம் பேசியபோது, ஒரு விஷயம் எனக்கு தெளிவாகப் புரிந்தது. அது, ‘பிள்ளைகள்மீது செலுத்தப்படும் வார்த்தை வன்முறைகளை, பல பெற்றோர் வன்முறை என்று ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை’ என்பதே. ‘பிள்ளைங்க நல்லதுக்காகத்தானே சொல்றோம். இன்னிக்கு வேணும்னா, நாங்க திட்டுறது அவங்களுக்கு கஷ்டமா இருக்கலாம். போகப் போக எல்லாம் சரியாகிடும். அதுங்களா எங்களைப் புரிஞ்சுக்கும். நாங்கள்லாம் அந்தக் காலத்துல வாங்காத திட்டா...’ என்கிற மனப்பான்மைதான் பெற்றோரிடம் இருக்கிறது. ஒருகட்டத்துக்கு மேல், ‘பிள்ளைங்களை திட்டக் கூடாது, அடிக்கக் கூடாதுன்னா... வேற எப்படித்தான் திருத்துறது? என்ன வேணுன்னாலும் தப்பு பண்ணுன்னு விட்டுட முடியுமா?’ என்பார்கள்.

குழந்தைகள் தப்பான வீடியோ பார்த்தால், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

உண்மையில், டீன்ஏஜ் குழந்தைகளை நெறிப்படுத்துவது என்பது எளிதான ஒன்றே. குறிப்பாக, குழந்தைகளின் நல்லொழுக்கம் தொடர்பான புகார்கள் வரும்போது பதற்றம், கோபத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, அவர்களுடன் அமர்ந்து பேசுங்கள். மனித உடலானது ஒவ்வொரு வயதுக்கும் குறிப்பிட்ட உடல் வளர்ச்சி, மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடியது.

டீன்ஏஜ் காலகட்டத்தில் உடலியல் மாற்றங்கள், பருவமடைதல், ஹார்மோன் மாற்றங்கள், மனஅழுத்தம் எனப் பல விஷயங்களை அவர்கள் எதிர்கொள்வார்கள். அப்போது, அந்தக் குழந்தைகள் மனத்தளவில் தடுமாறுவது இயல்புதான். நாமும்கூட, அந்த வயதில் சில தடுமாற்றங்களைச் சந்தித்தே கடந்து வந்திருப்போம். அதனால், குழந்தைகளைக் குற்றவாளியாக்காமல், இயல்பாக அணுகுவது அவசியம். குழந்தைகள் உலகில், தவறு என்று எதுவும் இல்லை, எல்லாமே தடுமாற்றம்தான். அப்போது, ஒருவருக்குத் தேவைப்படுவது நம்பிக்கையான வார்த்தைகளும் அவர்களைக் குற்றவாளியாகப் பார்க்காத உறவுகளும்தான். அப்படியொரு சூழலை நம் குழந்தைக்கு ஏற்படுத்திக்கொடுப்பது அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டீன் ஏஜ் பருவத்தினர்மீது ஒழுக்கம் சார்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிகவும் சென்சிட்டிவ்வானது, அவர்கள் ஆபாச இணையதளங்களைப் பார்வையிடுவது பற்றியதே. இத்தகைய சூழலில் குழந்தையைவிட, பெற்றோர்தாம் அதிக சென்சிட்டிவ்வாக இருக்க வேண்டும். ஆபாச இணையதளங்களைக் குழந்தைகள் பார்வையிடுவது தெரியவந்தால், உடனடியாக அதுபற்றி குழந்தைகளிடம் கேட்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வார இறுதிநாள் வரை பொறுத்திருங்கள். இடைப்பட்ட நாள்களில், குழந்தையின் வீடியோ ஹிஸ்டரியை அமைதியாகக் கண்காணித்து வாருங்கள். சில குழந்தைகள் அப்படியான வீடியோக்களைப் பார்த்து முடித்தவுடன், ஹிஸ்டரியை அழித்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள், மற்ற நடவடிக்கைகளில் இயல்பாக இருக்கிறார்களா என்பதைக் கண்காணியுங்கள்.

வார இறுதியில், குழந்தையோடு அமர்ந்து ‘என்னப்பா, இப்போலாம் போனும் கையுமா இருக்க... நிறைய தடுமாறுகிற மாதிரி தெரியுது... என்ன ஆச்சு உனக்கு... என்ன பிரச்னை?’ என்று பேசத் தொடங்குங்கள். அத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக, உங்களின் கண்காணிப்பு பற்றியும் குழந்தையின் மாற்றம் பற்றியும் பேசுங்கள். உங்களின் கண்காணிப்பை குழந்தையிடம் தெரிவிக்கும்போது, எந்தச் சூழலிலும், உங்களது துப்பறியும்திறன் பற்றிய பெருமிதம் குரலிலோ, வார்த்தைகளிலோ வெளிப்படக் கூடாது. காரணம், ‘கண்காணிக்கிறார்கள்’ என்கிற உணர்வு குழந்தைக்கு ஏற்பட்டுவிட்டால், குழந்தைக்கும் உங்களுக்குமான இடைவெளி அதிகரித்துவிடும். இதனால், அடுத்து கேட்கப் போகும் கேள்விக்கு குழந்தை சரியான பதில் சொல்லாமல் போகலாம்.

‘இந்த வயசுல எல்லோருக்கும் ஏற்படுகிற உணர்வுதான் உனக்கும் ஏற்பட்டிருக்கு. அதனால நீ பயப்படாதே. ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்போது இதுமாதிரி விஷயங்கள் உனக்குத் தோணுவது இயல்புதான்’ என்று சொல்லி குழந்தையுடன் நெருக்கமான சூழலை உருவாக்குங்கள். தொடர்ந்து, ‘இந்தச் செய்கை இயல்புதான் என்றாலும், இந்த வயசுல இது சரியில்ல. இந்தப் பழக்கம் படிப்பை மட்டுமில்ல, மனசையும் பாதிக்கும். ஒருகட்டத்துல, வேற எந்த விஷயத்துலயும் உன்னால கவனம் செலுத்த முடியாம போகலாம். அதனால, உடனடியா இந்தப் பழக்கத்துலேருந்து நீ வெளிய வரணும். வீடியோ பார்த்தே ஆகணும்னு தோணுனா எதுவும் யோசிக்காம மூளைக்கு வேற வேலை கொடு. பாடப் புத்தகத்தைத்தான் கையில எடுக்கணும்னு அவசியம் இல்ல. வீட்டு வேலைகள் செய்யலாம். எங்களோட உட்கார்ந்து பேசலாம். தம்பி/தங்கச்சிகூட விளையாடலாம். இல்லைன்னா, உன் யூனிஃபார்மை நீயே அழகா அயர்ன் பண்ணு. புக் ஷெல்ஃபை நீட்டா அடுக்கி வை. முதல்ல இது உனக்கு கஷ்டமாத்தான் இருக்கும். போகப்போக சரியாகிடும். ஒருகட்டத்துல ‘இதுக்கா நாம இவ்வளவு யோசிச்சோம்’னு தோணும்.

இதுல இருந்து நீ மீண்டு வர, நானும் அப்பாவும் என்ன பண்ணணும்னு சொல்லு. நாங்க உனக்கு உறுதுணையா இருக்கோம்’ எனச் சொல்லுங்கள். அன்றைய தினத்தில் வேறு எதுவும் கேட்க வேண்டாம். இரண்டொரு நாள் பொறுத்துவிட்டு, இந்த வீடியோக்களைப் பார்க்கும் எண்ணம் குழந்தைக்கு எப்படி வந்தது என்பதைக் கேட்டறியுங்கள். பெரும்பாலும் உறவுக்காரர்களின் தூண்டுதலினாலோ, அக்கம்பக்கத்தினரின் ஆலோசனையின் பேரிலோ, நண்பர்கள் மூலமோதான் அது நடந்திருக்கும். அவர்கள் அன்றாடம் சந்திக்கும் யாரோ ஒரு நபரின் தூண்டுதலும் வழிகாட்டுதலுமே இதற்கு அடிப்படையாக இருக்கும். அந்த நபர் யாரென்று கண்டறிந்து, அவரை அழைத்து எச்சரியுங்கள்; அல்லது அவர்களுடனான உங்கள் குழந்தையின் தொடர்பை மட்டுப்படுத்துங்கள். சில நேரம், அப்பா - அம்மாக்களேகூட இந்த இடத்தில் இருப்பதுண்டு. அப்படியென்றால், தாமதிக்காமல் உங்களை நீங்கள் திருத்திக்கொள்வது அவசியம்” என்கிறார் பூங்கொடி பாலா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism