Published:Updated:

ஆணுறை தெரியும்... பெண்ணுறை அறிவீர்களா?!

பெண்ணுறை
பிரீமியம் ஸ்டோரி
பெண்ணுறை

சில ஆண்கள், பெண்களுக்கு `லாடெக்ஸ்' (Latex) வகை பிளாஸ்டிக் ஒவ்வாமை இருக்கும். அவர்களால் ஆணுறை பயன்படுத்த முடியாது.

ஆணுறை தெரியும்... பெண்ணுறை அறிவீர்களா?!

சில ஆண்கள், பெண்களுக்கு `லாடெக்ஸ்' (Latex) வகை பிளாஸ்டிக் ஒவ்வாமை இருக்கும். அவர்களால் ஆணுறை பயன்படுத்த முடியாது.

Published:Updated:
பெண்ணுறை
பிரீமியம் ஸ்டோரி
பெண்ணுறை

கருத்தடை சாதனங்களிலேயே பயன் பாட்டுக்கு மிகவும் எளிதானது என்றால், அது காண்டம்தான் (Condom). தமிழில் இதனை ‘ஆணுறை’ என்றே சொல்லிக் கேட்கிறோம். அதாவது, காண்டம் என்றாலே அது ஆண் களுக்குத்தான் என்கிற எண்ணம்தான் பலருக் கும் இருக்கிறது. ஆணுறையைப் போலவே பெண்களுக்கென்று பெண்ணுறை (Female condom) இருக்கிறது என்பதை அறிவீர்களா?!

நந்தினி ஏழுமலை
நந்தினி ஏழுமலை

பெண்ணுறை கண்டறியப்பட்டு 30 ஆண்டு களைக் கடந்துவிட்டது. இந்தியாவில் அதன் பயன்பாடு மிகவும் குறைந்த அளவில்தான் இருக்கிறது. சொல்லப்போனால் அப்படி ஒன்று இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. ‘`பெண்ணுறை குறித்த அறிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பெண்ணுறை பயன்பாட்டை ஊக்குவிக்க, அதன் சிறப்பம் சங்கள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து பெண்கள் அறிய வேண்டும்’’ என்று கூறும் சென்னையைச் சேர்ந்த பெண்கள் நல சிறப்பு மருத்துவர் நந்தினி ஏழுமலை, அது பற்றி விரிவாக விளக்குகிறார்.

கருத்தடைக்கு எளிமையானது.. காண்டம்!

‘’கருத்தடைக்கு மற்ற முறைகளை விட எளிதாகக் கையாளக்கூடியது, காண்டம். கருத்தடை தோல்வியில் முடிந்தால் ஆணைக் காட்டிலும் பெண்தான் அதிகம் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். ஆகவே, ஆணைவிட பெண் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

பல ஆண்களுக்கு ஆணுறை அணிந்து உறவு கொள்வதில் விருப்பம் இல்லாமல், விந்து வெளியேறும் நேரம் பார்த்து ஆணுறுப்பை எடுத்துவிடும் முறையைப் பின்பற்றுவார்கள். இது பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. இதிலும் தேவையற்ற கருத்தரிப்புகள் நிகழ்ந்து கருக்கலைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆகவே ஆணுறையைக் காட்டிலும் அதிக நன்மைகள் கொண்ட பெண்ணுறையைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

பெண்ணுறை ஏன் சிறந்தது?

சில ஆண்கள், பெண்களுக்கு `லாடெக்ஸ்' (Latex) வகை பிளாஸ்டிக் ஒவ்வாமை இருக்கும். அவர்களால் ஆணுறை பயன்படுத்த முடியாது. பல ஆண்களுக்கு, ஆணுறை அணிந்து உறவு கொள்கையில் முழுமையான இன்பம் கிடைக்கப்பெறுவதில்லை என்கிற எண்ணம் இருக் கிறது. பெண்ணுறை பயன்பாட்டில் இப்பிரச்னைகள் கிடையாது.

பெண்ணுறையில் மெலிதான பிளாஸ்டிக் (Polyurethane) பயன்படுத்தப் படுவதால் லாடெக்ஸ் ஒவ்வாமை இருப்பவர் களுக்கும் பிரச்னை இல்லை; உறவு சார்ந்த இன்பம் இருபாலினருக்கும் ஆணுறையை விட பெண்ணுறையில் அதிகம் கிடைக்கும்.

பெண்ணுறை மிக மெலிதாக இருப்பதால் உராய்வுத்தன்மையை ஆண் நன்கு உணர முடியும். ஆணுறையைப் பொறுத்தவரை ஃபோர் ப்ளே முடிந்த பிறகு ஆணுறுப்பு விரைத்த பின்பே அதனைப் பொருத்த முடியும். ஆனால், பெண்ணுறையை உறவு கொள்வதற்கு சில மணி நேரத்துக்கு முன் பாகவேகூடப் பொருத்திக் கொள்ளலாம்.

எப்படிப் பயன்படுத்துவது?

பெண்ணுறை என்பது குழாய் போன்றிருக்கும். அதன் இரு முனைகளிலும் உள் வளையம், வெளி வளையம் ஆகிய இரண்டு வளையங்கள் இருக்கும். உள் வளையத்தை விரல்களில் பிடித்துக் கொண்டு பெண்ணுறுப்புக்குள் நுழைத்து கர்ப்பப்பை வாய் வரை கொண்டு செலுத்த வேண்டும். வெளி வளையம் பெண்ணுறுப்பின் முகப்பில் இருக்கும். இன்று டாம்பூன் மற்றும் மென்ஸ்ட்ரேஷன் கப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனைப் பயன்படுத்தும் முறை, பெண்ணுறைக்கும் பொருந்தும்.

ஆணுறையைப் பொறுத்தவரை உறவு முடிந்த பிறகு விரைப்புத்தன்மை போய்விடும் என்பதால் அதனை உடனே அகற்ற வேண்டியிருக்கும். பெண்ணுறையில் அந்த அவசியம் இல்லை. வெளியே எடுக்கும் முறையைப் பொறுத்தவரை, பெண்ணுறைக்குள் தங்கிய விந்து சிந்திவிடாதபடி வெளி வளையத்தை முடிச்சு போடுவதைப் போல நன்றாகச் சுற்றிக்கொண்ட பிறகு உருவி எடுத்துவிடலாம்.

பால்வினை நோய் பாதுகாப்பு!

பெண்ணுறையின் வெளிவளையம் ‘க்ளிட்டோரிஸ்’ எனப்படும் பெண்ணின் உணர்ச்சியைத் தூண்டுகிற பகுதியைத் தொடுவதால் உறவின்போது அதிக இன்பம் கிடைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மட்டுமின்றி Human papillomavirus (HPV) போன்ற பால்வினைத் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. அது நாள்பட நாள்பட கர்ப்பப்பைவாய் புற்றுநோயாக உருவாகுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

பெண்ணுறை கருத்தடையை ஏற்படுத்தும் என்பதோடு பெண்ணுறுப்பை முழுவதும் சுற்றியிருப்பதால் ஆணிடமிருந்து பரவும் பால்வினைத் தொற்றிலிருந்தும் பாதுகாக்கும்.

ஆணுறை தெரியும்... பெண்ணுறை அறிவீர்களா?!

சவால்கள், பக்க விளைவுகள்!

இந்தியாவில் பெண்ணுறையின் பயன்பாடு மிகவும் குறைவு என்பதால் ஆணுறையைப் போல இது எளிதில் கிடைப்பதில்லை. பெருநகரங்களில்கூட குறிப்பிட்ட சில மருந்துக் கடைகளில் மட்டும்தான் கிடைக்கிறது. மற்றபடி ஆன்லைன் மூலம்தான் வாங்க வேண்டிய சூழல் இருக்கிறது. மேலும் ஆணுறையைவிட சற்றே விலை கூடுதலானது. பெண்ணுறை குறித்த விழிப்புணர்வும் பயன்பாடும் அதிகரிக்கும்போது அது எளிதில் கிடைப்பதோடு விலையும் குறைந்துவிடும்.

பெண்கள் இதைப் பயன்படுத்த முன் வர வேண்டும். உறவின்போது ஆண் - பெண் இருவரில் ஒருவர்தான் உறை அணிய வேண்டும். மிகவும் அரிதாக பெண்ணுறை கிழி வதற்கான வாய்ப்புள்ளது.

மற்றபடி, பெண்ணுறையில் கருத்தடையைத் தாண்டியும் பல நன்மைகள் இருப்பதாலும், பக்க விளைவுகள் குறைவாக இருப்பதாலும் இதைப் பெண்கள் தயக்கமின்றி பயன் படுத்தலாம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism