Published:Updated:

`இடர்பாடுகளுக்கு மத்தியில் வெற்றி'- பாகிஸ்தானில் காவலரான முதல் இந்துப் பெண்!

ராம் பிரசாத்

சிந்து மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், முதன் முறையாகக் காவலர் தேர்வுக்கு தேர்ச்சிபெற்றுள்ளார்.

Pushpa Kolhi
Pushpa Kolhi

பாகிஸ்தான், இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழக்கூடிய நாடுகளில் ஒன்று. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். பாகிஸ்தான் அரசின் தரவுகளின்படி சுமார் 75 லட்சம் இந்துக்கள் அங்கு வசிப்பதாகக் கூறப்படுகிறது. இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கு முதன்முதலாக காவல் அதிகாரியாகப் பதவியேற்க உள்ளார். பாகிஸ்தான் காவல்துறையில் குறைந்த அளவிலே பெண்கள் பணியாற்றிவரும் வேளையில், இந்து மதத்தைச் சேர்ந்த புஷ்பா கோலி என்பவர் காவலர் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளார்.

Representation Image
Representation Image

இந்தத் தகவலை மனித உரிமைகள் ஆர்வலர் கபில் தேவ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல் துணை ஆய்வாளர்களுக்கான தேர்வு, சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்தது. இதில், சிந்து மாகாணத்தைச் சேர்ந்த புஷ்பா கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த புஷ்பா, பல்வேறு இடர்பாடுகளுக்கிடையில் இந்தத் தேர்வில் பங்கேற்றுள்ளார். தேர்வில் வெற்றிபெற்றதையடுத்து, சிந்து மாகாண காவல்துறையில் உதவி துணை ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார். சிந்து மாகாணத்தில் காவலர் பணிக்குத் தேர்வான முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம், சுமன் பவன் போதானி என்பவர் நீதிபதியாகப் பதவியேற்றார்.