Published:Updated:

நக்சலைட் To எம்எல்ஏ... எம்எல்ஏ To முனைவர்... அனுசுயா என்ற சீதக்காவின் பயணம்!

சீதக்கா ( facebook )

11 வருடங்களாக நக்சலைட்டாக இருந்தவர், பிறகு வழக்கறிஞராக கற்றுத் தேர்ந்தார். அதன் பிறகு தெலங்கானா காங்கிரஸ் முலுகு எம்.எல்.ஏ ஆனார். அச்சமயத்தில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்த சீதக்கா, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்.

நக்சலைட் To எம்எல்ஏ... எம்எல்ஏ To முனைவர்... அனுசுயா என்ற சீதக்காவின் பயணம்!

11 வருடங்களாக நக்சலைட்டாக இருந்தவர், பிறகு வழக்கறிஞராக கற்றுத் தேர்ந்தார். அதன் பிறகு தெலங்கானா காங்கிரஸ் முலுகு எம்.எல்.ஏ ஆனார். அச்சமயத்தில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்த சீதக்கா, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்.

Published:Updated:
சீதக்கா ( facebook )

வாழ்வில் நாம் தேர்ந்தெடுக்கும் பயணங்கள், நம்மை வேறு திசைகளில் திருப்பி, நம்முடைய முன்னேற்றத்திற்கு எது நல்லதோ அதன் பக்கம் போகவிடும். அப்படிப்பட்ட ஒன்றுதான் அனுசுயா என்ற சீதக்காவின் பயணம்.

அனுசுயா சீதக்கா
அனுசுயா சீதக்கா
facebook

11 வருடங்களாக நக்சலைட்டாக இருந்தவர், பிறகு வழக்கறிஞராக கற்றுத் தேர்ந்தார். அதன் பிறகு தெலங்கானா காங்கிரஸ் கட்சி சார்பில், முலுகு எம்.எல்.ஏ ஆனார். அச்சமயத்தில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்த சீதக்கா, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்.

பசியை விரட்டியடிப்பதே தன்னுடைய முதல்பணியாக நினைத்து, உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு கொடுத்தும், ஏழைகளுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் கிடைக்கவும் வழிவகை செய்தார்.

கிட்டத்தட்ட 12 கிராமங்களுக்கு 1000 கிலோ அரிசி, காய்கறிகள், பருப்பு, உப்பு, எண்ணெய் போன்றவற்றை அவர் தலைமையிலான குழு வழங்கியதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதில், ``இது என்னுடைய கடந்த காலத்திற்கு என்னை அழைத்துச் சென்றது, அந்தச் சமயத்தில் என்னுடைய கைகளில் துப்பாக்கி இருந்தது. இப்போது அரிசியும், காய்கறிகளும் உள்ளன’’ எனப் பதிவிட்டு இருந்தார்.

எம்.எல்.ஏ ஆன பிறகும் தன்னுடைய படிப்பின் மீது ஆர்வம் குறையாத சீதக்கா, பொலிடிகல் சயின்ஸில் ஆய்வு மேற்கொண்டு தற்போது டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

பெருமிதத்துடன் இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளவர், ``என்னுடைய குழந்தைப் பருவத்தில், நான் நக்சலைட்டாக இருப்பேன் என்று நினைத்ததில்லை; நக்சலைட்டாக இருந்தபோது வழக்கறிஞராக இருப்பேன் என நினைத்ததில்லை; வழக்கறிஞராக இருந்தபோது, எம்.எல்.ஏ - வாக இருப்பேன் என்று நினைத்ததில்லை; எம்.எல்.ஏ - வாக இருக்கும் போது பி.ஹெச்டி படிப்பேன் என நினைத்ததில்லை. இப்போது நீங்கள் என்னை டாக்டர் அனுசுயா சீதக்கா என்று அழைக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார். அதோடு தன்னுடைய இலக்கை நோக்கி பயணிக்க வைத்த அவரின் பேராசிரியர்களுக்கும் கமென்ட்டில் நன்றி தெரிவித்துள்ளார்.

வாழ்த்துகள் முனைவர் அனுசுயா சீதக்கா..!