கடவுள் முதன்முதலில் படைத்த பெண் ஏவாளா? இல்லை. லிலித் (Lilith). ஆனால், லிலித் யாருக்கும் அடங்க மறுத்தாள்; கணவன் ஆதாமையே எதிர்த்துக் கேள்வி கேட்டாள். பார்த்தார் கடவுள். `இது சரிப்பட்டு வராது’ என முடிவெடுத்தார். லிலித்தை அழித்துவிட்டு, ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கினார். அவள்தான் ஏவாள். இது புராணம் சொல்லும் கதை. `புராணத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட கதை’ என்றும் சொல்லலாம். அந்த லிலித் கதாபாத்திரத்தைத் தன் சிந்தனைகளுக்கான மூல வேராக வைத்துக்கொண்டு இந்தத் தொகுப்பிலுள்ள அத்தனை கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் நவீனா. பெண்ணியச் சிந்தனைகளை வெகு ஆழமாக, தெளிவாக நம் மனத்தில் ஊன்றச் செய்யும் எளிய கட்டுரைகள்.

`பெண்ணியம் என்பது ஆண் பெண் என இருபாலருக்குமானது. ஏனெனில், `பெண்’ என்கிற கட்டமைப்பே இந்தச் சமூகத்தில் ஆண் சார்ந்துதான் இயங்கிவருகிறது. பெண்களின் பிரச்னைகள் பற்றிய புரிதல்கள் பெரும்பாலும் பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் இருக்க வேண்டியது இன்றைய நிலையில் அவசியம். ஆண்களை முற்றிலும் புறக்கணித்துப் பேசுவதாலேயே பெண்ணியக் கருத்துகள் பலவும் தோல்வியில் முடிந்திருக்கின்றன. ஒரு பெண்ணின் தாய், மனைவி, மருமகள், காதலி, மகள் என அவளின் அனைத்துப் பாத்திரங்களுமே ஆண் என்றொரு பாத்திரம் இருப்பதால்தான் நிகழ்கின்றன’ என்ற நவீனாவின் முன்னுரையே புத்தகத்துக்குள் இழுத்துச் சென்றுவிடுகிறது.

புனைவல்லாத வகைமையைத் தேர்ந்தெடுக்கும் பெண் எழுத்தாளர்கள் வெகு சொற்பம். கட்டுரையும் அந்த வகைமையில் அடங்கும். இந்த நூலில் நவீனாவின் 23 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன.

நூலிலிருந்து...

பல தாய்மார்கள், தம் மகள்களைக் குறித்துப் பேசுகையில், `என் பொண்ணு எல்லா வீட்டு வேலையிலயும் அவ்வளவு ஒத்தாசையா இருப்பா’ என்று கூறி, களிக்கக் கேட்டிருக்கிறோம். வீட்டில் எந்த வேலையிலும் உதவாமல் இருக்கும் பெண் பிள்ளைகளை, `எதற்குமே லாயக்கு இல்லாதவர்கள்’ என்று இன்னும் சில தாய்மார்கள் கரித்துக்கொட்டுவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், ஆண் பிள்ளைகளைப் பற்றிப் பேசும்போது, `என் பையன் ஸ்கூல் ஃபர்ஸ்ட், படிப்புல புலி, ஸ்போர்ட்ஸ்ல படுசுட்டி’ என்று புகழ்ந்து தள்ளுவார்கள்.

தாய்ப்பால் என்பது குழந்தைக்கான ஓர் உணவு மட்டுமல்ல; அது தாய்மையைச் சிறப்பிக்கும் ஓர் உணர்வு; அம்மாவுக்கும் குழந்தைக்குமானதொரு பந்தம். அது, இயல்பாக உருவாக வேண்டிய செயல்பாடு. பசி, தூக்கம், சிரிப்பு, அழுகைபோல முற்றிலும் அனிச்சையானது.

காய்கறிக்கடைகளுக்குப் போக எப்போதும் தயாராக இருக்கும் பெண்கள்தாம், `எனக்கு அவசர வேலை இருக்கும்மா. நீயே ஏடிஎம் போய் பணம் எடுத்துட்டு வா’ என்று சொல்லும் கணவரிடம், `அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க’ என்று மறுத்து விடுகின்றனர்.

தீயில் இறங்கச் சொன்ன ராமனிடம், `முடியாது’ என்று சீதை சொன்னதாகப் பதிவு இல்லை. தன்மானத்துக்கு வந்த இழுக்கை நெருப்பில் இறங்கியாவது சரிசெய்துவிடத்தான் அந்தப் பெண் எண்ணினாள். கணவன் தன்மீது நம்பிக்கையை இழந்துவிட்டான் என்கிற பேரிடிக்குப் பிறகும் அவள் ராமனின் கட்டளையை நிராகரிக்கவில்லை.

ஒரு பெண், தான் விரும்பிய எந்த ஓர் இளைஞனையும் திருமணம் செய்துவிடச் சமூகம் அவ்வளவு எளிதில் அனுமதிப்பதில்லை. அவள், அப்படி ஒரு திருமணத்துக்காக எண்ணற்ற தடைகளை உடைத்தெறிந்து வெளிவர வேண்டியிருக்கிறது.

பெருநிலங்களைப் புரட்டிப்போட்டும், பல உயிர்களை உறிஞ்சிக் குடித்தும், சொல்லொணா துயரத்தைப் பரிசளித்தும் போகும் பேரிடர்களும் பெண்கள்மீது பாரபட்சமே காட்டுகின்றன.

நூல்: லிலித்தும் ஆதாமும்

ஆசிரியர்: நவீனா

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், 6, மஹாவீர் காம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னை-600 078. அலைபேசி: 87545 07070

பக்கங்கள்: 80

விலை: `80