Published:Updated:

வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!

வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!
பிரீமியம் ஸ்டோரி
வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!

சமையல் என்பது உயிர்வாழ அடிப்படை, அது ஒரு கலை என் பதையெல்லாம் தாண்டி, இன்னிக்கு சமூக வலைதளங்கள்ல ஃபுட் வீடி யோக்கள் ஒரு பெரிய மார்க்கெட்

வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!

சமையல் என்பது உயிர்வாழ அடிப்படை, அது ஒரு கலை என் பதையெல்லாம் தாண்டி, இன்னிக்கு சமூக வலைதளங்கள்ல ஃபுட் வீடி யோக்கள் ஒரு பெரிய மார்க்கெட்

Published:Updated:
வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!
பிரீமியம் ஸ்டோரி
வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!

‘ஃபுட்ஸீ (foodzeee)’ யூடியூப் பக்கத்தின் சுவாரஸ்யம், வீடியோ வில் முகம் காட்டாமலேயே கலக்கிக் கொண்டிருக்கும் அம்மா - மகள் காம்போ. கைகளில் அழகான வளையலும், கொஞ்சமும் மருதாணி நிறம் குறையாமலும், செம்பு பாத் திரமும் சமையலும் என... இந்தக் காட்சிகள் மூலமாகவே லட்சக்கணக் கான ரசிகர்களை ஈர்த்துள்ளது ‘ஃபுட்ஸீ’ யூடியூப் சேனல். அதன் இன்ஸ்டாகிராம் பக்கமும் ஹிட்டு. யூடியூபில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள், இன்ஸ்டாவில் 1.1 மில்லியன் ஃபாலோயர்கள் என சமூக வலைதளங்களில் எங்கு திரும்பினாலும் இவர்களது வீடியோக்கள்தாம் கலக்கிக் கொண்டிருக் கின்றன. ‘ஃபுட்ஸீ’யின் முகம் காட்டாத முகங்களான ஸ்வர்ண லக்ஷ்மி மற்றும் அவரின் மகள் ஷிவ் பூஜிதாவிடம் பேசினோம். ‘`பேட்டி ஓ.கே... புகைப்படம் நோ...’’ என்று அதே கண்டிஷனோடு பேச ஆரம்பித்தார்கள்.

வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!
வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!

‘`எங்களுக்கு சொந்த ஊரு கும்ப கோணம். நான் படிச்சது சென்னை. இப்போ பெங்களூர்ல செட்டில் ஆகியிருக்கோம். நானும் அம்மாவும் சேர்ந்துதான் இந்த சேனலை நடத்துறோம். அம்மா சமையல் செய்வாங்க, நான் வீடியோ எடுத்து போஸ்ட் பண்ணுவேன்’’ என்று ஆரம்பித்தார் ஷிவ் பூஜிதா. ‘`சேனலை அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சுட்டாலும், பெரிய ரீச் இல்ல. லாக்டௌன் டைம்லதான் ஏதாச்சும் புதுசா செய் யணும்னு யோசிச்சோம். செம்பு பாத்திரம் வெச்சு சமையல் செய்ய லாம்னு, சும்மா ட்ரை பண்ணிப் பார்த்தோம். முதல் வீடியோவே 5 மில்லியன் ஹிட் அடிக்க, ஆச்சர்யப்பட்டுப் போனோம்’’ என்பவர், வீடியோவில் முகம் காட் டாத முடிவு எடுக்கப்பட்டது பற்றிக் கூறினார்.

‘`எங்களோட நோக்கம், மக்களுக்கு ஈஸியா சமையல் சொல்லித் தரணும் என்பதுதான். நாங்க முகம் காட்டாம இருக்க முடி வெடுக்க காரணம், அதுல ஒரு தனித்துவம் இருக்கும்னு. ப்ளஸ், மக்களோட கவனம் சமையல்ல இருக்கும்னுதான். எங்கம்மா கைல மருதாணி வெச்சுக்கிட்டா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால, எப்பவும் மருதாணி வெச்சுட்டே இருங்கனு சொல்லுவேன். வீடியோ வுல கையை மட்டும் காட்டுறதுனு முடிவானப்போ, கையில மருதாணி, வளையல்னு எங்களுக்குனு ஒரு ட்ரெண்ட் செட் பண்ணி வீடியோ அப்லோடு பண்ண ஆரம்பிச்சோம். மக்கள் அதை ரொம்ப ரசிச்சாங்க, வரவேற்றாங்க’’ என்று மகள் பூரிப் புடன் சொல்ல, ஸ்வர்ணலக்ஷ்மி தொடர்ந்தார்.

வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!
வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!
வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!
வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!

‘`நாங்க வீடியோவில் பயன்படுத் துற பாத்திரம், எங்க வீட்ல பரம்பரை பரம்பரையா இருக்குற பாத்திரங்கள் தான். அலுமினியம், எவர்சில்வர் போன்ற பாத்திரங்கள்ல சமைக் குறதைவிட, செம்பு, பித்தளை போன்ற பாத்திரங்கள்ல சமைக்கும் போது சமையலும் சீக்கிரம் முடிஞ் சிடும், உடலுக்கு நல்லதும்கூட. அந்த மெசேஜையும் மக்களுக்குச் சொல்லத்தான் செம்புப் பாத்திரத்தை தேர்ந்தெடுத்தோம். அதேபோல, நாங்க சமைக்கிறது எல்லாமே பாரம் பர்ய உணவுகள்தான். எனக்குத் தெரிஞ்சதை சமைக்குறேன். எங்களைப் பார்த்து இப்போ நிறைய பேர் யூடியூப் சேனல் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க’’ என்பவருக்குப் பெருமை பிடிபடவில்லை.

‘’தினமும் ஒரு வீடியோ பண்ணிடு வோம். அப்பா, அக்காவும் ஐடியா கொடுப்பாங்க. நாங்க வீடியோவுக்கு சமைக்குற உணவுதான் வீட்டுல எங்களுக்குச் சாப்பாடு. சாப்பாடு அளவு அதிகமா இருக்கேன்னு கமென்ட்ல சிலர் கேப்பாங்க. குடும்பத்துக்கு மட்டுமில்லாம எங்க கிட்ட வேலைபார்க்குறவங்களுக்கும் சேர்த்து சமைக்கிறதால அளவு அதிகமா இருக்கும். பார்வை யாளர்கள் பலரும், ‘இந்த டிஷ் செய்யுங்க’, ‘அந்த சமையல் செஞ்சு காட்டுங்க’னு கேக்கும்போது, எங்க வீடியோ ஏற்படுத்தியிருக்குற தாக் கத்தை நினைச்சு ரொம்ப சந்தோ ஷமா இருக்கும்’’ என்று சொல்லும் ஸ்வர்ணலக்ஷ்மி, இப்போது நார்த் இந்தியன், கொரியன் உணவுகள் சமைக்கவும் கற்று வருவதாகச் சொல்கிறார்.

வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!
வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!
வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!
வளையல்... மருதாணி... ஃபுட்ஸீ!

‘` ‘எந்த கேமரால வீடியோ எடுக்கறீங்க? என்ன சாஃப்ட்வேர்ல எடிட் பண்றீங்க?’ - இதுதான் பலரும் எங்ககிட்ட கேட்குற கேள்வி’’ என்ற ஷிவ் பூஜிதா, ‘`நாங்க டி.எஸ்.எல்.ஆர் கேமரா யூஸ் பண்றது இல்ல, மொபைல்லதான் வீடியோ எடுக்குறோம். எடிட்டிங்கு இன்ஷாட் (InShot) ஆப் யூஸ் பண்ணுறோம். எங்க வீடியோக்களில் எனக்கு ரொம்பப் பிடிச்சது, ஃபில்டர் காபி வீடியோ. அந்த வீடியோவுல பார்க்குற மாதிரிதான் எங்க வீடு இருக்கும். காலையில சுப்ரபாதம் போட்டு, பூஜை பண்ணினு... ரம்மியமா இருக்கும்’’ என்றார் ஷிவ் பூஜிதா.

‘’சமையல் என்பது உயிர்வாழ அடிப்படை, அது ஒரு கலை என் பதையெல்லாம் தாண்டி, இன்னிக்கு சமூக வலைதளங்கள்ல ஃபுட் வீடி யோக்கள் ஒரு பெரிய மார்க்கெட். சரக்கு உங்ககிட்ட இருக்குங்கிறதுல சந்தேகம் இல்ல. விற்கத் தளமும் தயாரா இருக்கு. தேவையான பொருள்கள்... ஒரு ஸ்பூன் ஆர்வம், ஒரு ஸ்பூன் கற்பனைத்திறன், ஒரு ஸ்பூன் டெக்னாலஜி. அப்புறம் என்ன... நாமளும் சம்பாதிக்கலாம் சமையல்ல...” - அம்மாவும் பெண் ணும் காட்டும் `தம்ஸ் அப்'பில் வெற்றியின் முத்திரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism