தன் கனவு கலைந்துபோனாலும், மாற்றுத்திறனாளிகளின் கனவுகள் மெய்ப்பட தன் விரல்களைத் தந்துகொண்டிருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த `எக்ஸாம் ஹெல்ப்பர்' புஷ்பா!

``நான் பத்தாவது படிச்சப்ப எங்கப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகி படுத்த படுக்கையாகிவிட, நான் படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். படிப்பு எனக்கு எப்பவும் ஏக்கமாவே இருக்க, பிறகு கரஸ்ல பி.ஏ முடிச்சேன். இதுக்கிடையே எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த பார்வையற்ற குழந்தைகளுக்கான அமைப்புக்கு அடிக்கடி போய், சின்னச் சின்ன உதவிகளைச் செய்வேன். அங்க சில குழந்தைகள், ‘அக்கா எங்களுக்கு எக்ஸாம் எழுதித் தர்றீங்களா?’னு கேட்டாங்க. அதை சந்தோஷமா ஆரம்பிச்சேன். அது வாய்மொழியா பரவி, பலரும் என்னைத் தேர்வெழுதித் தரச்சொல்லிக் கேட்க ஆரம்பிச்சாங்க’’ என்று சொல்லும் புஷ்பா, கடந்த 12 ஆண்டுகளாக பார்வையற்றோர், டவுன் சிண்ட்ரோம், செரிப்ரல் பால்ஸி பாதிப் பாளர்கள், விபத்துகளில் அடிபட்டவர்கள் என பல தரப்பட்டவர்களுக்கும் தேர்வெழுதி உதவி வருகிறார். கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் அரசுத் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், கல்லூரித் தேர்வுகள், வங்கித் தேர்வுகள் உட்பட 700-க்கும் அதிகமான தேர்வுகளை இதுவரை எழுதியிருக்கும் புஷ்பா, தன் சேவைக்காக குடியரசுத் தலைவரிடமிருந்து `நாரி சக்தி புரஸ்கார்’ விருதை சமீபத்தில் பெற்றிருக்கிறார். ரத்ததான விழிப்புணர்வு பணிகளையும் இவர் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

``நான் தேர்வெழுதிக் கொடுத்ததில் பலரும் இன்னிக்கு நல்ல பணியில் இருக்காங்க. அதை நினைத்தாலே, நான் பத்தாவதோடு பள்ளிப் படிப்பை நிறுத்தியதால் எனக்குள் தேங்கிய ஆற்றாமை எல்லாம் கரைஞ்சு போயிடும்.

நான் ஐடி கம்பெனி வேலைக்குப் போயிட்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு அப்பா இறந்துட்டதால, குடும்பச் சூழல் சிக்கலாகிடுச்சு. இப்போ புது வேலை தேடிட்டிருக்கேன். என்னால் மற்றவர்களுக்குப் பொருளுதவியோ, பண உதவியோ செய்ய இயலாது. ஆனால், தேர்வெழுதும் சேவையை மனநிறைவுடன் தொடர்வேன்.”

சபாஷ் புஷ்பா!