Published:Updated:

``அம்மாவுக்குக் கொடுக்கல... நாங்க எடுத்துக்கிட்டோம்!”

``அம்மாவுக்குக் கொடுக்கல... நாங்க எடுத்துக்கிட்டோம்!”
பிரீமியம் ஸ்டோரி
``அம்மாவுக்குக் கொடுக்கல... நாங்க எடுத்துக்கிட்டோம்!”

எனக்கு பாய் ஃபிரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்குறாங்க'... இதையே என் அத்தை, சித்திலாம் சொல்லியிருந்தா அது கலாசார குற்றம் ஆகியிருக்கும்.

``அம்மாவுக்குக் கொடுக்கல... நாங்க எடுத்துக்கிட்டோம்!”

எனக்கு பாய் ஃபிரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்குறாங்க'... இதையே என் அத்தை, சித்திலாம் சொல்லியிருந்தா அது கலாசார குற்றம் ஆகியிருக்கும்.

Published:Updated:
``அம்மாவுக்குக் கொடுக்கல... நாங்க எடுத்துக்கிட்டோம்!”
பிரீமியம் ஸ்டோரி
``அம்மாவுக்குக் கொடுக்கல... நாங்க எடுத்துக்கிட்டோம்!”

‘உங்க பெயர்ல பேங்க அக்கவுன்ட் இருந்ததா?’, ‘நீங்க சமூகப் போராட்டங்கள்ல கலந்துக்கிட்டீங்களா?’, ‘காதலிச்சதை வீட்டுல சொன்னீங்களா?’ - 10, 15 வருடங்களுக்கு முன் பெண்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டிருந்தால், பெரும்பான்மையானவர்களின் பதில் ‘இல்லை’ என்பதாகத்தான் இருந்திருக்கும். ஆனால் இன்று, இதுபோன்ற அடிப்படை சுதந்திரம், உரிமைகளை பெண்கள் பெற்று வருவது காலத்தின் மீது நம்பிக்கைகொள்ளச் செய்கிறது. குறிப்பாக, மெட்ரோபாலிட்டன், பெருநகரத்துப் பெண்களைவிட, சிறு நகரங்களில் உள்ள பெண்களுக்கு, இவையெல்லாம் சின்னச் சின்ன நகர்வுகளாக இருந்தாலும், அவர்களின் முன்னேற்றத்தில் ஒவ்வொன்றுமே முக்கியமானதாகிறது. அப்படி சில இளம்பெண்கள் அதைப் பகிர்ந்துகொள்கிறார்கள் இங்கு...

``அம்மாவுக்குக் கொடுக்கல... நாங்க எடுத்துக்கிட்டோம்!”

வீட்டுல காதலை சொன்னேன்! - லெட்சுமி சிவக்குமார், சாஃப்ட்வேர் இன்ஜினீயர் தஞ்சாவூர்

``ரெண்டு பேரும் ஒரே ஏரியா, வெவ்வேறு சமூகம். எங்க காதல் எங்க வீட்டுல தெரிஞ்சு ஒரே களேபரம் ஆச்சு. அப்ப ஏற்பட்ட பிரச்னையில ரெண்டு பேரோட கல்லூரிப் படிப்பும் ஒரு வருஷம் தடைபட்டுப் போச்சு. நாங்க ரெண்டு பேரும் பேசி, ‘முதல்ல படிச்சு நல்ல நிலைக்கு வருவோம், காதலை அப்புறம் அவங்களை ஏத்துக்க வைப்போம்’னு முடிவெடுத் தோம். நான் எம்.சி.ஏ-வும், அவர் எம்.பி.ஏ-வும் முடிச்சார். எனக்கு சாஃப்ட்வேர் இன்ஜீனியர் வேலை கிடைச்சது; அவருக்குத் தனியார் வங்கியில் வேலை கிடைச்சது. வருஷங்கள் ஓடி எனக்கு மாப்பிள்ளை பார்த்தப்போ, எங்க காதல் இன்னும் உயிரோடதான் இருக்குனு வீட்டுல சொன் னேன். பத்து வருஷங்கள் கழிச்சும் இதையே சொல்வேன்னு எங்கிட்ட அவங்க எதிர்பார்க்கலை. பொறுப்பா படிச்சு, வேலைக்குப் போய், அப்பாகிட்ட காதலுக்கு சம்மதம் கேட்டுக்காத்திருக்குற தன் ஒரே மகளோட விருப்பத்துக்கு முன்னாடி, இந்த முறை சாதியை குறுக்க நிப்பாட்டல அப்பா. சாதியை ஓரமா வெச்சிட்டு மகள்களோட காதலுக்கு மரியாதை செய்யும் பெற்றோர்கள், பெண் முன்னேற்றத்திலும், சமூக மாற்றத்திலும் தங்களையும் அறியாம மிகப் பெரிய பங்கெடுக்குறாங்க!”

``அம்மாவுக்குக் கொடுக்கல... நாங்க எடுத்துக்கிட்டோம்!”

ஆண் நண்பர்கள் இருக்காங்க! - அர்ஷவதினி லட்சுமிபிரியா, கல்லூரி மாணவி, சாய்நாதபுரம், வேலூர்

‘‘ `எனக்கு பாய் ஃபிரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்குறாங்க'... இதையே என் அத்தை, சித்திலாம் சொல்லியிருந்தா அது கலாசார குற்றம் ஆகியிருக்கும். ஆனா, இப்போ இதை இயல்பா ஏத்துக்குற குடும்பங்கள் பெருகிட்டு வருது. அதுல எங்க குடும்பமும் ஒண்ணு. ‘ஆண், பெண் பேதம் இல்ல’னு அப்பாவும், அம்மாவும் சொல்லிக் கொடுத்திருக் காங்க. கேர்ள்ஸ், பாய்ஸ்னு எனக்கு நிறைய ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க. இன்ஃபேக்சுவேஷன், லவ்னு போட்டு குழப்பிக்காம ஆரோக்கியமான நட்பா தொடர்றோம். அவங்களை நம்ம வீட்டுக்கு இன்வைட் பண்ணுறது, நாம அவங்க வீட்டுக்குப் போறதுனு எல்லாமே நார்மலா, ஹெல்த்தியா நடக்குது. இன்னொரு பக்கம், லவ் புரொபோசல்ஸ் காமெடிகளையும் எங்க வீட்டுல சீரியஸா எடுத்துக்கிறதில்ல. அப்பா, அம்மாகிட்ட அதை ஷேர் பண்ணும்போது, அந்த பசங்களைக் கூப்பிட்டு அட்வைஸ் பண்ணுவாரு அப்பா. ‘ஃலைப்ல முதல்ல செட்டில் ஆகுப்பா. அவளும் செட்டில் ஆகட்டும். படிக்க விடு. நீயும் படி. நல்ல நிலைமைக்கு வந்தப் பின்னாடி அப்பா, அம்மாவைக் கூட்டிக்கிட்டு வந்து பொண்ணு கேளு. என் பொண்ணுக்கும் சம்மதம்னா நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்’னு சொல்லுவாரு. சிலநேரம், ‘அவள பத்தி உனக்குத் தெரியாது பசங்களா; ஓடிடுங்க’னு அப்பா கிண்டல் பண்ணி பசங்களைத் துரத்திவிட்டிருவாரு. அதனால பெற்றோர்களே... பாய் ஃபிரெண்ட்ஸ், காதல் எல்லாம் இனியும் பதற்றத்துக்கு உரிய வார்த்தைகள் இல்ல!”

``அம்மாவுக்குக் கொடுக்கல... நாங்க எடுத்துக்கிட்டோம்!”

சமூகப் போராட்டங்கள்ல கலந்துக்குறேன்! - கண்மணி, வழக்கறிஞர், கோவை

“என் சொந்த ஊர் ஈரோடு. அப்பா, அம்மா, அக்கா, தம்பி இதுதான் எங்க குடும்பம். அப்பா சிற்பியா இருக்கார். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு ஒரு ஹார்ட்வேர் கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தேன். சமூகம் மேல ரொம்ப அக்கறை இருந்துச்சு. நிறைய கவிதை எழுதுவேன். 2012 ஈழப் போராட்டத்துல தீவிரமா கலந்துக் கிட்டேன். அதுக்கு அப்புறம் என்னால என் வீடு, என் வேலைனு மட்டும் இருக்க முடியல. சமூகப் பிரச்னை களுக்கான தீர்வைக் கொண்டுவர்றதுல பங்கெடுக் கணும்னு தோணுச்சு. கோவை, அரசு சட்டக்கல்லூரில எல்.எல்.பி முடிச்சேன். டாஸ்மாக், நீட் தேர்வு, இப்ப கர்நாடகா ஹிஜாப் பிரச்னை வரை பல விஷயங்களுக்குப் போராடியிருக்கேன். நாலு வழக்குகள் இருந்துச்சு என் மேல. சிறைவாசம் அனுபவிச்சிருக்கேன். பேன்ட், சட்டைதான் போடுவேன். கிராப் ஹேர்ஸ்டைல்தான். சிலர், ‘நீங்க உங்களுக்குப் பிடிச்ச மாதிரி வாழ்றதைப் பார்க்க சந்தோஷமா இருக்கு’னு சொல்வாங்க. சிலர், ‘பொட்டைப்புள்ள மாதிரி இல்லாட்டி யார் உன்னைய கல்யாணம் பண்ணிப்பா’னு கேப்பாங்க. நேத்து எங்க ஊருல என்னை மாதிரி ஒரு பொண்ணு இல்லாம இருந் திருக்கலாம். இன்னிக்கு நான் இருக்கேன். நாளைக்கு இன்னும் பல தங்கைகள் வருவாங்க!”

``அம்மாவுக்குக் கொடுக்கல... நாங்க எடுத்துக்கிட்டோம்!”

என் பெயர்ல பேங்க் அக்கவுன்ட் இருக்கு! - கௌசல்யா, கல்லூரி மாணவி, தொட்டிப்பாளையம், நாமக்கல் மாவட்டம்

``நான் ஆறாவது படிக்கும்போதே, என் பெயர்ல பேங்க் அக்கவுன்ட் ஆரம்பிச்சுக் கொடுத்தாங்க வீட்டுல. பேருந்துக்குக் கொடுக்கும் பணத்துல மிச்சப்படுத்துறது, பார்ட் டைம் வேலையில நான் சம்பாதிக்கிற பணம் எல்லாத்தையும் அம்மாகிட்டயோ, அப்பாகிட்டயோ கொடுத்துவைக்காம, என் அக்கவுன்ட்லதான் சேமிக்கிறேன். எங்க பாட்டி காலத்துல, அவங்க வீட்டை விட்டே வெளியே போனதில்லைனு சொல்லுவாங்க. 45 வயசாகும் எங்கம்மா, நூறு நாள் வேலைக்குப் போறதால, ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் அவங்களுக்கு வங்கி கணக்கையே ஓபன் பண்ணினாங்க. ‘எனக்கு தனியா பேங்க் அக்கவுன்ட் இருக்கு’னு இதை ஒரு சந்தோஷமா மட்டும் பார்க்காம, எங்க பாட்டி, அம்மாவுக்குக் கிடைக்காத பொருளாதார சுதந்திரம் எனக்குக் கிடைச்சிருக்குனு அதோட ஆழத்தையும் சேர்த்து உணரும்போது, தன்னம்பிக்கையா இருக்கு. பேங்க் அக்கவுன்ட் மட்டுமில்ல, ஏ.டி.எம், கூகுள் பே, பேடிஎம்னு எல்லாத்தையும் கையாள்றேன். நம்ம அம்மாக்கள் பல நேரங்கள்ல மனசால ரொம்ப உடைஞ்ச போன சூழல்கள் நிறையவே இருக்கு. 10 ரூபாய் வேணும்னாகூட அப்பா, கணவர், சகோதரரை எதிர்பார்த்து நிக்கறது ரொம்பக் கொடுமை. சொல்லப்போனா, வேலைக்குப் போற பெண்களும் கூட வீட்டுல சம்பளத்தைக் கொடுக்குற நிலை இருந்தது. அந்த நிலை நம்ம தலைமுறையில மாற, நாம செய்ய வேண்டிய முதல் விஷயம்... நம்ம பெயர்ல பேங்க் அக்கவுன்ட் ஆரம்பிக்குறது. வேலை,தொழில்னு எல்லாத்துக்கும் அது அவசியம், அடிப்படை!”

``அம்மாவுக்குக் கொடுக்கல... நாங்க எடுத்துக்கிட்டோம்!”

சோலோ ட்ரிப் போறேன்! - சாந்தி ஃப்ளோரா, சைக்ளிஸ்ட், திருச்சி

“சின்ன வயசுல இருந்தே எனக்கு நிறைய டிராவல் பண்ணணும்னு ஆசை. சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு, டிராவல் செலவுகளுக்காக நான் யாரையும் எதிர்பார்க்க வேண்டியதில்லைங்கிற நிலைமை வந்ததும் நிறைய பயணங்கள் போனேன். பசங்க டூர் போனா இங்க யாரும், எந்தக் கேள்வியும் கேட்குறதுல. அதுவே பொண்ணுங்க கிளம்பினா, கேள்விகள், அறிவுரைகள், எச்சரிக்கைனு வந்து குவியும். நான் அதுக்கு எல்லாம் பின்வாங்கல. சோலோ ட்ரிப் தான் என் சாய்ஸ். கல்யாணத்துக்குப் பிறகு, இப்போ என் கணவர் என்னோட ட்ராவல் பார்ட்னர். 2016-ல, திருச்சி டு சென்னை வரையிலும் ‘குழந்தை தொழிலாளர் ஒழிப்பு’ என்ற மெசேஜ்ஜோட சைக்ளிங் போனேன். போன வருஷம் என் அக்கா பையனோடு சேர்ந்து திருச்சி டு நேபால் மூணு மாச டிரிப் போனேன். ஹோட்டல்களைத் தவிர்த்து முழுக்க டென்ட்லதான் தங்கினோம். இதுவரை சைக்ளிங்ல சுமார் 3,500 கி.மீ போயிருக்கேன்; மணாலியில டிரெக்கிங்கும் போயிருக்கேன். பெண்களும் ஊர் சுத்தலாம்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism