தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வைராக்கியம் வேண்டும்!

சிங்கப் பெண்ணே
பிரீமியம் ஸ்டோரி
News
சிங்கப் பெண்ணே

சிங்கப் பெண்ணே...

`அவள் விகடன்' இதழுடன் இணைந்து தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கம் (வீவா), பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சிப் பயிலரங்கத்தை பிப்ரவரி 9 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கத்தின் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணா தலைமை தாங்கினார். தமிழ்நாடு சிறு குறு தொழில்கள் சங்கத்தலைவர் அன்புராஜன், தொழிலதிபர் பெரிய மகேந்திரன், பேராசிரியர் ஷீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிங்கப் பெண்ணே
சிங்கப் பெண்ணே

சிறப்பு விருந்தினராக வருகைதந்த மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், ``பெண்களுக்கு எப்போதுமே சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியம் இருக்க வேண்டும். தனித்திறமை, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி தன்னம்பிக்கை யுடன் செயல்பட்டால் அனைத்துத் துறைகளி லும் சாதிக்க முடியும். தேடல் இருந்தால் வெற்றி நிச்சயம்” என்று கூறி உற்சாகப்படுத்தினார்.

சிங்கப் பெண்ணே
சிங்கப் பெண்ணே

சாக்லேட், கேக், க்ளாத் பிரின்ட், ஹெர்பல் நாப்கின் ஆகியவை தயாரிப்பதற்கான நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. உற்பத்தி செய்யும் பொருள்களை எவ்வாறு விற்பனை செய்வது, பொருள்களுக்கு எப்படி விநியோக உரிமையைப் பெறுவது என்பது குறித்தும், மத்திய மாநில அரசுகளின் மானியத் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு `சிங்கப் பெண்ணே’ விருது வழங்கப்பட்டது.

சிங்கப் பெண்ணே
சிங்கப் பெண்ணே

இந்தப் பயிற்சி முகாமில் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். `தொழில் துறையில் நாங்களும் சாதிப்போம்' என்கிற உறுதிமொழியுடன் விடைபெற்றனர்.