Published:Updated:

மாதம் நான்கு லட்சம் வருமானம்... - ‘மாத்தி யோசி’த்தவரின் வெற்றிக்கதை!

திவ்யா
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா

‘மாத்தி யோசி’த்தவரின் வெற்றிக்கதை!

மாதம் நான்கு லட்சம் வருமானம்... - ‘மாத்தி யோசி’த்தவரின் வெற்றிக்கதை!

‘மாத்தி யோசி’த்தவரின் வெற்றிக்கதை!

Published:Updated:
திவ்யா
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா

கைவினைக் கலைஞர், யூடியூபர், பிசினஸ் வுமன் என பல அடையாளங்களைக் கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த திவ்யா. அத்தனையிலும் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டிருப்பவர் தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

“சொந்த ஊரு ராமநாதபுரம் மாவட்டத்துல பரமக்குடி. ஊர்ல அம்மா துணிக்கடை வெச்சிருந்தாங்க. ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் அம்மாகூட சேர்ந்து கடையில வியாபாரம் பார்ப்பேன். பத்தாம் வகுப்பு விடுமுறையில பெயின்டிங், எம்பிராய்டரினு கைவேலைப் பாடுகள் செய்ய ஆரம்பிச்சேன்.

15 வருஷங்களுக்கு முன்னாடி `ஆரி'னு புதுவகையான எம்ப்ராய்டரி வேலைப்பாடு எங்க ஊர்ல அறிமுக மானபோது அதையும் கத்துக்கிட்டு என் பிளவுஸ், சுடிதார்களுக்கு டிசைன் செய்ய ஆரம்பிச்சேன். என் சுடிதார் டிசைன்களை பார்த்துட்டு, எங்க ஊர்லயே சில தோழிகள் என்கிட்ட ஆரி வொர்க் செய்யக் கத்துக்கிட்டாங்க. திருமண பிளவுஸ் களுக்கு ஆர்டர் எடுத்து டிசைன் பண்ணிக்கொடுக்க ஆரம்பிச்சேன். சின்ன ஊருங்கிறதால ஒரு பிளவுஸுக்கு 750 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரை தான் வாங்க முடியும்...’’ சுய அறிமுகம் சொல்லும் திவ்யா, எம்.பி.ஏ பட்டதாரி.

‘`கல்யாணத்துக்குப் பிறகு சென்னையில செட்டில் ஆனோம். இங்கேயும் மியூரல் பெயின்டிங், ஃபேப்ரிக் பெயின்டிங், தஞ்சாவூர் பெயின்டிங்னு நிறைய விஷயங் களைக் கத்துக்கிட்டேன். எம்.பி.ஏ படிச்சுட்டு வீட்டுல சும்மா இருக் கேன்னு அடிக்கடி வருத்தப்பட்டிருக் கேன். ‘ ஒரு நிறுவனத்துக்கு வேலைக் குப் போய்தான் அடையாளத்தை உருவாக்கணும்னு இல்ல. உன்கிட்ட கைத்தொழில் இருக்கு. திறமையை வெச்சு ஏதாவது பண்ணு’ன்னு என் கணவர் அடிக்கடி சொல்லிட்டே இருப்பார். அவர் கொடுத்த ஊக்கத் துல 2011-ம் வருஷம் ‘திவ்யா விஜய்’ங்கிற பெயர்ல ஆரி வேலைப்பாடு களுக்கான யூடியூப் சேனலை தொடங்கினோம். எந்த ஒளிவு மறைவும் இல்லாம எல்லா நுணுக்கங் களையும் தெளிவா வீடியோவுல பகிர்வதை வழக்கமா வெச்சிருக்கேன்.

மாதம் நான்கு லட்சம் வருமானம்... - ‘மாத்தி யோசி’த்தவரின் வெற்றிக்கதை!

ஆரி வேலைப்பாடுகளுக்கான பயிற்சி வகுப்புகள் எடுக்கச் சொல்லி நிறைய பேர் கேட்க ஆரம்பிச்சாங்க. வாடகை வீட்டுல குடியிருந்ததால வகுப்பெடுக்க இடவசதி இல்லை. அப்போதான் என் கணவர் ஆன்லைன்ல கத்துக் கொடுக்க லாமேன்னு ஐடியா கொடுத்தார். ஆரி ஃபிரேம் மாட்டுறதுலேருந்து, முழுமையான டிசைன் போட்டு முடிக்கிறதுவரை ஒவ்வொரு பாடத்தையும் ஒவ்வொரு வீடியோவா எடுத்து, சம்பந்தப் பட்டவங்களுக்கு மெயில் பண்ண லாம்னு யோசிச்சேன்.

பயிற்சியாளர்களுக்குன்னு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சுருவேன். முதல் வீடியோ அனுப்பினதும், அவங்க அதைச் செய்து பார்த்து, வீடியோ எடுத்து எனக்கு ஷேர் பண்ணணும். தவறு இருந்தா திரும்ப சொல்லிக்கொடுப்பேன். முதல் வீடியோவை தெளிவா முடிச்ச பிறகு தான் அடுத்த வீடியோ ஷேர் பண்ணுவேன்.

கனடா, ஆஸ்திரேலியா, நியூசி லாந்து, அமெரிக்காவிலிருந்தெல் லாம் ஆன்லைன் மூலமா என்கிட்ட ஆரி கத்துக்கிறாங்க. பெரிய முதலீடு இல்லாம, ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரம் மட்டுமே செலவிட்டு மாசத்துக்கு நான்கு லட்சம் வரை சம்பாதிக்கிறேன். ஒரு நிறுவனத்துல வேலைக்குப் போயிருந்தாகூட, இவ்வளவு சம்பளம் கிடைச்சுருக்குமான்னு தெரியாது. நம்ம திறமையை எப்படி பிசினஸா மாத்தலாம்னு கொஞ்சம் மாத்தி யோசிச்சா சக்சஸ் சாத்தியம்தான்'' என்று விடை பெறுகிறார் திவ்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism