அண்மையில் ஷாப்பிங்கில் வாங்கிய பொருள்?

கீர்த்தி பாண்டியன், தியேட்டர் ஆர்டிஸ்ட்

அண்மையில் ஒரு நாடகம் உருவாக்கினேன். அதற்காகப் படிக்க `The Little Prince' என்கிற மிக முக்கியமான புத்தகம் தேவைப்பட்டது. இதை `குட்டி இளவரசன்' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்காங்க. தமிழ்ப் புத்தகத்தைக் கடையிலும், ஆங்கிலப் புத்தகத்தை ஆன்லைனிலும் வாங்கினேன். இந்தப் புத்தகம்தான் நான் அண்மையில் வாங்கிய பொருள்.

ஷாப்பிங் செய்ய பிடித்த இடம்?

கார்த்திகா கண்ணன், செய்தி வாசிப்பாளர்

ரொம்பப் பிடிச்ச இடம், சென்னை பாரிமுனைதான். எனக்கு லிப்ஸ்டிக்னா ரொம்பப் பிடிக்கும். அதுல எல்லா வகையையும் பார்த்துப் பார்த்து வாங்குவேன். பாரிஸ்ல, எனக்குப் பிடிச்ச மாதிரி நிறைய குட்டிக் குட்டி கடைங்க இருக்கு. அங்கே நிறைய கலெக்ஷன்ஸ் இருக்கும். அவ்வளவு தரமாவும் குறைவான விலையிலயும் கிடைக்கும். அதுதான் என் ஷாப்பிங் பேரடைஸ்!

பிடித்த ஷாப்பிங் மால்?

அக்ஷயா, நிகழ்ச்சித் தொகுப்பாளர்

எக்ஸ்பிரஸ் அவென்யூதாங்க... ஒரு டிரஸ் எடுக்கணும்னு வேற எந்த மாலுக்குள்ள போனாலும், அந்த அளவுக்கு திருப்தி வராது. அப்புறம் வாங்கிக்கலாம்னு வந்துடுவேன். ஆனா, EA-க்குப் போயிட்டா நிச்சயமா வாங்கிடுவேன். டிரஸ் இல்லைன்னாகூட, ஏதாவது ஒரு பொருள் வாங்கிட்டுதான் வருவேன். அது என்னன்னு தெரியலை, EA-வுல மட்டும் ஏதோ ஒரு மேஜிக் இருக்கு!

ஆன்லைன் ஷாப்பிங்?

ஸ்ரேயா அஞ்சன், நடிகை

எனக்கு ஆன்லைன் ஷாப்பிங்ல அவ்வளவா விருப்பம் கிடையாது. எனக்கு எப்போதுமே டிரையல் பார்த்து வாங்குவதுதான் பிடிக்கும். நான் அதிகம் வாங்கும் மேக்கப், காஸ்மெட்டிக்ஸ் பொருள்களை அப்படி டிரையல் பார்த்து வாங்கினால்தான் நன்றாக இருக்கும். மற்றபடி, ஆன்லைனில் எப்போதாவது நகைகள் வாங்குவேன். அவ்வளவுதான்!

உங்களுடைய ஷாப்பிங் பார்ட்னர்?

சாய் காயத்ரி, நடிகை

நான் பெரும்பாலும் ஆன்லைன்லதான் ஷாப்பிங் பண்ணுவேன். அதுதான் சுலபமா இருக்கும். எப்போதாவது பொட்டீக்ல ஷாப்பிங் பண்ணுவேன். அப்படிப் போகும்போது அம்மாவைத்தான் கூட்டிட்டுப் போவேன். அவங்க டேஸ்ட்டும் என் டேஸ்ட்டும் எப்பவும் ஒண்ணாவே இருக்கும். அம்மாவும் சரி, நானும் சரி... நிறைய கலெக்ஷன்ஸ் பார்த்து வாங்க மாட்டோம். `First impression is the best impression'னு சொல்வாங்களே... அந்த மாதிரி முதல்ல எந்தப் புடவை கண்லபடுதோ அதையே வாங்கிட்டு வந்துடுவோம். அதனால, அவங்கதான் ஷாப்பிங்ல எனக்கு சரியான பார்ட்னர்!