பிரீமியம் ஸ்டோரி

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

முதாயத்தில் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சுய தொழில் செய்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தத் திட்டத்தில் பயன்பெற வேண்டு மெனில் அவர்கள் ஆதரவற்ற பெண் களாகவோ, விதவைகளாகவோ, கணவரால் கைவிடப்பட்ட பெண்களாகவோ இருத்தல் வேண்டும். சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களும்கூட இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். மாற்றுத்திறனாளி பெண் களும் விண்ணப்பிக்கலாம்.

பெண்களுக்கான அரசுத் திட்டங்கள் - 2

என்னென்ன தகுதிகள்?

இந்தத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. படிக்காதவர்கள்கூட விண்ணப்பிக்கலாம். ஆனால், அவரின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். அடுத்ததாக விண்ணப்பிக்கும் நபரின் வயது 20 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். மிக முக்கியமாக தைக்கத் தெரிந்திருக்க வேண்டும். (பதிவு செய்யப்பட்ட தையல் பயிற்சி நிறுவனத்தில் 6 மாத காலம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.)

தேவையான ஆவணங்கள்

ஆதரவற்றவர் எனில் அதற்கான சான்றிதழ், கைவிடப்பட்டவர் எனில் அதற்கான சான்றிதழ், விதவை எனில் அதற்கான சான்றிதழ், மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்றிதழ் தேவை. அத்துடன் விண்ணப்பதாரர் பதிவு செய்யப்பட்ட தையல் பயிற்சி நிறுவனத்தில் 6 மாத காலம் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப வருமானச் சான்றிதழ், வயதுச் சான்று அல்லது கல்விச் சான்று, சாதிச் சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்கள் தேவை.

எங்கே விண்ணப்பிப்பது?

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாது. நீங்கள் தகுதியான விண்ணப்பதாரர் எனில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சமூகநலத்துறை அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். கிராமப் பகுதியைச் சேர்ந்தவரென்றால் உங்களது வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குச் சென்று அங்கு விண்ணப்பிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு