Published:Updated:

`பரஸ்பர சம்மதத்துடன் உறவு: வயதை உறுதிப்படுத்த ஆதார், பான் தேவையில்லை’ - உயர் நீதிமன்றம் சொன்னதென்ன?

பெண்

``பரஸ்பர சம்மதத்துடன் உறவுகொள்ளும் முன்பு, சம்பந்தப்பட்ட பெண்ணின் வயதை உறுதிப்படுத்திக்கொள்ள, ஆதார் அட்டை, பான் அட்டை அல்லது சம்பந்தப்பட்டவரின் பள்ளிச் சான்றிதழில் இருந்து பிறந்த தேதியைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை.’’

`பரஸ்பர சம்மதத்துடன் உறவு: வயதை உறுதிப்படுத்த ஆதார், பான் தேவையில்லை’ - உயர் நீதிமன்றம் சொன்னதென்ன?

``பரஸ்பர சம்மதத்துடன் உறவுகொள்ளும் முன்பு, சம்பந்தப்பட்ட பெண்ணின் வயதை உறுதிப்படுத்திக்கொள்ள, ஆதார் அட்டை, பான் அட்டை அல்லது சம்பந்தப்பட்டவரின் பள்ளிச் சான்றிதழில் இருந்து பிறந்த தேதியைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை.’’

Published:Updated:
பெண்

`பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபடும் முன்பு, தன் துணையின் வயதை உறுதிப்படுத்திக்கொள்ள ஆதார் கார்டு, பான் கார்டு எண் தேவையில்லை’ என்று கூறி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது, 18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட புகாரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான இளைஞர், ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

ஆதார் பான்
ஆதார் பான்

இவ்வழக்கை, நீதிபதி ஜஸ்மித் சிங் அமர்வு விசாரித்தது. அப்போது இவ்வழக்கில் இளைஞர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், `சிறுமியின் சம்மதத்துடன்தான் இளைஞர் உறவு வைத்துக் கொண்டார். அதே நேரம், சிறுமி 18 வயதை எட்டவில்லை என்ற காரணத்துக்காகவே இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆனால், அரசு ஆவணங்களில் சிறுமியின் பிறந்த தேதியாக 3 வெவ்வேறு தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, இவ்வழக்கில் போக்ஸோ சட்டத்தைப் பயன்படுத்தும் நோக்கில் ஆவணங்களை சிறுமி தரப்பில் திருத்தம் செய்துள்ளனர். எனவே, இது குறித்து விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்ளும் முன்பு, சம்பந்தப்பட்ட பெண்ணின் வயதை உறுதிப்படுத்திக்கொள்ள, ஆதார் அட்டை, பான் அட்டை அல்லது சம்பந்தப்பட்டவரின் பள்ளிச் சான்றிதழில் இருந்து பிறந்த தேதியைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், வழக்கில் தொடர்புடைய பெண்ணின் வயது ஆதார் அட்டை அடிப்படையில் 01.01.1998 என்று உள்ளது. அதனடிப்படையில், குற்றச்சாட்டுக்கு ஆளான வாலிபர், 18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உறவு வைத்துக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் இருந்து பல்வேறு கட்டங்களில் ரூ.50,000 வரை தொகையைப் பெற்றுள்ளனர்.

சட்டம்
சட்டம்

2019-ல் அந்த நபருடன் உறவு வைத்திருந்த பெண், நீண்ட காலத்துக்குப் பிறகே புகார் தெரிவித்துள்ளார். எனவே, இது பணம் பறிக்கும் நோக்கமாகவே கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தரப்பில் இருந்து, வேறு எவர் மீதாவது இத்தகைய பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆவணங்களை போலீஸார் சரிபார்க்க வேண்டும். வழக்கில், புகாருக்கு ஆளான நபருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது’ என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.