வீட்டை அலங்கரிப்பது யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் குறைந்த செலவில் நாமே உருவாக்குகிற அலங்காரப் பொருள் களால் வீட்டை அழகுபடுத்துவது ரசனையானது. அந்த வகையில் கண்ணாடி பாட்டில் டிசைனிங் மூலம் வீட்டுக்கான அலங்காரப் பொருள் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னை யைச் சேர்ந்த ராஜலட்சுமி.

தேவையானவை: கண்ணாடி பாட்டில் - 1, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் - 2, ஓ.ஹெச்.பி ஷீட் - 1, ஃபெவிக்கால், கத்தரிக்கோல், அக்ரலிக் பெயின்ட் - 1, அக்ரலிக் க்ளிட்டர் - 1, பிரஷ் - 1, நூல் அல்லது சணல் - அரை மீட்டர், கார்க் லைட்ஸ், டெகரேஷன் ஸ்டிக்கர்ஸ் - விருப்பத்துக்கேற்ப.

ஸ்டெப் 1: நீங்கள் டெகரேஷன் செய்ய விரும்பும் பாட்டிலை ஒரு நாள் இரவு முழுவதும் வெந்நீரில் ஊற வைக்கவும்.

ஸ்டெப் 2: பாட்டிலில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களைப் பிரித்து எடுக்கவும். பாட்டில் நீரில் ஊறியிருப்பதால் அதன்மீது ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை எளிதாகப் பிரிக்க முடியும்.

ஸ்டெப் 3: பாட்டிலை சோப், தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்துகொள்ளவும்.

ஸ்டெப் 4: ஓ.ஹெச்.பி ஷீட்டை, பாட்டிலின் மொத்த அகலத்தில் பாதி அளவுக்கு கட் செய்யவும்.

ஸ்டெப் 5: கட் செய்து வைத்துள்ள ஓ.ஹெச்.பி ஷீட்டில், உங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை ஒட்டவும்.

ஸ்டெப் 6: புகைப்படத்தைச் சுற்றி டெகரேஷன் ஸ்டிக்கர்களை ஒட்டி விருப்பத்துக்கேற்ப அழகுபடுத்தவும்.

ஸ்டெப் 7: பாட்டிலின் வெளிப்புறம் அக்ரலிக் க்ளிட்டர் பயன்படுத்தி ஹார்ட்டின் வடிவத்தில் படங்கள் வரைந்துகொள்ளவும்.

ஸ்டெப் 8: வரைந்துள்ள ஹார்ட்டினின் பகுதியில் அக்ரலிக் பெயின்ட் அடிக்கவும்.

ஸ்டெப் 9: பாட்டிலின் வாய்ப் பகுதியில் சணல் அல்லது கலர் நூல் பயன்படுத்தி படத்தில் காட்டியுள்ள படி அழகுபடுத்திக்கொள்ளவும்.

ஸ்டெப் 10: புகைப்படம் ஒட்டிய ஓ.ஹெச்.பி ஷீட்டை சுருட்டி பாட்டிலின் உள்ளே போடவும்.

ஸ்டெப் 11: இப்போது படத்தில் காட்டியுள்ளபடி கார்க் லைட்களை பாட்டிலுடன் இணைத்தால் பளபளக் கும் கண்ணாடி பாட்டில் டெகரேஷன் தயார்.