Published:Updated:

“படிக்க வேண்டாம், அப்படியே கேட்கலாம்...” - ஒலிப்புத்தகத் துறையில் ஓஹோ வாழ்க்கை!

தீபிகா
பிரீமியம் ஸ்டோரி
News
தீபிகா

ஒலியமைப்பாளர்

சரணி ராம்

‘காலத்துக்குத் தகுந்தாற்போல் நாமும் மாறினால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் புது முயற்சியாக நான் எடுத்த ஒலிப்புத்தகங்கள் கான்செப்ட் எனக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது” - உற்சாகமாகப் பேசுகிறார் தீபிகா அருண். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு உட்பட 50-க்கும் மேற்பட்ட நூல்களை ஆடியோ வடிவில் மாற்றியுள்ள தீபிகாவிடம் பேசினோம்.

‘இன்ஜினீயரிங் படிச்சிட்டு குழந்தைகளுக்கான ஆக்ட்டிவிட்டி சென்டர் நடத்திட்டு இருக்கேன். சின்ன வயசிலிருந்து புத்தகங்கள் மீது தீராத காதல் எனக்கு. புத்தகங்கள் நம்மை ஆற்றுப்படுத்தி, பொறுமையை விதைக்கும்னு தீவிரமா நம்புறேன். சமீபத்தில் ஒலிப்புத்தகங்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டேன். புது முயற்சியாக இருந்தாலும், ஒரு புத்தகம் படிக்கும்போது கிடைக்கும் அனுபவத்தை, கேட்கும்போது உணர முடியாதுனு நினைச்சேன். ஹாரிபாட்டர் கதைகளை பல முறை படிச்சிருக்கேன். ஒரு டிரையலுக்காக ஹாரிபாட்டர் நூலை ஒலி வடிவில் கேட்டேன். அப்போதுதான் ஒலிப்புத்தகம் பற்றிய என் கருத்து தவறானதுனு புரிஞ்சுது. அந்த ஆடியோ, கதையின் தளத்துக்கே கூட்டிட்டுப் போன உணர்வு கிடைச்சுது...’ என்ற தீபிகா தமிழில் ஒலிப்புத்தகங்கள் வெளியிடத் தொடங்கிய பயணம் பற்றிப் பகிர்கிறார்.

தீபிகா
தீபிகா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“தமிழில் ஒலி வடிவில் கிடைக்கும் புத்தகங் களைத் தேட ஆரம்பிச்சேன். தமிழ் உச்சரிப்பில் பிழை, ஆடியோ கோளாறுகள், சீரான டயலாக் டெலிவரி இல்லாதது, வசனத்துக்கேற்ற உணர்வுகள் இல்லாததுனு ஒவ்வொரு பாட் காஸ்ட்டிலும் ஏதோ ஒரு குறை இருந்தது. இவற்றுக்கெல்லாம் தீர்வாக நானே ஆடியோ புத்தகங்கள் வெளியிடலாம்னு முடிவு செய் தேன். ஆடியோ ரெக்கார்டிங், எடிட்டிங், டூல்ஸ்னு பாட்காஸ்ட் சம்பந்தப்பட்ட எல்லா நுணுக்கங்களையும் கத்துக்கிட்டேன். 2019-ம் வருஷம் ‘கதை ஓசை’னு யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். காப்புரிமை பிரச்னை இல்லாத நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை பாட்காஸ்ட் பண்ணும் முயற்சிகளைக் கையில் எடுத்தேன். ஒரு நாளைக்கு ஓர் அத்தியாயம்னு வீட்டிலேயே ரெக்கார்டு பண்ணி சேனலில் அப்லோடு பண்ணினேன். குறைந்தது 75 பக்கங்களை ஆடியோவாக மாற்றுவது, எடிட்டிங் செய்வது, சேனலில் அப்லோடு பண்ணுவதுன்னு ஆறு மணிநேரம் செலவாகும். ஒவ்வோர் ஆடியோவிலும் குறைகளை நிவர்த்தி செஞ்சுட்டே வந்தேன். கடந்த ஒரு வருஷத்தில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை ஒலி வடிவில் மாத்தியிருக்கேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த லாக்டௌன் நேரத்தில் நூலகங்கள் திறக்காதது, சீரியல்கள் இல்லாதது போன்ற காரணங்களால் மக்கள் பொழுதுபோக்குக்காக ஒலிப்புத்தகங்களைக் கேட்க ஆரம்பிச்சாங்க.

என் ஆடியோ புத்தகங்களுக்கு நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வந்ததும் இணைய பக்கத்தைத் தொடங்கி குழந்தைகள், பெரியவர் களுக்கான கதைகளையும் ஆடியோவாக மாற்றி பதிவிட ஆரம்பிச்சிருக்கேன். குழந்தைகளுக்கான பாட்காஸ்ட் கதையில் என்னுடைய ஆறு வயது மகளும் பேச ஆரம்பிச்சிருக்கா. பணம் சம்பாதிக்கிறது என் நோக்கமல்ல, வாசிப்பும் நம் பாரம்பர்யமும் நிறைய மக்களைச் சென்றடையணும். அதனால் இணையத்தில் கட்டணத்தைக் கட்டாய மாக்காமல், கிரௌவுட் ஃபண்டிங் முறையில் விருப்பப்படுவோர் வழங்கும் தொகையை வாங்கிக்கிறேன். இந்த முயற்சி பார்வை யற்றவர்கள், முதியவர்கள்னு பலருக்கும் பயனுள்ளதாக இருக்குனு பாராட்டுறாங்க.

‘ ஸ்டோரி டெல்’ எனும் ஸ்வீடன் ஆடியோ புக் நிறுவனம் நிறைய மொழிகளில் இருக்கும் புத்தகங்களை ஆடியோவாக மாற்றி உலகம் முழுவதும் கொண்டுபோறது தெரிஞ்சுது. என் பயணத்தின் அடுத்தகட்டமாகத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை எழுத்தாளர்களின் ஒப்புதலுடன் ஒலிப்புத்தகங்களாக மாற்றி அந்த நிறுவனத்துக்குக் கொடுத்துட்டு இருக்கேன். என் ஆடியோவைக் கேட்டுட்டு சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களே என்னை தொடர்புகொண்டு, ‘எங்களின் எண்ண ஓட்டத்தை அப்படியே ஆடியோவில் கொண்டு வந்துருக்கீங்க’னு சொல்லும்போது சந்தோஷமா இருக்கு. இப்போ என்னுடன் நிறைய வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் இணைஞ்சிருக்காங்க. இன்னும் நிறைய புத்தகங்களை ஒலி வடிவில் மாற்றி அதிக மக்களைச் சென்றடையும் எண்ணத் தோடு பயணம் தொடருது’ என்ற தீபிகா ஆடியோ புத்தகத் துறையிலுள்ள வாய்ப்புகளையும் பகிர்ந்துகொள்கிறார்.

``மக்களிடம் படிக்கும் பழக்கம் குறைந்து வருவதால் உலகம் முழுவதும் ஆடியோ புத்தகங்களுக்கான தேவை அதிகரிச்சிருக்கு. ஒரு புத்தகத்தை பாட்காஸ்ட் பண்ணும்போது ஸ்டூடியோ வேண்டும் என்ற அவசியமில்லை தரமான மைக், அமைதியான அறை இருந்தாலே போதும். எழுத்தாளர்களின் கருத்தில் எந்த மாற்றமும் கொண்டு வரக் கூடாது, சரியான தமிழ் உச்சரிப்பு, சீரான வேகம், இவற்றைக் கடைப்பிடித்தால் ஒலிப்புத்தகத் தயாரிப்பு துறையில் எளிதில் வெற்றி பெறலாம்” என்றார் தீபிகா.