Published:Updated:

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 3: மொபைல் ஜாக்கிரதை!

கேட்ஜெட் கிளாஸ் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட் கிளாஸ் ரூம்

#Utility

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 3: மொபைல் ஜாக்கிரதை!

#Utility

Published:Updated:
கேட்ஜெட் கிளாஸ் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட் கிளாஸ் ரூம்

தென் தமிழகத்தின் அழகான கிராமம் அது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் அயல்நாடுகளில் வேலை செய்பவர்கள். அவர்களின் குடும்பத்தார் இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 15 ஆண்டுகள் முன்புவரை இருந்த நிலைமை வேறு. இப்போது ஸ்மார்ட்போனும் வாட்ஸ் அப்பும் அவர்களைக் குடும்பத்தினர் அதிகம் ‘மிஸ்’ செய்யாமல் பார்த்துக்கொள்கின்றன. மனைவியர் கணவருடன் வாட்ஸ்அப்பில் காதல் மொழி பேசி பசலைநோய் மறந்து வாழ்கிறார்கள். அப்படியொரு ஜோடிதான் ரம்யாவும் சோமசுந்தரமும்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 3: மொபைல் ஜாக்கிரதை!

தினமும் வாட்ஸ்அப்பில் குட் மார்னிங்குடன் ஒரு முத்தமும் சோமிடமிருந்து ரம்யாவுக்கு வந்துவிடும். இருவருமே வாட்ஸ்அப்புக்கென தினமும் சில மணி நேரத்தை ஒதுக்கி விடுவார்கள். யார் கண்பட்டதோ. ஒரு நாள் ரம்யாவின் மொபைல் பிரச்னை தந்தது. அதைச் சரி செய்ய முடியவில்லை என்றதும் அருகிலிருந்த மொபைல் கடைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். தூரத்து உறவினர் பையன் தான் அங்கு வேலை செய்கிறான். இரண்டு நாள்களில் சரி செய்து தந்துவிட்டான். மீண்டும் வாட்ஸ்அப் உரையாடல் தொடர்ந்தது. ஆனால், இன்னோர் எண்ணிலிருந்து ரம்யாவுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் வந்தவை ரம்யாவின் அந்தரங்கப் படங்கள். அவை ரம்யா, சோமசுந்தரத்துக்கு மட்டும் அனுப்பிய படங்கள். எப்படி இவன் கைக்குச் சென்றதென ரம்யாவுக்குத் தெரியவில்லை.கணவரிடம் சொல்லவும் பயம். அடுத்தடுத்த மெசேஜ்களில் அந்த நபர் ரம்யாவை மிரட்டத் தொடங்குகிறார்.

ரம்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் எதையும் கேட்காதவன், போகப் போக ரம்யாவை வீடியோ காலில் அழைக்குமாறு மிரட்டியிருக்கிறான். ‘இன்று இரவு வீடியோ காலில் வரவில்லையென்றால் உன் புகைப் படங்கள் இணையத்தில் ஏற்றப்படும்’ என்றான். இறுதியில், ரம்யா கணவரிடம் சொல்லிவிட்டார். அவர் நண்பர்களின் உதவியுடன் மிரட்டியவன் யார் எனக் கண்டு பிடித்துவிட்டார். நீங்கள் யூகித்ததுதான். மொபைல் கடையில் வேலை செய்த அதே பையன்தான். நம் மொபைலை ஒருவரிடம் ஒரே ஒரு நிமிடம் தந்தால் போதும்; அதில் ஸ்பை ஆப் (Spy App) ஒன்றை நிறுவிவிட முடியும். அதன் பின் நம் மொபைலிலிருக்கும் எல்லாம் நமக்கு மட்டும் சொந்தமல்ல; இன்னொருவராலும் பார்க்க முடியும்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 3: மொபைல் ஜாக்கிரதை!

மொபைலை யாரிடமெல்லாம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது?

சர்வீஸுக்காகக் கடைகளில்...

குழந்தைகளோ மற்றவர்களோ கேம்ஸ் ஆடுகிறேன் எனக் கேட்கும்போது...

முன்பின் அறியாதவர்கள் ஒரு கால் செய்து கொள்ளவா எனக் கேட்கும்போது...

இன்னும் பல வழிகள் உண்டு. நம்மில் எத்தனை பேர் மொபைலை லாக் செய்து வைக்கிறோம்? பாஸ்கோடு போட்டு வைத்தாலும் அது எல்லோருக்கும் தெரியும்படிதான் வைத்திருக்கிறோம். இங்கிருந்தே பிரச்னை தொடங்குகிறது. மொபைல் என்பது நகைகள் வைக்கும் லாக்கரைவிட முக்கியமானது. அதை நாம் அல்லது நம் குடும்பத்தினர் மட்டுமே அணுக முடியுமாறு வைக்க வேண்டும்.

ஒருவேளை உங்கள் மொபைலில் யாரேனும் ஸ்பை ஆப் இன்ஸ்டால் செய்திருக்கக்கூடும் என நினைத்தால் என்ன செய்ய வேண்டும்? வேண்டிய டேட்டாவை பேக்கப் எடுத்துவிட்டு ஃபேக்டரி ரீசெட் செய்வதுதான் நல்லது.

பேக்கப் எடுக்க:

Settings > Additional settings > backup and reset > Backup & restore

ஃபேக்டரி ரீசெட் செய்ய:

Settings > Additional settings > backup and reset > factory reset

இப்படிச் செய்வதன் மூலம் மொபைல் புதிதாக வாங்கியபோது எப்படி இருந்ததோ அப்படி ஆகிவிடும். இது பிரச்னை வந்துவிட்டால் தீர்வு. வரமாலிருக்க என்ன செய்ய வேண்டும்?

மொபைலை சர்வீஸுக்குக் கொடுப்பதாக இருந்தாலும் மொபைலிலிருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அழித்த பின் கொடுக்கவும்.

அவ்வப்போது மொபைலை பேக்கப் எடுத்துவிட்டு மொபைலில் டெலீட் செய்யவும்.

மொபைலை எப்போதும் பாஸ்கோடு போட்டு வைக்கவும்.

யாரேனும் மொபைலைக் கேட்டால் எதற்காக என்று கேளுங்கள். கொடுக்கலாமா என்பதை யோசித்து முடிவு செய்யுங்கள்.

எளிமையாக ஒன்றைச் சொல்கிறேன். உங்கள் மொபைலை ஹேண்ட்பேக் போல நினைத்துக் கொள்ளுங்கள். அதை யார் திறக்கலாம், திறந்திருக்கும் போது யார் பார்க்கலாம் என்பதில் கவனமாக இருங்கள்.