பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் கயவர்களைக் கண்டுபிடிப்பது பற்றி சென்ற இதழ்களில் பார்த்தோம். கவனமாக இருந்தும்கூட, கயவர்களிடம் சிக்கிக்கொண்டு வன்முறைக்குள்ளான குழந்தைகள் உடல் மற்றும் மன ரீதியாகப்படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. தனக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்ல முடியாத அந்த மனநிலையிலிருந்தும், அது தரும் தொடர் மன அழுத்தத்திலிருந்தும் குழந்தையை மீட்டெடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளான குழந்தைகளிடம் காணப்படும் சில பொதுவான அறிகுறிகள் பெற்றோருக்கு குறிப்புகள் கொடுக்கும். வயதுவாரியாக அந்த அறிகுறிகள் வேறுபடும்.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள்

அவர்களது வளர்ச்சி பாதிக்கப்படும். நன்றாகப் பேசக்கூடிய குழந்தைகள் என்றால் பேச்சுத் திறனில் மந்தநிலை தெரியும். வேறு ஏதேனும் திறமைகளைக் கற்றுக்கொண்ட குழந்தைகள் என்றால் அந்தத் திறமைகள் பின்னுக்குப் போகும். சிறுநீர் கழிக்கக் கற்றுக்கொண்ட குழந்தைகளுக்கு மீண்டும் அது பிரச்னையாகும். வயிற்றுவலி, உடல்வலி, காய்ச்சல் எனப் பல பாதிப்புகளை அந்தக் குழந்தைகள் குறிப்பிடலாம். மற்றவர்களைக் கடிக்கலாம், கோபப்படலாம், அழலாம், முன் எப்போதும் இல்லாதபடி திடீரென வித்தியாச உணர்வுகளை வெளிப்படுத்தலாம். தூக்கத்தில் விழித்து பயந்து அழலாம். தூக்கம், உணவு போன்றவற்றிலிருந்த ஒழுங்குமுறை மாறலாம். அம்மாவைப் பிரிந்திருக்கப் பழகிய குழந்தை, திடீரென அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையை வெளிப்படுத்தலாம். சமாதானமே செய்ய முடியாத அளவுக்கு அதிகமாக அழலாம்.

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள்...

நன்றாகப் பேசிக்கொண்டிருந்த குழந்தைகள் திடீரென குழந்தைத்தனமாக, வயதுக்குக் குறைவான பக்குவத்தில் பேசுவதைப் பார்க்கலாம்.

தூக்கத்தில் கனவு கண்டு மிரளலாம்.தூங்கும்போது அம்மாவையோ, அப்பாவையோ பிடித்துக்கொள்ளலாம். தூக்கம் வராமல் அவதிப்படலாம்.

வயிறு வலிப்பதாகச் சொல்லலாம். கோபம், பயம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தலாம். மற்றவர்களை அடிப்பது, கிள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

அதீதமாக அழலாம்.

மற்றவர்களுடன் பேச மறுக்கலாம்.

படிப்பில் கவனத்தைக் குவிக்க முடியாமல் திணறலாம். புதிய விஷங்களைக் கற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறலாம்.

உறுப்புகளைத் தொட்டுக் கொண்டே இருக்கலாம். உறுப்புகளைக் குறிப்பிடத் தவறான வார்த்தைகளை உச்சரிக்கலாம்.

பெற்றோரிடம் வெளிப்படையாகப் பேசாமல் ரகசியம் காக்கலாம்.

புதிதாக அறிமுகமான நபர்களைப் பற்றிப் பேசலாம்.

மன முதிர்ச்சியில் பின்தங்கலாம்.

விடலைப்பருவத்தினர்...

படிப்பில் பின்தங்குவார்கள். முதல் ரேங்க் வாங்கிய குழந்தை, 20, 30-வது ரேங்க் வாங்கும்.

போதை மருந்துகளுக்கு அடிமையாவது, திருடுவது, பொய் சொல்வது, தற்கொலை முயற்சிகளைச் செய்வது, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வது, குடும்ப நபர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது, ஹேர் ஸ்டைல் உள்ளிட்ட பல விஷயங்களை மாற்றிக்கொள்வது, பாலியல்ரீதியான விஷயங்களில் அதிக ஆர்வத்தைக் காட்டுவது, அதிக நேரம் தூங்குவது, அதிகம் சாப்பிடுவது, எடை அதிகரிப்பது அல்லது குறைவது, அதிக கோபம், எல்லோருடனும் சண்டை போடுவது, வாழ்க்கையில் விரக்திநிலை போன்றவற்றை இந்தக் குழந்தைகளிடம் பார்க்கலாம்.

எந்த வயதினராக இருந்தாலும் உடலளவிலும் இந்தக் குழந்தைகளுக்கு மாற்றங்கள் இருக்கலாம். அந்தரங்க உறுப்புகள் வீங்கியிருக்கலாம். சிறுசிறு காயங்கள் தென்படலாம், ரத்தம் வரலாம். ஆசனவாய் மற்றும் பிறப்புறுப்பில் புண்கள் காணப்படலாம். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருப்பதாகச் சொல்லலாம். அந்த இடத்தில் கிருமித் தொற்றுகள் வந்திருக்கலாம். குழந்தைகளிடம் தென்படுகிற இந்த உடலியல், உளவியல் மாற்றங்களைக் கண்டுபிடித்து, அவர்களை ஆற்றுப்படுத்தி, மருத்துவ சிகிச்சைகள் கொடுத்துத் தேற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுடையது.

பெற்றோருக்குச் சில அறிவுரைகள்

உங்கள் குழந்தையிடம் ஏதேனும் அபாய அறிகுறி தென்பட்டால் கவனம் செலுத்துங்கள், பெரியவர்கள் யாராவது உங்கள் குழந்தையிடம் தவறாக நடந்து கொள்வதாகத் தெரிந்தாலோ, சந்தேகப்பட்டாலோ நீங்கள் தலையிடத் தயங்காதீர்கள். இந்த நிலையில் உங்கள் குழந்தைக்கு உங்கள் உதவி மிகமிக அவசியம், அவசரம்.

குழந்தைகள் பேச்சுக்குக் காது கொடுங்கள்... அவர்கள் பாலியல் அத்துமீறல்களில் பாதிக்கப் பட்டிருப்பது தெரிந்தால் உடனடியாக காவல்துறையின் உதவியை நாடுங்கள்.

சிக்கலான விஷயங்களையும் குழந்தை களிடம் பேசுங்கள். சிக்கலான, தர்மசங்கடமான விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்கத் தயங்குவதால் நம்மூரில் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.

குழந்தைகள் பேசுவதை அமைதியாகக் கேளுங்கள். ‘நீ சரி இல்லை.. தப்பான ஆள் கூட பழகிட்டே...’ என்ற மாதிரி எந்த வார்த்தை களையும் பயன்படுத்தாமல் கேளுங்கள்.

நம் உடலிலுள்ள எல்லா உறுப்புகளையும் பற்றிக் குழந்தைகளிடம் பேசுங்கள். கண்கள், காதுகள், கைகால்கள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பதைப் போல பாலியல் உறுப்புகளைப் பற்றியும் அவற்றின் சரியான பெயர்களோடு சொல்லிக்கொடுங்கள். அப்படிச் சொல்லிக் கொடுக்காதபட்சத்தில் பின்னாளில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும்போது தனக்கு என்ன நடந்தது என்பது புரியாமல் குழந்தை குழப்பத்துக்குள்ளாகி நடந்த விஷயங்களைத் தப்பும் தவறுமாகச் சொல்லக்கூடும்.

பாலியல் உறுப்புகளை யார், எப்போது தொடலாம் என்று சொல்லிக்கொடுங்கள். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவக் காரணங்களுக்காகத் தொடலாம் என்று புரியவையுங்கள். நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என வேறு யாரும் அவற்றைத் தொட அனுமதிக்கக் கூடாது, மீறித் தொட முயன்றால் பெற்றோரிடம் உடனே சொல்ல வேண்டும் என்றும் கற்றுக்கொடுங்கள்.

இணையதளத்தை எப்படி முறையாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது என்பதையும் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகள் எத்தனை மணி நேரம் செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் நேரத்தைச் செலவழிக்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும். தடைசெய்ய படவேண்டிய, ஆபாசமான இணையதளங்கள் ஏராளமாக உள்ளன. குழந்தைகள் அவற்றை டவுன்லோடு செய்வதையும், விவரம் தெரியாமல் பார்ப்பதையும் தடுக்க வேண்டும். உலக அளவில் பதின் பருவத்தை எட்டாத பள்ளி செல்லும் குழந்தைகள் ஆபாசப்படங்களை அதிகம் பார்ப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. எனவே பெற்றோர் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். அவர்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு.