Election bannerElection banner
Published:Updated:

`மங்கையராய் பிறப்பதற்கே..!' - Dr.சுதா சேஷய்யனின் பெண்கள் தின சிறப்புரை #AvalVikatan

பெண்கள் தின சிறப்புரை
பெண்கள் தின சிறப்புரை

மார்ச் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 முதல் 5.30 மணி வரை வெபினார் நிகழ்வு நடைபெறும்.

ஐக்கிய நாடுகள் சபை 1975-ம் ஆண்டு முதல் மார்ச் 8-ம் தேதியை சர்வதேசப் பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது. வேலை நேரத்தைக் குறைப்பது, அடிப்படை சம்பள உயர்வு, வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கேட்டு நியூயார்க்கில் 15,000 பெண்கள் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி நடத்திய மாபெரும் பேரணியால் உருவானதுதான் பெண்கள் தினம்.

women's day
women's day
பெண்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? - பிரபலங்கள் பங்கேற்கும் அரசியல் அலசல் நிகழ்ச்சி!

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் உலகமே உழன்று கொண்டிருக்கும் நேரத்திலும் முன்களப் பணியாளர்கள் தொடங்கி அனைத்துத் துறையிலும் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. கண்ணுக்குத் தெரியாத வைரஸோடு போராடி உயர்நீத்தவர்களில் பெண்களும் அதிகம்.

இந்தச் சூழலில் 2021-ம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் 'பெண்களின் தலைமைப்பண்பு: கோவிட்-19 உலகில் அனைவருக்கும் சமமான எதிர்காலத்தை அடைவோம்!' என ஐ.நா. அறிவித்துள்ளது. பெண்கள் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் சார்பில் 'மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா...!' என்ற சிறப்பு நிகழ்வு ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

Dr Sudha Seshayyan
Dr Sudha Seshayyan
`உங்கள் கர்ப்பப்பை ஆரோக்கியமாக உள்ளதா?' - அவள் விகடனின் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

மார்ச் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 முதல் 5.30 மணி வரை வெபினார் நிகழ்வு நடைபெறும். ஐ.நாவின் கருப்பொருளைப் பறைசாற்றுவதைப் போல் தலைமைப்பண்பில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. சுதா சேஷய்யன் நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

அறிவியலும் ஆன்மிகமும் கலந்த ஆளுமை, சுதா சேஷய்யன் தற்போது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். உடற்கூறியல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். தேசிய மருத்துவ கமிஷனின் உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார். இலக்கியம், ஆன்மிகம்,அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட பலதுறைகளில் வித்தகர்.

Women's day special lecture
Women's day special lecture

இந்த நிகழ்வில் பங்கேற்க முன்பதிவு அவசியம். கட்டணமில்லா வெபினாரில் கலந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு