Published:Updated:

“பன்னுக்குள்ள கோழிய வெச்சிருக்காய்ங்க!” - பாட்டியின் ஃபுட் ரெவ்யூ

பாட்டி
பிரீமியம் ஸ்டோரி
பாட்டி

தேஜஸ்வினி. எம்

“பன்னுக்குள்ள கோழிய வெச்சிருக்காய்ங்க!” - பாட்டியின் ஃபுட் ரெவ்யூ

தேஜஸ்வினி. எம்

Published:Updated:
பாட்டி
பிரீமியம் ஸ்டோரி
பாட்டி

‘பழைய சோத்துக்கு ரெண்டு வெங்காயம் உரிச்சுக் கொடு ஆத்தா...’ என்று கேட்கும் பாட்டியை, காலேஜ் ஸ்டூடன்ட்ஸின் ஹேங் அவுட் காபி ஷாப்புக்கு அழைத்துச் சென்று ஃபுட் ரெவ்யூ செய்ய வைத்தால் எப்படியிருக்கும்?!

மதுரையில் கல்லூரிச் சாலையில் இருக்கும் ‘ஈட் அண்டு மீட்’ காபி ஷாப்புக்கு, வழக்கமாகத் தன் தோழிகளுடன் செல்லும் சுவேதாவுக்கு இம்முறை ஜோடி, அன்னத்தாய் பாட்டி.

‘‘என்ன, பத்திரிகை கொடுக்குறாக’’ என்ற படியே பாட்டி மெனுகார்டை வாங்க, சிரித்தபடியே ஒரு ஃப்ரைடு சிக்கன் பர்கர், சிக்கன் ஃப்ரைஸ், க்ரிஸ்பி சிக்கன் வ்ராப் மற்றும் புளூ குரக்கோ மொஹிடோ ஆர்டர் செய்தார் சுவேதா. அயிட்டங்கள் வந்தன.

“பன்னுக்குள்ள கோழிய வெச்சிருக்காய்ங்க!” - பாட்டியின் ஃபுட் ரெவ்யூ

‘‘பாட்டி, பர்கரை ரெண்டு கையிலயும் பிடிச்சு சாப்பிடணும்’’ என்று சுவேதா சொல்ல, ‘‘இது என்னாடியாத்தா இந்தக் கொடுமையா இருக்கு’’ என்று கூச்சத்துடன் கடித்தார் பாட்டி. முகம் கோணலாக, ‘‘பன்ன டீயில நனைச்சு திம்பாய்ங்க, கோழிய கொழம்புவெச்சு சாப்பிடுவாய்ங்க, என்ன கெரகம் இது பன்னுக் குள்ள கோழிய வெச்சிருக்காய்ங்க!” - ஃபெயில் மார்க் வாங்கியது பர்கர்.

பாட்டி, ‘‘பூச்சியிருக்கு பாரு புள்ள...’’ என்றதும் கவுன்டரில் கம்ப்ளெயின்ட் செய்ய எழுந்த சுவேதா பிறகுதான் கவனித்தார், பாட்டி பூச்சி என்றது வ்ராப்புக்கு மேல் இருந்த மஸ்டர்ட் சாஸை என்று. ‘‘அது சாஸ் பாட்டி’’ என்று விளக்க, அதைச் சாப்பிட்ட பாட்டியின் கமென்ட்... ‘‘ஒண்ணு காரமா இருக்கணும், இல்ல இனிக்கணும்... இது ரெண்டுங்கெட்டானா இனுமினுத்துக் கெடக்கு... இதச் சாப்புட்டு என் நாக்கே சவசவத்துப்போச்சே!”

“பன்னுக்குள்ள கோழிய வெச்சிருக்காய்ங்க!” - பாட்டியின் ஃபுட் ரெவ்யூ

அடுத்ததாக சிக்கன் ஃப்ரைஸை நீட்டிய சுவேதா, ‘‘இதை கெட்ச் அப்ல தொட்டு சாப்பிடணும் பாட்டி’’ என்று சொல்ல, ‘‘அட ஆமா... இதத்தேன் என் பேத்தி தொட்டுச் சாப்பிடும்...’’ என்றபடி சாப்பிட்டுப் பார்த்தார். ‘‘நல்லாத்தேன் இருக்கு... ஆனா, கறிக்குத் தக்காளி ஊறுகா தொட்டுச் சாப்பிடுறது காலக்கொடும சாமி’’ என்றார் அலுத்தபடி.

மொஹிடோவைப் பார்த்த பாட்டி, ‘‘இது ஏன் ஊதாக் கலருல இருக்கு?’’ என்றார் சுவேதாவிடம். ‘‘இந்தக் கேள்வியை இதுவரை நான் யோசிச்சதில்லையே பாட்டி...’’ என்று அவர் சொல்ல, ‘`வாயில நொழை யாத பேரை வெச்சு வித்துட்டா, வவுத்துக்குள்ள போறது என்னன்னே தெரியாம சாப்புட்டுக்கிட்டு இருக்கீய...’’ - பாட்டி சொல்லை மறுக்க முடியவில்லை.

`‘சரி எம்புட்டு ஆச்சு...’’ என்று கேட்ட பாட்டிக்கு சுவேதா பதில் சொல்ல,

‘`ஏயாத்தே... நானு அரமாச மளிக வாங்கிப் போட்டி ருப்பேனே... காசப்போட்டு வாங்குனத வீணாக்காதீய புள்ளைகளா...’’ என்றபடி மொஹிடோவை பாட்டம்சிப் அடித்தார் பாட்டி!