Published:Updated:

ஆர்.டி போடப் போறீங்களா... வங்கி, தபால் அலுவலகம்... எது பெஸ்ட்?

ஆர்.டி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.டி

#Utility

ஆர்.டி போடப் போறீங்களா... வங்கி, தபால் அலுவலகம்... எது பெஸ்ட்?

#Utility

Published:Updated:
ஆர்.டி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.டி

என். விஜயகுமார், நிதி ஆலோசகர்

குடும்பத் தலைவிகள் மற்றும் வேலை பார்க்கும் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான முதலீடுகளில் ஒன்று தொடர் சேமிப்பு திட்டம் என்கிற ரெக்கரிங் டெபாசிட் (ஆர்.டி). இந்த ஆர்.டி திட்டம் கவர்ச்சிகரமாக இருக்க முக்கிய காரணம் இதை எளிதில் ஆரம்பிக்க முடிவதுதான். புகைப்பட அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரம், பான் கார்டு, ஆதார் கார்டு இருந்தால் போதும் ஆர்.டி கணக்கை ஆரம்பித்துவிடலாம்.  

சிறிய தொகை போதும்!

பொதுவாக, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆர்.டி கணக்கை ஆரம்பிக் கலாம். மேலும், சிறிய தொகை இருந்தால்கூட முதலீட்டை ஆரம்பித்து விடலாம். இந்த ஆரம்ப முதலீடு, ரூபாய் 100, 500, 1,000 என்பதாக இருக்கும். அதிகபட்சம் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். மாதத்தில் குறிப்பிட்ட தேதியில் முதலீடு செய்வதாக இந்தச் சேமிப்பு திட்டம் இருக்கிறது. வட்டியானது தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 3.5% தொடங்கி 5.8% வரை முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 0.5% கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. காலாண்டுக்கு ஒரு முறை கூட்டு வட்டி கணக்கிடப்படும். ஆனால், வட்டி வருமானம் முதிர்வின் போதுதான் தரப்படும்.

ஆர்.டி போடப் போறீங்களா...
வங்கி, தபால் அலுவலகம்... எது பெஸ்ட்?

வங்கிகள் Vs தபால் அலுவலகம்!

ஆர்.டி கணக்கை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகத்தில் தொடங்க முடியும்.இந்தியாவில் தபால் அலுவலக ஆர்.டிதான் முதன்முதலில் அறிமுகமானது. ஆனால், அதன் பிறகு, பெரும்பாலும் அனைத்து வங்கிகளும் இந்த ஆர்.டி திட்டத்தை அறிமுகப்படுத்தவே, தபால் அலுவலக ஆர்.டி அதன் பெருமையை இழந்தது. அதற்கு மிக முக்கிய காரணம், அதன் நீண்ட முதலீட்டுக் காலம்.

முதலீட்டுக் காலம்!

தபால் அலுவலக ஆர்.டியில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வர வேண்டும். வங்கிகளில் மூன்று மாதங்களுக்குக்கூட ஆர்.டி தொடங்கலாம். அதன் பிறகு மூன்றின் மடங்குகளில் 6  மாதங்கள், 12 மாதங்கள் என 10 ஆண்டுகள் வரை தொடரலாம்.

ஆர்.டி போடப் போறீங்களா...
வங்கி, தபால் அலுவலகம்... எது பெஸ்ட்?

வட்டி வருமானம்!

வங்கிகளில் வட்டியானது, முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து ஆண்டுக்கு சுமார் 3.5 % தொடங்கி 5.5% வரை செல்கிறது. தபால் அலுவலக ஆர்.டிக்குத் தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 5.8% வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம், வங்கிகள் ஆர்.டிக்கு அளிக்கும் வட்டியைவிட சிறிது அதிகம்தான்.

குறைந்தபட்ச முதலீடு!

வங்கிகளில் குறைந்தபட்ச முதலீடு, ரூபாய் 100, 500, 1,000 என வங்கிகளைப் பொறுத்து இருக்கிறது. தபால் அலுவலக குறைந்தபட்ச முதலீடு இதற்கு முன் 10 ரூபாயாக இருந்தது. இப்போது 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு 10 ரூபாயின் மடங்குகளில் முதலீட்டை அதாவது ரூ.110, ரூ.120 இப்படி எவ்வளவு தொகையாக வேண்டுமானாலும் முதலீட்டை அதிகரித்துக்கொள்ள முடியும்.

கடன் வசதி!

தபால் அலுவலக ஆர்.டியில் ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் அதுவரை செய்திருக்கும் முதலீட்டில் 50 சதவிகிதத்தை கடனாக எடுத்துக்கொள்ள முடியும். இதற்கான வட்டி, ஆர்.டி-க்கான வட்டியைவிட 2% கூடுதலாக இருக்கிறது. இப்படி எடுத்த தொகையை மொத்தமாக அல்லது சில பகுதிகளாகத் திரும்பச் செலுத்த வேண்டும்.

வங்கிகளைப் பொறுத்தவரையில், சேர்ந்திருக்கும் தொகையில் 70% முதல் 90% வரை கடன் வாங்க முடியும்.

ஆர்.டி போடப் போறீங்களா...
வங்கி, தபால் அலுவலகம்... எது பெஸ்ட்?

முன்கூட்டியே கணக்கை முடித்தல்!

ஆர்.டி முதலீட்டை ஆரம்பித்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு, தபால் அலுவலக கணக்கை முன்கூட்டியே முடித்துக்கொள்ள முடியும். இப்படிச் செய்யும்போது அபராதம் கிடையாது. ஆனால், ஆர்.டிக்கு உரிய வட்டி தர மாட்டார்கள். தபால் அலுவலக சேமிப்பு கணக்குக்கு என்ன வட்டி (தற்போது 4%) தருவார்களோ அதுதான் கிடைக்கும். வங்கிகளிலும் முன்கூட்டியே கணக்கை முடித்தால் அபராதம் இருக்கிறது. முதலீட்டுக் காலம் மற்றும் எத்தனை நாள்களுக்கு முன்னர் கணக்கு முடிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அது அமையும்.

ஆர்.டி. முடிந்த பிறகு வங்கி மற்றும் தபால் அலுவலகத்தில் அதை நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். அப்படி நீட்டிக்கும்போது, ஆர்.டி ஆரம்பித்தபோது என்ன வட்டி இருந்ததோ, அந்த வட்டி வழங்கப்படும்.

தபால் அலுவலக ஆர்.டியில் ஆறு தவணைகள் அல்லது 12 மாத தவணைகளை முன்கூட்டியே மொத்தமாக கட்டும்பட்சத்தில் சிறிய தள்ளுபடி இருக்கிறது. இந்தச் சலுகை வங்கிகளில் கிடையாது. உங்களின் முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகள் என்கிறபட்சத்தில் தபால் அலுவலக ஆர்.டி சிறந்ததாக இருக்கும். மேலும், அதில் எவ்வளவு தொகை முதலீடு செய்தாலும் மத்திய அரசு உத்தரவாதம் உள்ளது. வங்கிகளில் ரூ.5 லட்சம் வரைதான் உத்தரவாதம் (டெபாசிட் இன்ஷூரன்ஸ் மற்றுன் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன்) உண்டு. உங்களின் முதலீட்டுக் காலம் குறைவாக இருக்கும்பட்சத்தில் வங்கிகளின் ஆர்.டி சரியான தேர்வாக இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்டு!

இந்த இரண்டுக்கும் பதில் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள `அல்ட்ரா ஷார்ட் டேர்ம்' (Ultra Short Term) டெப்ட் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். இந்த முறையில் ஆறு மாதம் தொடங்கி எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதில் மாதம் குறைந்தபட்ச எஸ்.ஐ.பி முதலீடு 100 / 500 / 1,000 ரூபாய் என நிறுவனத்தைப் பொறுத்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 6% முதல் 7% வரை முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து வருமானம் கிடைக்கும்.

இந்த முதலீட்டில் எப்போது வேண்டு மானாலும் தேவைக்குப் பணம் எடுத்துக் கொள்ளலாம். அபராதம் எதுவும் கிடையாது. மேலும், வரிக்கு பிந்தைய நிலையில் ஆர்.டி முதலீட்டைவிட ஓரிரு சதவிகிதம் கூடுதல் வருமானம் கிடைக்கும்.