Published:Updated:

‘பொருளாதார பெண்ணியம்’ தெரியுமா?

‘பொருளாதார பெண்ணியம்’ தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
‘பொருளாதார பெண்ணியம்’ தெரியுமா?

வங்கிக்குச் செல்வது, இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டுவதில் ஆரம்பித்து காலத்துக் கேற்றபடி ஜி பே, போன் பே வரை சுயமாகப் பயன்படுத்த வேண்டும்

பெண்ணியம் தெரியும். ‘பொருளாதார பெண் ணியம்’ பற்றித் தெரியுமா? நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் சொல் வதைக் கேளுங்கள்.

``உங்களுடைய வரவு, செலவு, முதலீடு ஆகிய மூன்றையும் யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே நிர்வகிப்பதுதான் பொருளாதார பெண்ணியம்.

லலிதா ஜெயபாலன்
லலிதா ஜெயபாலன்

பேசினால் கிடைப்பவை!

இந்தியாவில் மட்டுமல்ல... வளர்ந்த நாடு களில்கூட ஒரே தன்மைகொண்ட வேலைக்கு ஆணுக்குக் கூடுதல் சம்பளம், பெண்ணுக்குக் குறைந்த சம்பளம் என்ற பாகுபாடு இருக்கிறது. திருமணம், குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு போன்ற காரணங்களுக்காக பிரேக் எடுத்து விட்டு, மறுபடியும் வேலைக்குச் செல்லும் போது, சில சதவிகிதம் வரை சம்பளம் குறை கிறது. பெண்கள் பேசினால் மட்டுமே இந்த இரண்டு பிரச்னைகளும் தீரும்.

தெரிந்துகொள்ள வேண்டியவை!

`பே ஸ்லிப்'பில் இருக்கிற நெட் சேலரி, கிராஸ் சேலரி மட்டுமே தெரிந்து கொள்ளாமல், என்னென்ன அலவன்ஸ் வழங்கப்படுகின்றன, ஆபீஸ் நிர்வாகம் உங்கள் பதவிக்குச் சரியான பணத்தைத் தான் வழங்குகிறதா, பி.எஃப் எவ்வளவு பிடிக்கப்படுகிறது உள்ளிட்ட அத்தனை விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

‘பொருளாதார பெண்ணியம்’ தெரியுமா?

நிர்வகிக்க வேண்டியவை!

வங்கிக்குச் செல்வது, இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டுவதில் ஆரம்பித்து காலத்துக் கேற்றபடி ஜி பே, போன் பே வரை சுயமாகப் பயன்படுத்த வேண்டும்.

முதுமையில் உங்களுடைய பணம் சார்ந்த அத்தனை விஷயங்களும் உங்கள் கட்டுப் பாட்டில் இருக்க வேண்டும் என்றால், அதற்கு இப்போதிருந்தே உங்களுடைய பொருளா தாரத்தை நீங்களே நிர்வகிக்க வேண்டும். அதேபோல், முதலீடு தொடர்பான விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும். இவை அத்தனையும் சேர்ந்ததுதான் பொருளாதார பெண்ணியம்'' என்கிறார்.