Published:Updated:

ஆர்த்தி - தமிழ்நாட்டின் முதல் பெண் பவர் லிஃப்டர் ரெஃப்ரீ

ஆர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்த்தி

சாதனைப் பெண்கள்

ஆர்த்தி - தமிழ்நாட்டின் முதல் பெண் பவர் லிஃப்டர் ரெஃப்ரீ

சாதனைப் பெண்கள்

Published:Updated:
ஆர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்த்தி

வீ ட்டுக்கு வெளியே மெரூன் நிற செம்பருத்திச் செடியும் `டாக்டர் ஆர்த்தி அருண்' என்கிற பெயர்ப்பலகையும் நம்மை வரவேற்க, டிராக் சூட், தங்க மெடல்களுடன் நம்மை எதிர்கொள்கிறார் பல் மருத்துவர் கம் பவர் லிஃப்டர் ஆர்த்தி. சமீபத்தில் கனடாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் ஐந்து தங்க மெடல்கள் வென்றுவந்திருக்கும் இவர், தமிழ்நாட்டின் முதல் பெண் பவர் லிஃப்டிங் ரெஃப்ரியும்கூட!

ஆர்த்தி
ஆர்த்தி

``பூர்வீகம் ஆற்காடு. தாத்தா ரயில்வேயில் வேலைபார்த்ததால ஹைதராபாத் போயிட்டோம். பிறந்தது, படித்தது எல்லாமே அங்கே தான். மருத்துவம் படிக்கிறதுக்காக சென்னை வந்தேன். இங்கேயே கல்யாணமாகி செட்டிலாகிட்டேன்’’ என்கிற ஆர்த்தி, தன் எடையைக் குறைப்பதற்காகத்தான் முதலில் ஜிம்முக்குச் சென்றிருக்கிறார். மெதுவாக பவர் லிஃப்டிங்மீது ஈடுபாடுவர, இப்போது சாம்பியனாகவே ஆகியாச்சு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
என் கையே உடைஞ்சாலும் இந்தியாவுக்குப் போய் ரிப்பேர் பண்ணிக்கலாம்னு விடாப்பிடியா பவர் லிஃப்ட் பண்ணினேன்.

காமன்வெல்த் போட்டியின்போது காயம் ஏற்பட்டுவிட்டதாமே...

‘`யெஸ்... இந்திய பவர் லிஃப்டிங் டீமில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஒரெயொரு பவர் லிஃப்டர் நான் மட்டும்தான். டெல்லி டு கனடா, ரெண்டு நாள் ஃப்ளைட் டிராவல். உட்கார்ந்தே இருந்ததால, ரெண்டு காலும் வீங்கிடுச்சு. போட்டி தினத்துக்கு முந்தைய நாள் இரவுதான் கனடா வந்து சேர்ந்தோம். ஜெட் லாக், கொண்டுபோன ஷூவைப் போட முடியாதது, புதுசு வாங்க நேரமின்மைன்னு எல்லாம் சேர்ந்துகிட்டு, வெயிட் தூக்கறப்போ அது கழுத்து மேலேயே விழுந்துடுச்சு; கைகளும் முறுக்கிக்கிச்சு. எல்லாரும், அடுத்த ரவுண்ட்ல நான் கலந்துக்க மாட்டேன்னுதான் நினைச்சாங்க. ஆனா, என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு அடுத்த ரவுண்ட்டுல பவர் லிஃப்ட் பண்ணினேன். அந்தக் குறிப்பிட்ட போட்டியிலதான் பெஸ்ட் பர்ஃபாமரா செலக்ட் ஆனேன். என்னுடைய வலிகள் கொடுத்த வெற்றி இது’’ என்று சிரிக்கிறவர், தான் ரெஃப்ரீயாக தேர்வு செய்யப்பட்ட தருணத்தையும் பகிர்ந்துகொள்கிறார்.

ஆர்த்தி
ஆர்த்தி

‘`மேற்கு வங்காளத்துல ரெஃப்ரீ செலக்‌ஷனுக் கான போட்டி நடந்துச்சு. எக்ஸாம், வைவா, இன்டர்வியூ, அப்புறம் பிராக்டிகல் எக்ஸாம்... இதெல்லாம் க்ளியர் செஞ்சேன். தமிழ்நாட்டின் முதல் பெண் பவர் லிஃப்டிங் ரெஃப்ரீயா செலக்ட் ஆனேன். நேஷனல் லெவல்ல நடக்கிற பவர் லிஃப்டிங் போட்டிகளுக்கு இனி நானும் நடுவரா செயல்படுவேன்’’ என்கிறவரின் பேச்சிலே பெருமிதம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism