Published:Updated:

சுக மருத்துவர்: பொறுமை இருந்தால் சுகப்பிரசவம் சாத்தியம்!

சியாமளா நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
சியாமளா நாகராஜன்

சேவை மருத்துவர் சியாமளா நாகராஜன்

சுக மருத்துவர்: பொறுமை இருந்தால் சுகப்பிரசவம் சாத்தியம்!

சேவை மருத்துவர் சியாமளா நாகராஜன்

Published:Updated:
சியாமளா நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
சியாமளா நாகராஜன்
பிரசவ வலி... ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்கும் இன்ப வேதனை. நாளும் நல்ல நேரமும் பார்த்து அறுத்தெடுக்கப்படுகிற பிரசவங்களில் அந்த வலியும் வேதனையும்கூட செயற்கையானதாக மாறிவிடுகின்றன. சுகப்பிரசவம் என்ற பெயரிலேயே இருக்கும் சுகத்தை இந்தத் தலைமுறைப் பெண்கள் பலரும் தவறவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுகப்பிரசவத்துக்குக் காத்திருக்கவோ, வழிகாட்டவோ பல வீடுகளில் பெரியவர்கள் இல்லை இன்று. இந்த நிலையில் தன்னுடைய கனிவான கவனிப்பாலும் அன்பான அறிவுரைகளாலும் கர்ப்பிணிகளை சுகப்பிரசவத்துக்குத் தயார்படுத்துவதை, அதைச் சாத்தியப்படுத்துவதைக் கொள்கையாகக்கொண்டு இயங்கிவருகிறார் சேலத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சியாமளா நாகராஜன்.

கடந்த சுதந்திர தினத்தன்று, தமிழக அரசு வழங்கிய ‘சிறந்த மருத்துவர் விருது’ பெற்றிருக்கும் டாக்டர் சியாமளா, ஏழைகளுக்கு இலவச மருத்துவம், மலைக்கிராமங்களைத் தத்தெடுத்து உதவிகள் செய்வது என சேலத்தில் சேவைகளுக்குப் பிரபலமானவர்.

‘‘1974-ல் கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஆர்.ரெட்டிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக என் பணியைத் தொடங்கினேன். தொடர்ந்து, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு மருத்துவம் முடித்தேன். பிறகு, முழுநேர மகப்பேறு மருத்துவரானேன். சேலம், ஆத்தூர், தர்மபுரி எனப் பல அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்த பிறகு, சேலம் மாவட்ட பயிற்சி அலுவலராகப் பதவி உயர்வு பெற்றேன்.

20 ஆண்டுகள் அரசுப் பணியிலிருந்துவிட்டு, 1994-ல் விருப்ப ஓய்வு பெற்றேன். தொடர்ந்து சேலம் ஜங்ஷன் பகுதியில் ‘மெடிக்கல் சென்டர்’ என்ற பெயரில் க்ளினிக் தொடங்கி ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மருத்துவம் பார்த்தேன். இந்த 30 வருடங்களில் 10,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறேன். இதில், தாய்மார்களின் உடல்நிலைக் காரணங்களால் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன். மற்ற அனைவருக்கும் சுகப்பிரசவம்’’ - புருவங்களை உயர்த்த வைக்கிறார்.

‘`பிரசவம் என்பது மகிழ்ச்சியும் வலியும் நிறைந்த தருணம். அந்தத் தருணத்தில் பெண்ணின் உடல் கடுமையான மாற்றங்களுக்கு உட்படும். அதனால் கர்ப்பகாலத்தில் பெண்கள் நல்ல சத்துள்ள உணவுகள், முறையான உடற்பயிற்சி, மருத்துவக் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.

சுக  மருத்துவர்: பொறுமை இருந்தால் சுகப்பிரசவம் சாத்தியம்!

அந்தக் காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள். சத்தான, ரசாயனக் கலப்பில்லாத உணவுகளை உட்கொண்டார்கள். கடினமாக உழைத்தார்கள். மனவலிமையும் உடல்வலிமையும் இருந்ததால் சுகப்பிரசவங்கள் இயல்பாக நடந்தன. அதேநேரம், சிக்கலான பிரசவங்களில் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றும் அளவுக்கு அப்போது மருத்துவ வசதிகள் இல்லாததால், தாய் சேய் மரணங்களும் அதிகமாக இருந்தன. இந்தக் காலத்துப் பெண்களுக்கு உணவில் சத்தான உணவுகள் கிடைப்பதில்லை. உடற்பயிற்சியும் கிடையாது. அதனால் பிரசவத்தை எதிர்கொள்ளும் மனவலிமையும் உடல்வலிமையும் அவர்களுக்குக் குறைவாக இருக்கின்றன. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்தால் நிச்சயம் சுகப்பிரசவம் நடக்கும்’’ என்று நம்பிக்கை தருகிறார் சியாமளா நாகராஜன்.

சியாமளா நாகராஜன்
சியாமளா நாகராஜன்

30 வருடங்களில் 10,000 பிரசவங்கள், பெரும்பாலும் சுகப்பிரசவங்கள்... எப்படிச் சாத்தியமானது?

``தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தான நிலை இல்லையென்று தெரிந்து விட்ட நிலையில் பிரசவ அறையில் பொறுமையைக் கையாண்டால் போதும். நிச்சயம் சுகப்பிரசவமே!’’

- பொறுமையோடும் பொறுப் போடும் சொல்கிறார் சேவை மருத்துவர் சியாமளா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism