Published:Updated:

பிரபஞ்சப் பேரழகி!

ஹர்னாஸ் சந்து
பிரீமியம் ஸ்டோரி
News
ஹர்னாஸ் சந்து

தேசப் பண்பாட்டு உடைகள், ஸ்விம்சூட்டுகள், அலங்கார ஆடைகள் என உடல் சார்ந்து போட்டிகள் நடப்பதுதான் இதில் சர்ச்சையாகப் பார்க்கப் படுபவை.

21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரபஞ்ச அழகி பட்டத்தை இந்தியாவுக்குப் பரிசளித்துப் பெருமை தேடித் தந்திருக்கிறார் ஹர்னாஸ் சந்து. சர்வதேச அளவில், நான்கு அழகிப் போட்டிகள் பிரபலமானவை. அவற்றுள் பிரபஞ்ச அழகியும், உலக அழகியும் தான் பழைமையானவை. 94-ல் சுஷ்மிதா சென்னும், 2000-ல் லாரா தத்தாவுமே இதுவரையில் இந்தியா சார்பில் பிரபஞ்சப் போட்டிகளில் வென்றவர்கள்.

பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் ஹர்னாஸுக்கு அழகிப் போட்டிகள் என்பது பல ஆண்டுக் கனவு. புவி வெப்ப மயமாதல், மாறி வரும் வானிலை போன்றவற்றைப் பேசி மிஸ் தீவா 2021 பட்டத்தை ஹர்னாஸ் வென்றபோது, பலரின் புருவங்கள் உயர்ந்தன. வெறுமனே எமோஷனலாகப் பேசுவதைக் கடந்து, ஹர்னாஸிடம் பல்வேறு சமூக விஷயங்களில் தீர்க்கமான பார்வை இருந்தது. சில பஞ்சாபி படங்களில் ஹர்னாஸ் நடித்திருந்தாலும், அவை எதுவும் இன்னமும் வெளியாகவில்லை.

பிரபஞ்சப் பேரழகி!
பிரபஞ்சப் பேரழகி!

தேசப் பண்பாட்டு உடைகள், ஸ்விம்சூட்டுகள், அலங்கார ஆடைகள் என உடல் சார்ந்து போட்டிகள் நடப்பதுதான் இதில் சர்ச்சையாகப் பார்க்கப் படுபவை. வெறுமனே இவை அழகிப் போட்டிகள் இல்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்தப் போட்டிகளில் சில கேள்விகள் கேட்கப்படும். அப்படி “இளம் பெண்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட உங்களின் அறிவுரை என்ன?” என்று ஹர்னாஸ் சந்துவிடம் கேட்கப்பட்டபோது. “பிறருடன் உங்களை ஒப்பிடுவதை நிறுத்துங்கள். நீங்கள் தனித்தன்மை கொண்டவர் என்பதை உணரும்போதே நீங்கள் அழகாகிவிடுகிறீர்கள். நான் என்னை நம்பியதால்தான் இங்கு நிற்கு முடிகிறது” என பதிலளித்திருக்கிறார்.

பிரபஞ்சப் பேரழகி!

“எல்லாவிதமான ஆணாதிக் கங்களையும் கடந்து என் தாயார் ஒரு தேர்ந்த மகப்பேறு மருத்துவராக இருந்து, எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். எனக்கான ரோல்மாடல் அவர்தான்” என்ற ஹர்னாஸின் பதிலும் முக்கியமானது.