Published:Updated:

`வாழ்வாதாரத்திற்கே வழியில்லை.. எப்படி வட்டி கட்ட முடியும்?’ -கலங்கும் மகளிர் சுய உதவிக்குழுவினர்

மகளிர் குழு
மகளிர் குழு ( எம். விஜயகுமார் )

கொரோனா ஊடரங்கால் கடந்த 70 நாள்களாக வேலை இழந்து, வருமானம் இல்லாமல் உணவுக்கு வழி தெரியாமல் குடும்பமாக வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறோம். எங்க வாழ்வாதாரம் கேள்விக் குறியாக இருக்கிறது.

``கொரோனா ஊடரங்கால் கடந்த 70 நாள்களாக வேலை இழந்து, வருமானம் இல்லாமல் உணவுக்கு வழி தெரியாமல் குடும்பமாக வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் மகளிர் சுய உதவிக் குழுவில் வாங்கிய கடனையும், வட்டித் தொகையும் கட்டச் சொல்லி தினந்தோறும் வீட்டிற்கு வந்து டார்ச்சர் செய்கிறார்கள். வாழ்வாதாரத்திற்கே வழியில்லை... எப்படி வட்டி கட்ட முடியும்?

புவனா
புவனா

கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து, வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக இருக்கிறது. இச்சூழலில் மகளிர் சுய உதவிக் குழுவில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டச் சொல்லி தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார்கள். இதனால் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருக்கிறோம்” என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள் சேலம் பொன்னம்மாபேட்டை மகளிர் சுய உதவிக் குழுவினர்.

இதுபற்றி சூரியாடையா மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த புவனா, ``சேலம் பொன்னம்மாபேட்டைப் பகுதியில் மதுரா, தனலட்சுமி, கிராம விடியல், சூரியாடையா, எல்.என்.டி என 20-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறோம்.

நாங்கள் பெரும்பாலும் டைலரிங், வெள்ளிப் பட்டறை, காய்கறி விற்பனை, வீடு மற்றும் ஹோட்டல் வேலைக்குச் செல்லும் தினக்கூலித் தொழிலாளர்களாக இருக்கிறோம். கொரோனா ஊரடங்கால் கடந்த 70 நாள்களாக வேலை இழந்து, வருமானம் இல்லாமல் உணவுக்கு வழி தெரியாமல் குடும்பமாக வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறோம். எங்க வாழ்வாதாரம் கேள்விக் குறியாக இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் மகளிர் சுய உதவிக் குழுவில் வாங்கிய கடனையும், வட்டித் தொகையையும் கட்டச் சொல்லி தினந்தோறும் வீட்டிற்கு வந்து டார்ச்சர் செய்கிறார்கள். வாழ்வாதாரத்திற்கே வழியில்லை... எப்படி வட்டி கட்ட முடியும். அரசாங்கம் மீண்டும் 3 மாதம் கழித்தே தவணைத் தொகைகளை கட்ட அவகாசம் கொடுத்திருக்கிறது. ஆனால், இவர்கள் டபுள் வட்டி கேட்டு மிரட்டுகிறார்கள். இதனால் உளவியலாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்'' என்றார்.

போராட்டம்
போராட்டம்

இதுபற்றி தனலட்சுமி சுய உதவிக் குழுவின் கலெக்‌ஷன் பிரிவைச் சேர்ந்த தினேஷ், ``நாங்கள் உடனே பணம் கட்ட வேண்டுமென்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பணம் கொடுப்பவர்களிடம் வாங்குகிறோம். `நாளைக்கு நீங்கள் பணம் வசூலிக்க ஏன் வரவில்லை? என்று கேட்டு விடக் கூடாது' என்பதற்காகச் செல்கிறோம். மற்றபடி யாரையும் வற்புறுத்தவில்லை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு