என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

பெண்களுக்கான அரசுத் திட்டங்கள் - 4

பெண்களுக்கான அரசுத் திட்டங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்களுக்கான அரசுத் திட்டங்கள்

‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்’ மற்றும் ‘அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்!’

#Utility

ரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பது ஏழைப் பெண்களுக்கு சவாலான விஷயம். காரணம், அன்றாட உணவுத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியாத சூழலில் உள்ள அவர்கள் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள முடியாதுதான்.

கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளவில்லை எனில், தாய் சேய் இருவரின் உயிருக்கேகூட ஆபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. தாய் சேய் இறப்பு விகிதத்தைக் குறைத்து, ஏழைப் பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஊதிய இழப்பை ஈடுகட்டும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டதுதான் `டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்'.

எவ்வளவு உதவித் தொகை?

இந்தத் திட்டத்தின் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 18,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த 18,000 ரூபாயில் 14,000 ரூபாய் ஐந்து தவணைகளில் பணமாகவும் 4,000 ரூபாய்க்கான ஊட்டச்சத்து பரிசுப் பெட்டகமும் வழங்கப்படுகிறது.

எப்போது வழங்கப்படும்?

கர்ப்பமுற்று 12 வாரங்களுக்குள் கிராம/நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து `பிக்மி' எண் பெற்ற வுடன் முதல் தவணையாக 2,000 ரூபாயும், நான்காம் மாதம் நிறைவடைவதற்குள் கர்ப்பகால ரத்த பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளிலோ, ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ செய்திருந்தால் இரண்டாம் தவணையாக 2,000 ரூபாயும், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நிகழ்ந்தவுடன் மூன்றாம் தவணையாக 4,000 ரூபாயும் குழந்தைக்கு OPV/ROTA/PENTAVALENT தடுப்பூசிகள் போட்ட பிறகு, நான்காம் தவணையாக 4,000 ரூபாயும், குழந்தைக்கு ஒன்பது மாதங்கள் (270 நாள்கள் முடிந்து) தடுப்பூசி போட்ட பிறகு 2,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து பரிசுப்பெட்டகத்தைப் பொறுத்தவரையில், மூன்றாம் மாதத்தில் ஓர் ஊட்டச்சத்து பரிசுப்பெட்டகமும், நான்காம் மாதம் நிறைவடைவதற்குள் இரண்டாவது ஊட்டச்சத்து பரிசுப்பெட்டகமும் வழங்கப்படும்.

பெண்களுக்கான அரசுத் திட்டங்கள் -  4

ஊட்டச்சத்து பரிசுப் பெட்டகத்தில் என்னென்ன பொருள்கள் இருக்கும்?

கர்ப்பிணித் தாய்க்கான ஊட்டச்சத்து மாவு 1 கிலோ

இரும்புச்சத்து டானிக் 200 மில்லி

உலர் பேரிச்சம் பழம் 1 கிலோ

ஆவின் நெய் 500 கிராம்

அல்பெண்டசோல் பூச்சி மாத்திரை மூன்று

இவற்றுடன் துண்டு ஒன்றும் இருக்கும்.

திட்டத்தின் பயனைப் பெறுவதற்கான தகுதிகள் என்ன?

கர்ப்பிணித் தாய்மார்கள் 19 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேற்கண்ட ஐந்து தவணை உதவித் தொகையை இரண்டு பிரசவங்களுக்கு மட்டுமே பெற முடியும். அரசு மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய முடியும். தனியார் மருத்துவமனையில் பிரசவம் செய்துகொள்பவர்களும் (குழந்தை பிறப்பதற்கு முன்பு உள்ள இரு தவணை தொகைகள் கிடைக்கும்), கருவுற்று இருப்பதை 12 வாரங்களுக்குப் பிறகு, பதிவு செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியாது.

தேவையான சான்றுகள்!

கர்ப்பிணியின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு.

குடும்ப அட்டையின் நகல்.

ஆதார் அட்டை நகல்.

தாய் சேய் நல அட்டையின் நகல்.

வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்.

எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து கிராம/ நகர சுகாதார செவிலியர்களை அணுகி விண்ணப்பிக்கலாம். கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பம் உறுதியானவுடன் 12 வாரங்களுக்குள் கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவுசெய்து RCH எண் பெற்றுவிட வேண்டும்.

அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்

அனைத்து அரசு மருத் துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடக்கும் பிரசவத்துக்கு 1,000 ரூபாய் மதிப்புள்ள அம்மா நலப் பெட்டகம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆடை, துண்டு, படுக்கை, கொசுவலை, எண்ணெய், சோப், நக வெட்டி, விளையாட்டுப் பொருள்கள், ஷாம்பூ, கை கழுவும் திரவம், சோப், சௌபாக்ய லேகியம் ஆகிய 16 பொருள்கள் பாதுகாப்புடன் கூடிய பெட்டியில் வைத்து பிரசவித்த தாய்மார்களுக்கு மருத்துவமனைகளிலேயே வழங்கப்படுகிறது.