Published:Updated:

கண்டாங்கி காட்டன் சேலை... செட்டிநாட்டின் மற்றுமொரு சிறப்பு!

கண்டாங்கி சேலை
பிரீமியம் ஸ்டோரி
கண்டாங்கி சேலை

அழகிய அங்கீகாரம்

கண்டாங்கி காட்டன் சேலை... செட்டிநாட்டின் மற்றுமொரு சிறப்பு!

அழகிய அங்கீகாரம்

Published:Updated:
கண்டாங்கி சேலை
பிரீமியம் ஸ்டோரி
கண்டாங்கி சேலை

ரு பொருளின் தரம் மற்றும் நம்பகத் தன்மையைக் குறிப்பிட புவிசார் குறியீடு (Geographical indication) உதவுகிறது. தமிழகத்திலுள்ள ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் மலைப்பூண்டு, பழநி பஞ்சாமிர்தம், திண்டுக்கல் பூட்டு என்று தனித்துவத்தன்மைகொண்ட பொருள்கள் புவிசார் குறியீட்டைப் பெற்றிருக்கின்றன. இதில் காரைக்குடி கைத்தறி கண்டாங்கிச் சேலையும் இப்போது இணைந்திருக்கிறது. கண்டாங்கிச் சேலைக்கு புவிசார் குறியீடு கிடைக்க காரணமாக இருந்திருக்கிறார்கள், காரைக்குடி அமரர் ராஜீவ் காந்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினர்.

கண்டாங்கி காட்டன் சேலை... செட்டிநாட்டின் மற்றுமொரு சிறப்பு!

``காரைக்குடி கண்டாங்கிச் சேலைக்கு `புவிசார் குறியீடு' கிடைத்தது மிகப்பெரும் வெற்றி. இதனால் கைத்தறி நெசவாளர்கள் வெகுவாகப் பயன்பெறுவார்கள். பொதுமக்களும் உண்மையான கைத்தறி சேலையினை பெற முடியும். காரைக்குடி கண்டாங்கி மிகவும் பழைமையும் பாரம்பர்யமும் உடையது. நகரத்தார் சமூகத்தினர் பட்டுக் கண்டாங்கிச் சேலையைப் பயன்படுத்தி வந்தார்கள். அதைத் தொடர்ந்து காட்டன் கண்டாங்கிச் சேலைகளும் உயிர் பெற்றன. செட்டிநாடு கைத்தறி காட்டனை வெளி மாநிலத்தவரும் வெளிநாட்டு நபர்களும் விரும்பி வாங்குகின்றனர். இப்படிப்பட்ட கண்டாங்கிச் சேலைக்கு, புவிசார் குறியீடு பெற வேண்டும் எனத் தொடர்ந்து முயற்சி செய்தோம். பல வருடங்களுக்குப் பின் இப்போது இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நகரத்தார் சமூகத்தினர் பட்டுக் கண்டாங்க்ச் சேலையைப் பயன்படுத்தி வந்தார்கள். அதைத் தொடர்ந்து காட்டன் கண்டாங்கி சேலைகளும் உயிர் பெற்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2016-ல் புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பித்துவிட்டு டெல்லி சென்று அதிகாரிகளுக்கு கண்டாங்கியின் மகத்துவம், தனித்துவம் பற்றி விளக்கினோம். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் குழுவாகத் தமிழ்நாட்டுக்கு வந்து ஆய்வு செய்துவிட்டு போயிருக்கிறார்கள் என்பது பிறகே தெரிந்தது.

காரைக்குடி கண்டாங்கி 48 இன்ச் அகலமும் ஐந்தரை மீட்டர் நீளமும் கொண்டிருக்கும். காரைக்குடி கண்டாங்கிச் சேலைக்கு நிறம் ஏற்ற ஒரு வாரம்கூட ஆகும். காரைக்குடி கண்டாங்கி விலை அதிகம், அதற்கேற்ப அதன் உழைப்பும் அதிகம். பவர்லூம் சேலை 400 ரூபாய் என்றால், கண்டாங்கி கைத்தறி சேலை 800 ரூபாயாக இருக்கும். ஆனால், கைத்தறி என்பதால் ஐந்து வருடங்களானாலும் பளிச்சென்று இருக்கும்” என்கிறார் சங்க இயக்குநர் பழனியப்பன்.

கண்டாங்கிச் சேலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர முயற்சி எடுத்த அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சஞ்சய் காந்தி, “இதுவரை தமிழகத்தில் 18 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர முயற்சி எடுத்துள்ளேன். 150 ஆண்டுகளுக்கு மேல் பழைமையும், பாரம்பர்யமும் கொண்ட காரைக்குடி கண்டாங்கிக்கு இப்போது அந்தப் பெருமை கிடைத்துள்ளது. கண்டாங்கிச் சேலையை இனி போலியாக தயார் செய்ய முடியாது. இதனால் கைத்தறி நெசவாளர் நிலை மேம்படும். வாடிக்கையாளர்களுக்கும் ஒரிஜினல் கண்டாங்கிச் சேலை கிடைக்கும்'' என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமரர் ராஜீவ்காந்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெ.ஹேமமாலினி, ``எங்கள் குடும்பத்தில் நான்காவது தலைமுறை யாக கைத்தறி கண்டாங்கிச் சேலை தயார் செய்து வருகிறோம். முன்னாள் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் முயற்சியால் இந்த புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. செட்டிநாடு பாரம்பர்யத்தை உணர்த்தும் இந்த காட்டன் கண்டாங்கிச் சேலை தனித்தன்மை வாய்ந்தது. எங்கள் பகுதியின் தண்ணீர்தான் கண்டாங்கியின் தனித்தன்மைக்கு முக்கியக் காரணம். மற்ற ஊர்களில் செய்யப்படும் சாயங்கள், நூல்களைத் தயார் செய்யும் விதம் எல்லாவற்றிலிருந்தும் காரைக்குடி கண்டாங்கி வேறுபட்டது. நாங்கள் இயற்கைச் சாயம் மட்டுமே பயன்படுத்துகிறோம். கோவையில் இருந்து பெற்ற நூலில் பொதுவாக மூன்று முதல் நான்கு நாள்கள் வரை சாயம் ஏற்றுவோம். நிறத்தைப் பொறுத்து நாள்கள் அதிகரிக்கும். சில சாயங்களுக்கு ஒருவாரம்கூட ஆகலாம். அதனால் காரைக்குடி கண்டாங்கியால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. சாயம் ஏற்றிய நூலை கண்டில் சுற்றிவிடுவோம். பின் வார்பு போட்டு பீம் ஏத்திவிட்டு அச்சில் பிணைப்போம். அதற்குப்பின் இணைத்து கைத்தறியில் சேலை தயார் செய்வோம்.

எங்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் நிறைய பெண்கள் இந்தப் பணி செய்கின்றனர். ஒரு சேலை கைத்தறியில் போட இரண்டு நாள்கள் ஆகிறது. ஆனால், நெசவாளர்களுக்குக் கூலி குறைவாகவே கிடைக்கிறது. இதனால்தான் நிறைய பேர் நெசவு செய்வதில்லை. புவிசார் குறியீடு கிடைத்த பின் நிறைய நெசவாளர்கள் உருவாகலாம்.

ஜெ.ஹேமமாலினி
ஜெ.ஹேமமாலினி

காரைக்குடி கட்டடக்கலையிலும் சமையற் கலையிலும் பலரையும் வியக்கவைக்கும். அதைப்போலவே செட்டிநாட்டு கண்டாங்கி காட்டன் சேலையும் பலரையும் விரும்ப வைக்கிறது. இப்போது பாரம்பர்ய கைத்தறி கண்டாங்கிச் சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது மிகப்பெரும் ஊக்கமளிக்கிறது'' என்கிறார்.

கைத்தறி நெசவு சேலைகளைக் கண்டறிய சில வழிகள்...

  • கைத்தறி முத்திரை இருக்கும். சேலையின் ஓரத்தில் குண்டூசியில் குத்தியது போல தடங்கள் தொடர்ந்து இருக்கும்.

  • பவர்லூம் சேலைகளில் சேலையின் நூல்கள் கம்ப்யூட்டர் போல ஒரே வரிசையாகச் சீராக இருக்கும். கைத்தறியில் அப்படியில்லாமல் சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும்.

  • பவர்லூம் இயந்திரத்தின் மூலம் அடுக்கப்படு வதால் அதன் வேகத்தில் பஞ்சின் திறன் குறைந்து போகும். கைத்தறி பார்த்துப் பார்த்து செய்யப்படுவதால் பஞ்சின் உயிர் ஓட்டம் குறையாமல் இருக்கும். அதனால் கைத்தறி சேலை நீண்ட நாள்கள் உழைக்கும்.

  • கைத்தறி சேலை பார்வைக்குக் கூடுதல் அழகு தரும். பவர்லூம் சேலை அப்படியிருக்காது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism