Published:Updated:

ஓ... பாப்பா லாலி! - #HowToPrepare

பாப்பா லாலி
பிரீமியம் ஸ்டோரி
பாப்பா லாலி

#Lifestyle

ஓ... பாப்பா லாலி! - #HowToPrepare

#Lifestyle

Published:Updated:
பாப்பா லாலி
பிரீமியம் ஸ்டோரி
பாப்பா லாலி

சரணி ராம்

கைக்குழந்தைகளுக்கு மஞ்சள் பொடி தேய்த்துக் குளிப் பாட்டுவது நம் பாரம்பர்யங்களில் ஒன்று. மஞ்சள் மிகச் சிறந்த கிருமிநாசினி என்பதால் குழந்தையின் உடலில் அலர்ஜி, அரிப்பு போன்றவை வராமல் பாதுகாக்கும்.

கடைகளில் டப்பாக்களில் அடைக்கப் பட்டு வரும் மஞ்சள்பொடியைவிட, மஞ்சளுடன் இன்னும் சில இயற்கைப் பொருள்கள் சேர்த்து நாமே அரைக்கும் பொடி, குழந்தையின் சருமத்தைப் பாதுகாத்துப் பொலிவைத் தரும்.

ஓ... பாப்பா லாலி! - #HowToPrepare

கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ஆவாரம் பூ இதழ், கோரைக்கிழங்கு தலா 100 கிராம், மஞ்சள் கிழங்கு, விரலி மஞ்சள், வெட்டி வேர் தலா 50 கிராம், காய வைத்த செம்பருத்திப்பூ, தாமரைப்பூ இதழ் தலா 10, பாதாம் 10, காயவைத்த மல்லிகைப்பூ இதழ் 10 கிராம். இந்தப் பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அவற்றை மூன்று நாள்கள் நிழலில் உலர்த்தி, மெஷினில் கொடுத்துப் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்து வந்த பொடியை சுத்தமான துணியின் மேல் கொட்டி காயவைத்து, சலித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

அன்றாடம் குழந்தையைக் குளிப்பாட்டும்போது தேவை யான அளவு எடுத்துப் பயன் படுத்திக் கொள்ளலாம். ஆண் குழந்தைகளுக்கு மஞ்சளின் அளவைக் குறைத்துப் பயன் படுத்தலாம்.