22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

அவசரம்... அவசியம்...

ந்தியாவில் மட்டுமே 64 சத விகிதம் பெண் குழந்தைகளும் 53 சதவிகிதம் ஆண் குழந்தை களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று அச்சுறுத்துகிறது ஒரு புள்ளிவிவரம்.

குழந்தைகளின் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் உலகளாவிய பிரச்னையாக வளர்ந்து வருகிற நிலையில், இந்தியா அதில் முன்னிலையில் இருக்கிறது என்ற தகவல் அதிரவைக்கிறது. நிலநடுக்கம், வெள்ளம், தீ விபத்துகள் போன்ற இயற்கைப் பேரழிவுகளில் உயிரிழக்கும் குழந்தைகளைவிட பாலியல் வன்கொடுமைகளுக்கு பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கான காரணங்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் காலம் காலமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

`குட் டச்... பேட் டச்...', `நோ மீன்ஸ் நோ’ என்றெல்லாம் பலவற்றையும் சொல்லித் தருகிறோம். பிறந்த மூன்று மாதக் குழந்தைகூட பாலியல் வன்முறைக்குள்ளாகிறது. மேலே நாம் சொன்ன பாடங்கள் எல்லாம் ஓரளவுக்கு வளர்ந்த குழந்தைகளுக்கு வேண்டுமானால் உதவலாம். அவர்களைவிடச் சின்ன குழந்தைகளுக்கு உதவாது. தனக்கு என்ன நடந்தது என்பதையே சொல்லத் தெரியாத நிலையில் அந்த வயதுக் குழந்தைகளை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம்? பாலியல் ரீதியான வன்முறை அனுபவம் என்பது அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை, வாழ்க்கையைப் புரட்டிப் போடக்கூடியது. அந்தச் சம்பவம் நடந்து முடிந்த பிறகு குழந்தைக்கு ஆறுதலோ, ஆலோசனையோ சொல்வது அநியாயம், அதர்மம்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

வீட்டைப் பாதுகாக்க அலாரம். கேமரா, பாதுகாப்பு வேலி என என்னென்னவோ செய்கிறோம். அத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியில் வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தலிலிருந்து காப்பாற்ற முடியாமல் தவிக்கிறோம். நமக்குப் பரிச்சயமானவர்கள்தாம் பெரும்பாலும் நம் வீட்டுக் குழந்தைகளின் மீது பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்துபவர்கள். மிருகங்கள் தமக்கு நேரவிருக்கும் ஆபத்துகளை முகர்தல், கேட்டல், பார்த்தல் போன்ற உணர்வுகளின் மூலம் கண்டுபிடித்துவிடும். நாம் நம் உள்ளுணர்வை வைத்துதான் தவறு நடக்கிறதென்பதையே உணர முடியும். பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவோர் அமைதியின் மறுஉருவமாக இருக்கலாம். சில நேரங்களில் போதை மருந்து அல்லது மது அடிமைகளாக இருக்கலாம். உங்களுக்கு மிகப் பிடித்த ஒரு முகமாகவும் கூட இருக்கலாம். `பீடோபீலியா' என்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களும் குழந்தைகளிடம் தவறான உறவில் ஈடுபடும் குணம்கொண்டவர்களாக இருப்பார்கள்.

`சைபர் ரிலேஷன்ஷிப்' இன்று விஸ்வரூபம் எடுத்துவருகிறது. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டா மாதிரியான சமூக வலைதளங்களில் யாரென்றே தெரியாத நிழல் மனிதர்களால் குழந்தைகளின் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.

உங்கள் வீட்டுக் குழந்தையிடம் அத்துமீறும் ஆணோ, பெண்ணோ இப்படி சமூகத்தின் பலதரப்புகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களில் யாரையும் உங்களால் அவ்வளவு சுலபமாக அடையாளம் காண முடியாது.

அப்படியானால், `இந்த உலகமே கொடியது... குழந்தைகளைச் சுற்றியுள்ள அத்தனை பேரும் கெட்டவர்கள்' என்று சொல்ல வருகிறீர்களா என நீங்கள் கேட்கலாம். அதுவல்ல அர்த்தம். `உங்களைச் சுற்றியிருப்போரை கவனியுங்கள்... அவர்களைப் புரிந்துகொள்ளுங்கள்... உஷாராக இருங்கள்' என்றுதான் சொல்ல வருகிறேன்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பிஞ்சுகளைச் சூறையாடும் இந்த மிருகங்களிடமிருந்து நம் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது என்பதைப் பெற்றோர் கற்றுக்கொள்ள வேண்டியது அவசரம். அவற்றைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பது அவசியம். அவசரத்தையும் அவசியத்தையும் உணரச் செய்யவே இந்தப் பகுதி.

அடுத்த இதழில் பேசுவோம்...