வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. பாடநூல்களைப்போல அல்லாமல், கதைபோல சுவாரஸ்யம் சேர்ந்திருக்கும். அரசியல்வாதிகள், தலைவர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்களுடையவை மட்டுமல்ல, சாமான்யர்களின் வாழ்க்கைகூட சில நேரங்களில் பெரும் கவனத்தையும் வாசகர்களின் வரவேற்பையும் பெற்றுவிடுவதுண்டு. மலாலாவின் வாழ்க்கைக் கதை அந்த வகையைச் சார்ந்தது. தாலிபான்களால் சுடப்பட்ட அந்தச் சிறுமி, அத்தனை வேதனைகளையும் தாங்கிக் கொண்டு மீண்டெழுந்து, நோபல் பரிசுவரை சாதித்த சரித்திரம் நம் அனைவருக்கும் தெரிந்ததே. பாகிஸ்தானின் அரசியல், மலாலா வாழ்ந்த நிலப்பரப்பு, வாழ்க்கைச்சூழல் எனச் சேர்ந்திருக்கும் முக்கியமான அம்சங்கள் இந்த நூலை மேலும் அழகானதாகவும் ஆழம்மிக்கதாகவும் ஆக்கிவிடுகின்றன.

நூலிலிருந்து...

மலாலா நிச்சயம் ஹாரி பாட்டர் அல்லர். நம் கண் முன்னால் ரத்தமும் சதையுமாக நடமாடும் ஓர் எளிய பெண். பேட்டியொன்றில் மெலிதான புன்னகையுடன் இப்படிச் சொல்லியிருக்கிறார். `என்னிடம் மந்திர சக்தி இருந்திருந்தால், நொடியில் தாலிபான்கள் அனைவரையும் காணாமல் போகச் செய்திருப்பேன்.’

சமையலறை, மலாலாவை ஈர்க்கவில்லை. காற்றாடி விடுவதற்குப் பிடித்திருக்கிறது. தன் முகத்தைத் துணிச்சலுடன் வெளிகாட்டப் பிடித்திருக்கிறது. தன் கண்கள் திரையின்றி உலகைக் காண வேண்டும் என்றும், உலகம் தன் கண்களைத் திரையின்றிக் காண வேண்டும் என்றும் மலாலா விரும்பினார். இது எளிய விருப்பம்தான் அல்லவா? இதை ஏன் அம்மாவால் புரிந்துகொள்ள முடியவில்லை?

பத்து வயது மலாலாவுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. பெனாசிரைக் கொல்வது சாத்தியம் என்றால், இனி பாகிஸ்தானில் யாருமே பாதுகாப்பாக இருக்க முடியாது என்றுதான் அர்த்தம்.

`நான் உன்னைக் கொல்லத்தான் போகிறேன்!’ திடுக்கிட்டு அப்படியே ஒரு கணம் நின்றுவிட்டார் மலாலா. தனக்குப் பின்னால், மிக மிக அருகிலிருந்து இந்தக் குரல் புறப்பட்டு வருவதை அவரால் உணர முடிந்தது. நடையை வேகப்படுத்தினார். `விட மாட்டேன்’ என்றபடி அந்தக் குரலும் பின்தொடர்ந்தது. ஓட்டமும் நடையுமாக மலாலா பாய்ந்து ஓடத் தொடங்கினார்.

திடீரென்று இரும்புக்கழியொன்று தலையில் வந்து விழுந்ததுபோல இருந்தது மலாலாவுக்கு. தலையில் தொடங்கிய வலி, தோள்பட்டையை வந்தடைந்து உடல் முழுவதும் பரவியது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே, உணர்ந்துகொண்டிருக்கும்போதே கிளைகள் பரப்பி, வலி வேகமாக நான்கு கால்களால் பாயத் தொடங்கியது. மிதமிஞ்சிய எரிச்சலாக அந்த வலி உருமாறுவதையும் தலை கொஞ்சம் கொஞ்சமாக வெடித்துத் தகர்ந்து கொண்டிருப்பதையும் மலாலாவால் உணர முடிந்தது.

`உன் நெற்றிப்பொட்டில் உரசியபடி குண்டு பாய்ந்து சென்றிருக்கிறது. உன் இடது கண்ணைக் கடந்து இடது தோள்பட்டையின் கீழ் பதினெட்டு அங்குலம் அளவுக்கு உள்ளே நுழைந்திருக்கிறது. அங்கேயே தங்கியும்விட்டது. இதே தோட்டா சற்றே திசை மாறி உன் இடது கண்ணைத் தாக்கி, மூளைக்குள் ஊடுருவிச் சென்றிருக்கவும் முடியும். அவ்வாறு நிகழ்ந்திருந் தால்... நல்லவேளையாக நீ பிழைத்துக் கொண்டுவிட்டாய். மலாலா, இது ஓர் அதிசயம்!’

நூல்: உரிமைக்குரல் - மலாலாவின் போராட்டக் கதை

ஆசிரியர்: மருதன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்,

சென்னை - 600 014.

தொலைபேசி:

044-42009603.

பக்கங்கள்: 152

விலை: ₹ 175