Published:Updated:

“பெண் இயக்குநர்ங்குற லேபிள் பிடிக்கலை!” - இயக்குநர் மதுமிதா

மதுமிதா
பிரீமியம் ஸ்டோரி
மதுமிதா

பெண் இயக்குநர்ங்கிற லேபிளே எனக்குப் பிடிக்கலை. நாங்களும் திரைப்பட இயக்கு நர்கள் தான். பெண்களுக்கான பிரதிநிதித்துவம் தர வேண்டிய இடங்களில் தரணும்

“பெண் இயக்குநர்ங்குற லேபிள் பிடிக்கலை!” - இயக்குநர் மதுமிதா

பெண் இயக்குநர்ங்கிற லேபிளே எனக்குப் பிடிக்கலை. நாங்களும் திரைப்பட இயக்கு நர்கள் தான். பெண்களுக்கான பிரதிநிதித்துவம் தர வேண்டிய இடங்களில் தரணும்

Published:Updated:
மதுமிதா
பிரீமியம் ஸ்டோரி
மதுமிதா

மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அங்கமாலி டைரீஸ்’ திரைப்படத்தின் கதையைத் தழுவி இந்தியில் படம் இயக்கி வருகிறார் மதுமிதா. ‘வல்லமை தாராயோ’ திரைப்படத்தின் மூலம் 2008-ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர், 2019-ம் ஆண்டு வெளிவந்த ‘கே.டி என்கிற கருப்புதுரை’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றார். கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென் றிருக்கும் மதுமிதாவிடம் பேசினோம்...

“சென்னையில பிறந்தாலும் வளர்ந்தது இந்தோனேஷியாவுலதான். வெளிநாட்டுல வாழுறதால தமிழ் மொழியோட பரிச்சயம் இல்லாம போயிடுமோங்குற பயம் அப்பாவுக்கு இருந்ததால நிறைய தமிழ்ப்படங்களோட கேசட்டுகளை வாங்கி வைப்பார். அப்படி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களோட படங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். சினிமா மேல உண்டான ஆர்வம் காரணமா, சிங்கப்பூர்ல நான்கு ஆண்டுகள் மல்டிமீடியா படிச்சேன். அமெரிக்காவுல திரைப் பட இயக்கம் தொடர்பா முதுநிலை படிச்சேன். தமிழ்ல திரைப்படம் இயக்கணும்ங்கிற நோக்கத்தோட 2007-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன்” என்கிறார். இயக்குநர் கௌதம் மேனனின் உதவியாளராக ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திரைப் படத்தில் ஒரு ஷெட்யூல் மட்டும் வேலை பார்த்ததாகக் கூறும் மதுமிதா, 22 வயதில் தனது முதல் படத்தை இயக்கி யிருக்கிறார்.

“பெண் இயக்குநர்ங்குற லேபிள் பிடிக்கலை!” - இயக்குநர் மதுமிதா

“நான் திரைப்பட இயக்குநராகுறதுக்கு என் பெற்றோர் ரொம்பவும் உறுதுணையா இருந் தாங்க. என் முதல் இரண்டு படங்களான ‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’ படங்களை அவங்களே தயாரிச் சாங்க. என் கணவர், மாமனார், மாமியார்னு எல்லோருமே என் திரைப் பயணத்தை ஊக்கப்படுத்தறவங்களா அமைஞ்சது பெரிய வரம்” என்றவர் திரைத்துறையில் நிலவும் பாலின வேறுபாடு குறித்துப் பேசினார்...

“பெண் இயக்குநர்ங்கிற லேபிளே எனக்குப் பிடிக்கலை. நாங்களும் திரைப்பட இயக்கு நர்கள் தான். பெண்களுக்கான பிரதிநிதித்துவம் தர வேண்டிய இடங்களில் தரணும். திரைத் துறையைப் பொறுத்தவரைக்கும் அது தேவையில்லை. சிறந்த பெண் இயக்குநர்னு சொல்லி விருது வழங்குறதுகூட பாலின வேறுபாட்டை ஊக்கப்படுத்துற மாதிரிதான். ஒவ்வொரு திரைப்படமும் பலரோட பங்களிப் பில்தான் உருவாகுது. பெரிய குழுவை ஒருங்கிணைச்சு ஒரு படம் பண்ணுற இயக்கு நரோட ஆளுமையை மட்டும்தான் பார்க்கணுமே தவிர, ஆணா பெண்ணான்னு பார்க்கக் கூடாது.

“பெண் இயக்குநர்ங்குற லேபிள் பிடிக்கலை!” - இயக்குநர் மதுமிதா
“பெண் இயக்குநர்ங்குற லேபிள் பிடிக்கலை!” - இயக்குநர் மதுமிதா

‘வல்லமை தாராயோ’ பட பாடல் காட்சிக்காக கொடைக்கானல் போயிருந்தோம். மலை மேல ஏறி ஒரு ஷாட் எடுக்க வேண்டியிருந்தது. ஒளிப்பதிவாளர் ராஜராஜன் சார் ``மேம் நீங்க இங்கயே இருங்க நாங்க போய் எடுத்துட்டு வரோம்”னு சொன்னார். ஒரு பொண்ணை எதுக்கு ரிஸ்க்கான மலைமேல ஏற விடணும்னு அவர் நினைச்சார். இயக்குநரான நான் ஷாட்டை ஓகே பண்ணாம நீங்க எப்படி ஷூட் பண்ணிட்டு வருவீங்கன்னு கேட்டு ஏறிப்போனேன். குறைந்தபட்சம் 60 நாள்கள் குடும்பத்தை விட்டுட்டுப் போய் ஒரு படத்தை எடுக்கிறோம். ஆண் இயக்குநர் களுக்கு இருக்கிற அதே சவால்தான் எங்களுக்கும் இருக்கு. ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தைத் தழுவி இந்தி யில் படம் இயக்குறேன்ங்கிற செய்தி வெளியானதுமே வன்முறை நிறைஞ்ச அந்தப் படத்தை எப்படி ஒரு பெண் இயக்குநரால எடுக்க முடியும்னு கேட்டாங்க. ஏன் ஆண் இயக்குநர்கள் மென்மையான உணர்வுகளைப் பிரதிபலிக்கிற படங்களைப் பண்ணதே இல்லையா? இந்தப் பொதுவான கருத்து இன்னும் இருக்கு. திரைத்துறையில பெண்களுக்கு பாதுகாப்பில்லைங்குற கருத்தும் இருக்கு. எல்லாத் துறையிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லைங்கிற மோசமான சூழல்ல திரைத்துறையை மட்டும் சொல்லக்கூடாது. இந்த நிலை இன்னிக்கு மாறிட்டு வருது. எத்தனையோ பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் திரைத் துறையில் சாதனை பண்ணிக்கிட்டிருக் காங்க” என்றவரிடம் திரைப்பட இயக்குநராக நெகிழ்ந்த தருணம் குறித்துக் கேட்டோம்.

“பெண் இயக்குநர்ங்குற லேபிள் பிடிக்கலை!” - இயக்குநர் மதுமிதா
“பெண் இயக்குநர்ங்குற லேபிள் பிடிக்கலை!” - இயக்குநர் மதுமிதா
narendran
“பெண் இயக்குநர்ங்குற லேபிள் பிடிக்கலை!” - இயக்குநர் மதுமிதா
narendran

“ `கே.டி என்கிற கருப்புதுரை’ படத்தோட முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்தோம். எனக்கு தியேட்டர் உள்ள உட்கார்ந்து பார்க்குற அளவுக்கு தைரியம் இல்லாம வெளியே வந்துட்டேன். இடை வேளைக்கு அப்புறம் போய்ப் பார்த்தேன் ‘அடி அடி அடி ஆத்தி’ங்குற பாட்டுக்கு பார்வையாளர்கள் எல்லோரும் கத்தி ஆர்ப்பரிச்சாங்க. படம் முடிஞ்சதும் எழுந்து நின்னு கைதட்டினாங்க. நான் சரியான துறையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கேன்னு நினைச்சு நெகிழ்ந்த தருணம் அது” என்கிறார் மதுமிதா.