Published:Updated:

வேண்டாம் எங்களுக்கு வேண்டும்!

வேண்டாம்
பிரீமியம் ஸ்டோரி
வேண்டாம்

வித்தியாசம்

வேண்டாம் எங்களுக்கு வேண்டும்!

வித்தியாசம்

Published:Updated:
வேண்டாம்
பிரீமியம் ஸ்டோரி
வேண்டாம்

‘ஜப்பானில் வேண்டாம்’ என இந்தக் கட்டுரைக்குத் தலைப்பு வைக்கலாம். ‘வேண்டாம், எங்களுக்கு வேண்டும்’ எனக் காத்திருக்கிறது ஜப்பான்!

‘முதல் வரியிலேயே இவ்வளவு குழப்பமா’, ‘வேணுங்கறீங்களா, வேண்டாம்கறீங்களா’ எனக் கோபப்படுகிறீர்களா?

கூல்!

‘வட்டஷிவா வேண்டாம் டோமவுஷிமாஸு. வட்டஷிவா திருத்தணி காரா கி மஷிட்டா... ஹஜிமெமஷிட்டே...’

பார்ப்பவர்களை எல்லாம் இப்படித்தான் ஜப்பானிய மொழியில் வரவேற்கிறார் அந்த இளம் பெண்.

‘`என் பெயர் வேண்டாம். நான் திருத்தணியி லிருந்து வருகிறேன். உங்களைச் சந்தித்தில் மகிழ்ச்சி’’ என்று அர்த்தமாம்.

‘என் பெயர் வேண்டாம்’ என அவர் குறிப்பிட்டது பெயரைச் சொல்வதற்கான மறுப்பல்ல; அவரது பெயரே அதுதான். அதாவது ‘வேண்டாம்’.

குன்றத்தூரிலுள்ள சி.ஐ.டி கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங்கில் இறுதி ஆண்டு படிக்கிற வேண்டாமை வரவேற்க, ஆவலோடு காத்திருக்கிறது ஜப்பான். 2020-ல் ஜப்பானிய நிறுவனமொன்றில் சாஃப்ட்வேர் இன்ஜினீய ராக வேலைக்குச் சேரவிருக்கிறார் வேண்டாம்.

கல்லூரியில் சக மாணவர்களுடன் `வேண்டாம்'...
கல்லூரியில் சக மாணவர்களுடன் `வேண்டாம்'...

‘`திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம் நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவள் நான். அப்பா, அம்மா ரெண்டு பேரும் விவசாயம் பண்றாங்க. எனக்கு ரெண்டு அக்கா, ஒரு தங்கச்சி. அடுத்தடுத்து ரெண்டு பெண் குழந்தைங்க பிறந்துட்டாங்கன்னா, ஒரு குழந்தைக்கு ‘வேண்டாம்’னு பெயர்வெச்சா, அடுத்து பிறக்கும் குழந்தை ஆணா இருக்கும்னு எங்க கிராமத்துல ஓர் ஐதீகம் உண்டு.. அதனால எனக்கு ‘வேண்டாம்’னு பெயர் வெச்சாங்க. எனக்குப் பிறகும் பெண் குழந்தை பிறந்தது வேற விஷயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யாராவது என் பெயரைக் கேட்டாங்கன்னா மறக்க மாட்டாங்க. தனித்துவமா தெரியும். அதனால ஒருகட்டத்துல என் பெயரை நானே ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிராமத்தில் அரசுப் பள்ளிக்கூடத்துலதான் ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சேன். ‘வேண்டாம்’ என்ற பெயர்ல அந்த ஊருக்குள்ளே நிறைய பேர் இருப்பாங்க. எங்களைப் பொறுத்தவரை அதுவும் ஒரு பெயர், அவ்வளவுதான். யாரும் யாரையும் கிண்டல் பண்ண மாட்டாங்க. ப்ளஸ் ஒன் படிச்சிட்டிருந்தபோது சென்னையி லேருந்து வந்திருந்த ஓர் ஆசிரியர் என் பெயரைக் கேட்டார். ‘வேண்டாம்’னு சொன்னதும், ‘இப்படிக்கூடவா பெயர் வைப்பாங்க’ன்னு கேட்டார். அவருக்கு அதுக்கு விளக்கம் கொடுத்தேன். மத்தபடி ப்ளஸ் டூ முடிக்கிறவரைக்கும் யாரும் என் பெயரைக் கேட்டுக் கிண்டல் பண்ணினதில்லை.

என் ரெண்டு அக்காக்களுக்கும் ஷன்மதி, யுவராணின்னு பெயர் வெச்சாங்க. தங்கச்சி பெயர் சரண்யா. ‘எனக்கு மட்டும் இப்படியொரு பெயர் வெச்சிருக்கீங்களே... என் பெயர் ‘வேண்டாம்’னு சொல்லும்போது எனக்கே சிரிப்பு வருதே’ன்னு அம்மா அப்பாகிட்ட சொல்லியிருக்கேன். பெயரை மாத்திடலாம்னு அப்பா முடிவு பண்ணினார். ஜோசியரைப் பார்த்து ‘கல்பனா’னு ஒரு பெயரைக்கூட செலெக்ட் பண்ணிவெச்சிருந்தார். ஆனா, அதை உடனே செய்ய முடியலை. ‘காலேஜ் முடிச்சதும் மாத்திடலாம்’னு சொன்னார். யாராவது என் பெயரைக் கேட்டாங்கன்னா மறக்க மாட்டாங்க. தனித்துவமா தெரியும். அதனால ஒருகட்டத்துல என் பெயரை நானே ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ப்ளஸ் டூவில் 1095 மார்க் வாங்கினேன். சின்ன வயசுலேருந்தே எனக்கு இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசை. ஆனா, அப்பாவுக்கு அதுக்கு வசதியில்லை. ஓர் அக்கா பி.ஏ ஆங்கில இலக்கியம் முடிச்சிருக்காங்க. இன்னோர் அக்கா பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி முடிச்சிருக்காங்க. தங்கச்சி ப்ளஸ் டூ முடிச்சிருக்கா. அக்காக்களைப் போல நானும் பி.ஏவோ, பி.எஸ்ஸியோ படிக்க வேண்டியதுதான்னு நினைச்சிட்டிருந்தேன். அப்போதான், சென்னையில சி.ஐ.டி காலேஜில் ஸ்காலர்ஷிப்பில் ஈசிஈ படிக்கும் வாய்ப்பு கிடைச்சது. காலேஜ்ல சேர வந்தபோதும், சேர்ந்த பிறகு வகுப்பிலும் என்னை அறிமுகப்படுத்திக்கிட்டபோது சிலர், வித்தியாசமா பார்த்திருக்காங்க, என் பெயருக்கான காரணம் கேட்டிருக்காங்க. சென்னை எனக்குப் புதுசு. ஹாஸ்டல் வாழ்க்கை புதுசு. ஃபிரெண்ட்ஸ், படிப்பு, சூழல்னு எல்லாமே புதுசு. ஆரம்பத்துல எல்லாத்துக்கும் பழக ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனா, நல்ல ஃபிரெண்ட்ஸ் கிடைச்சாங்க. சீக்கிரமே என்னை மாத்திக்கிட்டேன்’’ - சற்றே நீளமான அறிமுகம் தந்து தொடர்கிறார் வேண்டாம்.

வேண்டாம் எங்களுக்கு வேண்டும்!

‘`எங்க காலேஜ்ல முதல் வருஷ ஸ்டூடன்ட்ஸுக்கு லேங்வேஜ் கிளாஸ் நடக்கும். ஆங்கிலம், ஜெர்மன், ஜாப்பனீஸ்னு நிறைய சாய்ஸ் கொடுப்பாங்க. நான் ஜாப்பனீஸைத் தேர்ந்தெடுத்தேன். முதல்நாள் வகுப்பில் ‘அரிகட்டோ கொஸேமஸு’ன்னா நன்றின்னு அர்த்தம்னு சொல்லிக்கொடுத்தாங்க. அந்த வார்த்தை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. என் ஃபிரெண்ட்ஸ்கிட்ட அந்த வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல் லிட்டே இருந்தேன். ஜப்பானிய மொழி பற்றி கூகுளில் தேடினபோது, அவங்களுடைய கலாசாரம் பற்றியும் தெரியவந்தது. சக மனிதர்களுக்கு அவங்க கொடுக்கும் மரியாதை பிடிச்சிருந்தது. தலைவணங்கி வணக்கம் சொல்லும் பழக்கம் பிடிச்சது. என்னிக்காவது ஒருநாள் ஜப்பானுக்குப் போகணும்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா, அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும்னு எதிர்பார்க்கலை.

மூன்றாம் வருடப் படிப்பின்போது `ஹியூமன் ரிசோசியா'னு ஒரு ஜப்பானியக் கம்பெனியிலேருந்து கேம்பஸ் இன்டர்வியூவுக் காக வந்திருந்தாங்க. நான் அதுல செலெக்ட் ஆனேன். படிப்பை முடிச்சதும் 2020, ஆகஸ்ட் மாசம் ஜப்பான் கிளம்பறேன். அங்கே எனக்கு சாஃப்ட்வேர் வேலை காத்திட்டிருக்கு. சம்பளம் எவ்வளவு தெரியுமா... வருஷத்துக்கு 22 லட்சம்’’ - பிரமித்துச்சொல்கிறார், பிரமிக்க வைக்கிறார்.

‘`நீ எதுவாக ஆசைப்படுகிறாயோ, அப்படியே ஆகிறாய்’னு ஒரு பொன்மொழி இருக்கு. அது என் வாழ்க்கையில உண்மையாகியிருக்கு. ஜப்பானுக்குப் போகணும்னு என்னிக்கோ ஒருநாள் விளையாட்டா மனசுல தோணின ஒரு விஷயம், என்னை அறியாமலேயே மனசின் ஆழத்துல பதிஞ்சிருக்கு. அது இப்போ நனவாகியிருக்கு’’ - கனவுகள் கைகூடியவருக்கு, கடமைகளும் காத்திருக்கின்றன.

‘`ஓர் அக்காவுக்குக் கல்யாணமாயிடுச்சு. இன்னோர் அக்கா அரசாங்க வேலைக்காக முயற்சி பண்ணிட்டிருக்காங்க. தங்கச்சி படிக்கணும். எல்லாத்துக்கும் அம்மாவும் அபபாவும் விவசாயத்தை மட்டும்தான் நம்பியிருக்காங்க. நான் வேலைக்குப் போய்தான் அப்பா அம்மாவின் சுமையை இறக்கி வைக்கணும்’’ - அத்தனையும் நிறைவேற வாழ்த்தி விடைபெற்றபோது, வேண்டாம் நமக்குச் சொன்னது...

`அரிகட்டோ கொஸேமஸு!'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism